சில பள்ளிகளில் பிள்ளைகளின் திறன் வளர்க்க அவர்கள் பள்ளியில் கடைபிடிக்கப் படும் சில முறைகள் மிகவும் இனிமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன..
உதாரணத்திற்கு, Spoken English-ல் திறம் பெற, அவர்கள் கூறுவது "உனக்கு பிடித்த பொம்மையை எடுது வந்து அது பற்றி பேசு". அவ்வளவு தான், குட்டீஸ் எல்லாம், இது தான் தங்கள் பொம்மையைத் தோழர்/தோழி-களுக்கு காட்டும் சந்தர்ப்பம் என்று, தங்களுக்குப் பிடித்த பொம்மையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆர்வத்துடன் பேசக் கற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் பெரிய க்ளாஸ் என்றால் "இரண்டு கண், இரண்டு காது இருக்கிறது.." என்று மட்டுமே சொல்லக்கூடாது என்று அறிவுற்த்தப்படுவதால், சற்று கூடுதல் விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். சாதாரணமாக இதைப் பற்றி பேசு, அதைப் பற்றி பேசு என்று கூறுவதை விட, இம்முறை குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
இதைப் போல் பொஙகலுக்கு, சின்ன சின்ன மாதிரிகள்... வீடு, மாடு, பொங்கல் பானை என்று செய்ததோடு, சந்தை போல் அமைத்து, குழந்தைகள் விருப்பப்பட்டதை வாங்க வளையல் கடை, பொட்டு கடை , சிறு விளையாட்டு சாமன்கள் கடை என்று அமைத்ததோடு, பொங்கலும் கரும்பும் சாப்பிட்டுள்ளனர். பட்டணத்தில் பொங்கல் கொண்டட்டத்தைப் பிள்ளைகளுக்கு இப்படி தானே காட்ட முடியும்?
இன்னொரு பள்ளியில், ஆசிரியர்கள் காய்கறி, விளையாட்டு சாமான், தின்பொருள் என்று சிறு, சிறு கடைகள் அமைக்கிறார்கள். குழ்ந்தைகளிடம் பில் தரப்படுகிறது. அவர்கள் தமக்கு விருப்பமானதை வாங்கிக் கொண்டு, அதன் விலையை அறிந்து பில்லில் எழுத வேண்டும். எல்லாம் வாங்கிய பின், பணம் செலுத்தும் இடத்தில், மொத்த பணத்தை செலுத்தி பாக்கியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவு செலவு கணக்கு வைப்பதற்கு யதார்த்தமான பாடம்.
இன்னொரு பள்ளியில், குழ்ந்தைகளிடம் ஒரு வீட்டின் முகவரி தரப் படுகிறது. அவர்கள் பள்ளி பேருந்தில் ஏறிக் கொண்டு, அம்முகவரி உள்ள இடத்தை வழியில் விசாரித்து, ஓட்டுநரிடம் எப்படி செல்ல வேண்டும் என்று வழிநடத்துகின்றனர். அவர்கள் செல்லும் வீடு, முடிவில் ஓர் ஆசிரியையின் வீடாக இருக்கும். அங்கு பழரசம் அருந்தி வெற்றிகரமாகத் தங்கள் வேலை முடிந்த திருப்தியுடன் பள்ளி செல்கின்றனர்.
2 comments:
I completely agree.. நம் காலத்தில் இருந்த "மனப்பாடக் கல்வி" இன்று அவ்வளவாக இல்லை என்பதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. அதே நேரத்தில் இவை எல்லாம் மேல் தட்டு மக்கள் பள்ளிகளில் மட்டும் செய்யப்படுவது சிறிது வருத்தமளிக்கிறது.. போகப்போக மாறிவிடும் என்று நம்புவோம்..
இத்தகைய புதிய வழிமுறைகள் கற்றலின் சுமையை களிப்பாக மாற்றும். பொங்கல், சந்தை மற்றும் முகவரி தேடுதல் எல்லாமே நல்ல முயற்சிகள். பதிவுக்கு நன்றி. ஒரு ஆலோசனையாக பிற பள்ளிகளில் அறிமுகப்படுத்தச் சொல்லலாம்.
அனுஜன்யா
Post a Comment