என் மேகம் ???

Wednesday, July 14, 2010

என்னத்த சொல்ல?

குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். “அம்மா காலண்டர்-ல தேதி தீர்ந்துட்டால் உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்” என்று ஒரே அழுகை. வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய் என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம் ... திடீரென சற்றே யோசித்து, “செத்து போனால் மேலேயா போவோம்” என்றாள். “ஆமாம்” என்றேன். “அங்கே டி.வி இருக்குமா?” என்றாள். “ம்” என்றேன். ”அப்ப சரி ” என்று சென்றுவிட்டாள். ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?


“அம்மா காலிஃப்ளவர் ஃப்ரை பண்ணிக் கொடும்மா... ரொம்ப நாள் ஆச்சு” என்றாள்.
“சரியா வர மாட்டேங்குது கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றேன்
“முயற்சி செய் அம்மா, உனக்கு நல்லா வரும்” என்றாள் (சுட்டி டி.வி டோரா எபக்ட்)
“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?

11 comments:

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அட சிரிச்சு மாளலை எனக்கு .. :)

தமிழ் அமுதன் said...

//“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல? //

;;)))))))

ராமலக்ஷ்மி said...

//‘என்னத்த சொல்ல?’//

எங்களிடம் சொல்லாம மட்டும் இருந்திடாதீங்க, ஆமா:))!

பின்னோக்கி said...

:)).
டிவியில்லாம குட்டீஸ்களால் இருக்க முடியவில்லை

Ungalranga said...

எனக்கு அந்த காலிஃப்ளவர் மேட்டர் ரொம்ப பிடிச்சி இருக்கு..!!

அதும் டோரா ஸ்டைலில் சொன்னதை ரொம்ப லைக் பண்றேன்..!!

என்னத்த சொன்னாலும்..உடனே இங்க சொல்லிடுங்க..!!

ஷீ ஈஸ் ஸோ ஸ்வீட்..!! எஞ்சாய் பண்ணுங்க!!

சந்தனமுல்லை said...

:))

சென்ஷி said...

:)))))

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் அம்மா, சூப்பர் பொண்ணு:) சிரிச்சு சிரிச்சு முடியலைப்பா.

Joe said...

டிவி இருந்தா போதும், சொர்க்கம், நரகம் எதுவும் பிரச்சினை கிடையாது குழந்தைகளுக்கு.

//“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல? //

நீங்க தெளிவா சொல்லாம குழந்தைய குத்தம் சொல்லக் கூடாது ;-)

Dhiyana said...

:-)))

சூப்பர் அமுதா.. இந்த குட்டீஸ் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம்..