என் மேகம் ???

Wednesday, December 22, 2010

துரத்தும் கனவுகள்

யானையும் பாம்பும்
இனம்புரியா உணர்வுகளும்
துரத்தும் கனவுகளில்
அலுப்பு கொண்டு...
புது கனவுகளைத்
துரத்திச் சென்றேன்


வயிற்றுப்பாடே கனவென்ற
அவலநிலைக் கனவுகளும்
சொகுசுகள் மட்டும்
மலைப்பாம்பாய் சுற்றிய
சைக்கோ கனவுகளும்
வன்முறையும் கொடூரமும்...

துரத்தத் தொடங்க...

சிறுவர் கனவினுள்
அடைக்கலம் புகுந்தேன்
சாக்லேட்டும் தேவதைகளும்
பனிப்பொழிபவும் மலர்களும்
பேசும் விலங்குகளும்
இரசிக்கத் தொடங்கையில்

என் வருகையால்...
எங்கிருந்தோ வந்தன
பேய்களும் பிசாசுகளும்
திக்கற்ற காடும்
வெற்று வீடுகளும்

பதறிச் சென்று
குழந்தையின் கனவில்
நுழைந்திட முயன்றேன்
புன்னகை கவராது
கனவுக்குள் வ்ழியில்லை
கனவுள் செல்லவில்லை

என்ன கனவோ?
குழந்தை சிரித்தது
குழந்தைச் சிரிப்பை
கனவாகக் கொண்டுவந்தேன்
புன்னகையுடன் விழித்தேன்

3 comments:

ராமலக்ஷ்மி said...

கனவுக் கவிதை அருமை அமுதா.

//குழந்தையின் கனவில்
நுழைந்திட முயன்றேன்
புன்னகை கவராது
கனவுக்குள் வ்ழியில்லை
கனவுள் செல்லவில்லை

என்ன கனவோ?
குழந்தை சிரித்தது
குழந்தைச் சிரிப்பை
கனவாகக் கொண்டுவந்தேன்
புன்னகையுடன் விழித்தேன்//

ரசித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. நமக்கு அந்த குழந்தைக்கனவில் என்னவருமென்று தெரியாததே..:)

புன்னகைகவராமல் உள்ள நுழைய முயற்சிச்சிச்சிங்களே குட் கேர்ள்..

Unknown said...

நல்ல வரிகள்... இரசித்தேன்.