என் மேகம் ???

Monday, April 19, 2010

குழந்தை மனமும் பெரிய மனமும்

அன்று குட்டிப்பெண் காலையிலேயே மூட் அவுட். பின்னே? அவளது பிரிய தலையணை உறை எங்களால் தூக்கி எறியப்பட்டது. டிவி பார்க்கும் பொழுது, உணவு உண்ணும் பொழுது, படுக்கும் பொழுது, விளையாட்டுக்கு இடையில் என்று அந்த தலையணை உறை அணிவிக்கப்பட்ட தலையணை அவளுடன் தான் உறைந்து இருக்கும்.

அது படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல... வீடு முழுதும் இழுக்கப்பட்டு அழுக்காகும்... திடீர் என நாங்கள் கவனித்து துவைத்து காயப்போட்டால், அது காய்ந்து வரும் வரை இவள் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை. எவ்வளவு துவைத்தாலும் அழுக்காகத் தெரிகிறது என்ற பின் தான் தூக்கி போட முடிவு செய்தோம். அவளுக்கு தெரியாமல் செய்வதாக செய்தாலும், அவளுக்கு தெரிந்துவிட்டது. அது தான் காலை நேரத் தலையாயப் பிரச்னை....

ம்... நான் கூட சிறு வயதில் அம்மா தூக்கிப் போட்ட எனது ஆரஞ்சு பாவாடை சட்டை நினைத்து நிறைய இரகளை பண்ணி இருக்கிறேன். அது இப்பொழுதும் என்னுள் ஒரு ஏக்கப் பெருமூச்சைக் கொண்டு வரும். இன்று நான் கவனித்துப் பார்த்தால்... இதே போல் தான் மோகிக்கு மெல்லிய துணி, நிவிக்கு மிக்கி மவுஸ் போர்வை, அபிக்கு நூல்கள் தொங்கும் துணி என்று ஏதேனும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது.

வேறு விஷயங்கள் நுழைய நுழைய இந்த குழந்தைத்தனமான ஈர்ப்புகள் மறைகின்றனவா?.... இல்லை யோசித்துப் பார்த்தால்... தீங்கில்லா சில குழந்தைதனங்கள் என்று மறையும் என்றெண்ணியபடி கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்...

9 comments:

ஆயில்யன் said...

//கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்..//

தெரிந்துக்கொண்டால் அதை பற்றிக்கொண்டு அலைவோமா என்று தெரியவில்லை! தெரியாததால் அதை பற்றிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறோம்! தெரிந்திருந்தால் கவலை வேண்டாம் சில காலங்களிலேயே தெரியாமல் போய்விடும் - மேல் சொன்ன அழுக்குகள்!

PPattian said...

Cute :)

தமிழ் அமுதன் said...

எங்க சின்ன பொண்ணு எப்போதும் ஒரு பச்சை கலர் டவளை (துண்டு) கைலயே வைச்சுகிட்டு இருக்கு ..! அதுக்காகவே அந்த டவளை பத்திரமா வைச்சு இருக்கோம்..!
நீங்க அந்த தலையணை உறை யை தூக்கி போட்டு இருக்க கூடாது.! அதுக்காக எங்க கண்டனங்கள்..!

நட்புடன் ஜமால் said...

அழுக்குகளை அவை அழுக்கென்று தெரிந்தும் சுமந்து கொண்டிருக்கிறோம்.

அமுதா கிருஷ்ணா said...

கரெக்டா சொல்லி இருக்கீங்க..

ராமலக்ஷ்மி said...

ஜீவன் சொன்னது போல அதைப் போட்டிருக்கக் கூடாது. என் தம்பிக்கு அம்மாவின் ஒரு சேலை. மடித்து வைக்கவே கூடாது. சுருட்டினால் போல இருக்கணும். துவைத்து அதே போல சுருட்டி வைப்போம்:)!

முடிவாய் சொன்னது சரியே.

ஹுஸைனம்மா said...

அதே மாதிரி வேற ஒண்ணு வாங்கிட்டு அப்புறம் போட்டிருக்கலாம்!! பாவம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்... //

தெரிந்தே பலசமயங்களில் இது போன்ற பாவ மூட்டைகளை சுமக்க நேரிடுகிறது :(

தலையணை உறையில் ஹுஷைனம்மாவின் கருத்துதான் என்னுடையதும். அதே மாதிரி ஒன்னு வாங்கிக்கொடுத்துடுங்க ப்ளீஸ். :)

பின்னோக்கி said...

பாவம் .. புதுசு வாங்கிக் கொடுத்திடுங்க