என் மேகம் ???

Wednesday, December 8, 2010

காயங்கள்

அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

9 comments:

Chitra said...

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...


......சரியான செயல் - மிகவும் கடினமானதும் கூட. அருமையான கவிதைங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good.

சந்தனமுல்லை said...

Juz wonderful, Amudha!

பூங்குழலி said...

வெட்டிச் சென்றன
சொற்கள்

அழகு

ராமலக்ஷ்மி said...

//நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...//

வாவ்!

கவிதை மிக அருமை வழமை போலவே.

தமிழ் அமுதன் said...

மனதில் நிற்கும் வரிகள்...!

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குங்க

தமிழ் said...

/அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

/

ந‌ச்

ராமலக்ஷ்மி said...

உங்கள் வானின் இந்த நட்சத்திரம் இன்றைய வலைச்சரம் முத்துச்சரம் இரண்டின் தலைப்பாகவும். நன்றியும் வாழ்த்துக்களும் அமுதா:)!