என் வானம் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இதோ ஒரு வருடம் முடியப்போகிறது நட்சத்திரங்கள் ஏதுமின்றி.... எனவே இறைந்து கிடந்த பதிவுகள் ... கதம்பமாக ...
மிச்சங்கள்
==========-==
புல்வெளியின் பிரிவில்
பனித்துளியின் மிச்சங்கள்
கடற்கரையின் பிரிவில்
மணற்துகளின் மிச்சங்கள்
நட்பின் பிரிவில்
நினைவுகளின் மிச்சங்கள்
உறவின் பிரிவில்
வலியின் மிச்சங்கள்
தேடல்
=======
கனவொன்றில் தொலைந்து...
நனவொன்றில் மீண்டேன்
கையில் வைத்துக்கொண்டே...
தேடிக் கொண்டிருந்தார்கள்
மழலை
=========
பூவொன்று மலர்ந்தது...
மழலைப் புன்னகை
பூவொன்று அரும்பானது...
மழலை தூக்கம்