என் மேகம் ???

Saturday, December 4, 2010

கேள்விகள்

பிறப்பு
இறப்பு
இரு வரிகளிடை
விரிந்து கிடக்கிறதா?
சுருங்கிக் கிடக்கிறதா?
வாழ்க்கை...

--------------

கைநிறைய
வாழ்க்கை கொடுத்து
விரலிடுக்கில்
கசிய விட்டான்...
கையில் இருப்பதை
ருசிக்கவா?
கசிவதைக் கண்டு
கலங்கவா?

------------

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் விரிந்து சுருங்கும் இதயம் போல.. மாறி மாறி உணர்சிகளால் நம்மை லப்டப் ஆக்குது...

http://gunathamizh.blogspot.com/ said...

அருமை!!

ராமலக்ஷ்மி said...

அற்புதமாக வரிகள்..!
கஷ்டமான கேள்விகள்..!

நல்ல கவிதைகளுக்கு நன்றி அமுதா.

அடிக்கடி எழுதுங்கள்.

எஸ்.கே said...

அருமை! அருமை!

சந்தனமுல்லை said...

why why...Amudha?

திகழ் said...

அருமை

/ராமலக்ஷ்மி said...
அற்புதமாக வரிகள்..!
கஷ்டமான கேள்விகள்..!

நல்ல கவிதைகளுக்கு நன்றி அமுதா.

அடிக்கடி எழுதுங்கள்/


அதே

Chitra said...

ராமலக்ஷ்மி said...

அற்புதமாக வரிகள்..!
கஷ்டமான கேள்விகள்..!

நல்ல கவிதைகளுக்கு நன்றி அமுதா.

அடிக்கடி எழுதுங்கள்.


....REPEATTU!

philosophy prabhakaran said...

நல்ல கவிதை... ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

அமுதா said...

நன்றி முத்துலெட்சுமி, குணா, ராமலஷ்மி மேடம், எஸ்.கே, முல்லை, திகழ், சித்ரா, பிரபாகரன்

/*philosophy prabhakaran said...
நல்ல கவிதை... ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...
*/
போன இடுகையிலும் இதே கேள்வி கேட்டிருந்தீங்க நன்றி. கிடைக்கும் இடைவெளியில் எழுதி தமிழ்மணத்தில் சப்மிட் பண்ணி ஓடிடுவேன்... அதானால் வேற எதிலேயும் போடத் தோன்றாது. உங்கள் கேள்விக்காக இன்று இண்ட்லியில் போடுகிறேன் :-)