என் மேகம் ???

Thursday, August 18, 2011

காலம்

வீதியெங்கும் பூத்திருக்கிறது
காலம்...

காலம் காலமாக இருக்கும்
கல்லும் மண்ணுமாக...

பல காலமாக இருக்கும்
நிழல் தரும் மரங்களாக...

சில காலமாக இருக்கும்
சிறிய பெரிய வீடுகளாக...

சமீபத்தில் தோன்றி
பூத்துக் குலுங்கும் செடிகளாக...

கணம் கணமாகக்
கடந்து செல்கிறேன்

உறையப் போகும்
கணம் நோக்கி...

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கணம் கணமாக கடக்கும்போது இத்தனையும் ரசித்துவிட்டு உறைந்தால் தான் என்ன? ரசிக்க நேரமிருக்கே உங்களுக்கு..:))

ராமலக்ஷ்மி said...

கவிதையையும் ரசித்தேன். முத்துலெட்சுமியின் கருத்தையும் ரசித்தேன்:)!