என் மேகம் ???

Thursday, July 8, 2010

மனம்

மனம் ஒரு குளம்
கலங்கித் தெளிந்தது
கல்பட்டு குளம்
கல்லெறிந்தவன் அறியவில்லை...
பதறி நிற்பவை
மீன்களும் பறவைகளும்

மனம் ஒரு மாயை
நேர்மனதிற்கு
கோணல்கள் தெரிவதில்லை
கோணல் மனதிற்கு
நேர்மனதும் கோணல் தான்

மனம் ஒரு கண்ணாடி
தன்னை மட்டும்
கண்டு கொண்டிருந்தால்
மற்றவர் மனம்
பார்ப்பதில்லை

5 comments:

அம்பிகா said...

\\கலங்கித் தெளிந்தது
கல்பட்டு குளம்
கல்லெறிந்தவன் அறியவில்லை...
பதறி நிற்பவை
மீன்களும் பறவைகளும்\\
அருமையான வரிகள்.
நல்லாயிருக்கு அமுதா.

ராமலக்ஷ்மி said...

மூன்று பத்திகளும் அற்புதம்.

//மனம் ஒரு கண்ணாடி
தன்னை மட்டும்
கண்டு கொண்டிருந்தால்
மற்றவர் மனம்
பார்ப்பதில்லை//

உண்மை. மிக அருமையும்.

பின்னோக்கி said...

அருமை.

தமிழ் said...

/கலங்கித் தெளிந்தது
கல்பட்டு குளம்
கல்லெறிந்தவன் அறியவில்லை...
பதறி நிற்பவை
மீன்களும் பறவைகளும்
/

அருமை

அம்பிகா said...

அமுதா,
உங்களுக்கு ஒரு விருது தந்துள்ளேன்.
அன்பும், வாழ்த்துக்களும்.