என் மேகம் ???

Monday, August 25, 2008

குழலினிது யாழினிது ...

என் குட்டிப் பெண்ணைப் பேச வைத்து மழலையில் திளைத்துக் கொண்டிருந்தோம்.
"குட்டிம்மா உருளைக்கிழங்கு சொல்லு"
"உருங்கை கிலங்கு"
"கர்சீப் சொல்லுங்க.."
"கப்பீச்சு"
"யாருக்கு கோயில்ல கொண்டை கடலை மாலை போடுவீங்க?"
"குதுவுக்கு" (குருவுக்கு...)
அவள் கூறுவதை சிரித்து ரசித்துக் கொண்டிருந்தோம். (அம்மா அவளை குதிரை சொல்லச் சொல்லும்மா (குதிதை என்பாள்) என்று என் பெரிய பெண் என் காதில் ஓத...)
"குதிரை சொல்லுடா கண்ணா..."
"ஹார்ஸ்..". இப்பொழுது அவள் சிரித்தாள்.

எங்கு கற்றாய் இந்த சாமர்த்தியத்தை?

***********************************************************************************
சமைக்க போரடித்தது என்று, என் இரண்டு சுட்டிகளையும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஓட்டலுக்கு வர விருப்பமில்லை. நான் ஏதேதோ சொல்லி சமாளித்து அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் சாப்பிட்டு பழரசம் அருந்திக் கொண்டிருந்த பொழுது என் சின்ன வாண்டு "அம்மா , நீ ரொம்ப அழகா ஜுஸ் குடிக்கிற..." என்றது. திடீரென்று என்ன கரிசனம் என்று பார்த்தேன். "அதே மாதிரி நீ ரொம்ப அழகா சமைப்ப... அதனால இனிமேல் நீ வீட்லயே சமைச்சுடு...ஓட்டலுக்கு வர வேண்டாம்.."

எங்கு கற்றாய் இந்த வாய்ஜாலத்தை...

************************************************************************************

நானும் என் சுட்டி பெண்ணும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தோம். திடீரென்று அவள் "அய்யோ அம்மா அவர் போறார்மா... சைக்கிள்ல போறார்மா... " என்று உற்சாகமாக, யாருடி என்று நானும் தேடினேன். "அவர் தான்மா... தாடி வச்சிருப்பாரே... அகர முதல எழுதினாரே..."

************************************************************************************
அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவளைக் கண்டு எல்லோரும் என் இடத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் பொறுத்திருந்து பின் கேட்டாள், "ஏம்மா ஆபீஸ்ல பேசிட்டு தான் இருப்பீங்களா? வேலை பார்க்க மாட்டீங்களா?"அடுத்த நிமிடம் எல்லோரும் அவரவர் இடத்தில்...

************************************************************************************
என் மேலாளர் என்னிடம் சில விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்ர் சென்ற பின்.."அம்மா நீ மேனேஜரா அவங்க மேனேஜரா?""ஏன்டா செல்லம் அவங்க தான் மேனேஜர்""இல்ல, அவங்க மேனேஜர்னா, எல்லாம் தெரியணும் இல்ல? ஏன் உன்கிட்ட கேக்கறாங்க?
*************************************************************************************

2 comments:

Anonymous said...

அருமையான போஸ்ட்...
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி - என்பார்களே.. அது இது தானா?

MSK / Saravana said...

//அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவளைக் கண்டு எல்லோரும் என் இடத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் பொறுத்திருந்து பின் கேட்டாள், "ஏம்மா ஆபீஸ்ல பேசிட்டு தான் இருப்பீங்களா? வேலை பார்க்க மாட்டீங்களா?"அடுத்த நிமிடம் எல்லோரும் அவரவர் இடத்தில்...//

ஹி.. ஹி.. ஹி..