என் மேகம் ???

Sunday, January 2, 2011

கூர்க்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கிருஸ்துமஸ் & புத்தாண்டை ஒட்டி ”ஆணியே பிடுங்க வேண்டாம்” என்று ஆபீசில் ஒரு வாரம் லீவு. எனவே “கூர்க்” பயணம். இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம். சில நாட்களுக்கு முன் தான் ட்ரெயின்கள் கரெக்டான நேரத்திற்கு சென்றுவிடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அதனாலோ என்னவோ 10 மணிக்கு மைசூர் செல்ல வேண்டியது 2 மணிக்கு எங்களை மைசூரில் இறக்கி விட்டது. அங்கிருந்து டவேராவில் கூர்க்கை நோக்கித் தொடங்கியது பயணம். குளிர் எல்லாம் இல்லை. வழி முழுக்க விதவிதமான பயிர்களைக் காண முடிந்தது. முதலில் குவியலாக அவரை, இஞ்சி பார்த்தோம். பின்னர் யூக்கலிப்டஸ், வாழை, பாக்கு. காபி & மிளகு என்று மாறி மாறிக் காண முடிந்தது. ஆங்காங்கே காய்ந்த மூங்கில்கள் வளைந்து காணப்பட்டன. யானை வளைத்ததாம். 25-30 வருடங்கள் ஆனால் மூங்கிலில் அரிசி வந்து காய்ந்து விடும் என்றார் டிரைவ்ர்.


தேயிலை மலர்

மிளகு

காபி பழங்கள்


பாக்கு


தேயிலை தோட்டம்

முடிவாக தேயிலைத் தோட்டம். அங்கு தான் எங்கள் தங்குவதற்கான இடம் இருந்தது.
மிக அழகான வியூ. காற்றாடி இன்றி படுத்தாலும் நடு இரவில் கொஞ்சம் வியர்ப்பது போல் இருந்தது. அதிகாலை இலேசான குளிர் இருந்தது. சைக்கிள் ஓட்டாமலே எங்களை கீழே இழுத்துச் சென்றது. எவ்வளவு மிதித்தாலும் மேலேறுவது மிகக் கஷ்டமாக இருந்தது.

இயற்கையின் வலைதளம்



முதல் நாள் “இர்ப்பு அருவி” சென்றோம். சில்லென்று அருவி கொட்டியது. ”மலபார் பீக்காக்” என்ற பட்டாம் பூச்சி இங்கு காணப்படுகிறது. சோவென்று கொட்டும் அருவிமுன் தொட்டு தொட்டு விளையாடிய பட்டுப்பூச்சிகள் கொள்ளை அழகு.

இர்ப்பு அருவி


மலபார் பீக்காக்



அதன் பின் நாங்கள் சென்றது நாகர்ஹோல் சரணாலயம். போகும் வழியில் மான்கள் காண முடிந்தது. 2:30 முதல் சபாரி தொடங்குகிறது. மாலை 5 மணி வரை மணிக்கொருமுறை இருக்குமாம். 30 பேர் செல்லக்கூடிய வேனில் கேமிராவுடன் ஏறினோம். மான்கள் நிறைய கூட்டமாகக் காண முடிந்தது. எல்லோரும் புலிக்காக ஆவலாக இருக்க, எங்கள் கண்ணில் பட்டவை மான்கள், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானை ஒன்று.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க









நான் யாருனு தெரியுதா?



நாங்க தனியாவும் வருவோம்ல...



கூர்கைச் சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றன. எனவே, சரணாலயத்துடன் அன்று சுற்றல் முடிந்தது. மறு நாள் மட்டுமே இருந்தது. எனவே, தலைக்காவிரியை விட்டுவிட்டு (கிட்டதட்ட 200 கி.மீ என்றார்கள்) , “துபாரே” யானைகள் முகாம் சென்றோம். வழியில் காபித்தோட்டங்களை யானையிடம் இருந்து காக்க மின்வேலிகள் அமைத்திருப்பதைக் காண முடிந்தது. முகாம் 9:30க்கு தொடங்கி 12:00க்கு முடிந்து விடுமாம். யானைகள் குளிப்பது உண்பது எல்லாம் காணலாம். நாங்கள்: சென்றபொழுது 12:30. எனவே யானைகள் இல்லை; காவிரியில் “ராப்டிங்” என்று படகு பயணம் மட்டுமே செல்ல முடிந்தது. வெள்ள நேரங்களில் “வைட் வாட்டர் ராப்டிங்” இருக்குமாம். ஏழு கி,மீ வரை, காவிரியின் வெள்ளத்தில் ஜிவ்வென்று படகு பயணம் செய்யலாம். ஜீப்பில் தான் திரும்ப வேண்டுமாம்.


அடுத்து மைசூர் நோக்கி பயணம். வழியில் கூர்க் மக்கள் வெள்ளாடையுடன் செல்வதைக் கண்டோம். துக்கம் நேர்ந்தால் அவர்கள் உடுத்துவது வெள்ளுடையாம். மைசூர் செல்லும் வழியில் அடுத்து சென்றது திபத்தியன் மொனாஸ்ட்ரி என்ற புத்தர் கோயில். இது தான் முதல் முறையாக ஒரு புத்த கோவிலைக் காண்கிறேன். பிரும்மாண்டமாக சிலைகள். அழகான சூழ்நிலை. சுவரின் ஓவியங்களும் அழகு. சில ஓவியங்கள் காளியை நினைவுறுத்தின.

புத்த விகாரம்










மகளுக்கு தான் படித்ததை நேரில் கண்ட திருப்தி. காவேரி எக்ஸ்பிரசைப் பிடித்து புத்தாண்டை வரவேற்க சென்னை வந்தடைந்தோம்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களையும் ரசித்துப் பார்த்தேன். எல்லாமே அருமை. தேயிலை தோட்டம் பெரிது படுத்தி பார்த்தால் பச்சை பசேலெனக் குளுமை.

எல்லோரும் வச்சுக்கறாங்களேன்னு இயற்கையும் வலைதளம் ஆரம்பிச்சுட்டு பாருங்களேன்:))!

பகிர்வுக்கு நன்றி அமுதா.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அமுதா கிருஷ்ணா said...

அமுதாவிற்கு அமுதாவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அமுதா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் & அமுதா

pudugaithendral said...

thanithani pathiva potirukalame.. ippadi sattunnu mudichitteenga.

arumaiyana pagirvu

Chitra said...

Lovely photos! Super!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

// இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம் //

நீங்க சாத்தூரில் பிறந்தவரா... நானும் அந்த ஊரில் தான் பிறந்தேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான பயணம்..
நானும் செல்ல ஆசைப்படும் இடம்.
இயற்கையின் வலை தளம் :)

ஆயிஷா said...

இயற்கையின் பதிவு.அருமை.


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!