என் மேகம் ???

Monday, January 4, 2010

வந்தாச்சு புதுவருஷம் புத்தகங்களுடன்...

ஒரு வழியாக 2009க்கு விடை கொடுத்து அனுப்பிட்டு 2010க்குள் நுழைந்தாயிற்று. புத்தகலிஸ்டை கடைசி நேரம் வரை ஒத்தி போட்டதில் அப்படி ஒண்ணு இல்லாமலே தான் புத்தக கண்காட்சிக்கு கிளம்பினோம். (கண்டிப்பா புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்று குட்டிப்பெண்கள் மாலை முதல் போட்டிருந்த சின்ன ஆடல்/பாடல் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் மாமாவோடு சேர்ந்து உறியடியை கொஞ்சம் மாற்றி பொம்மை தொங்கவிட்டு கண்கள் கட்டி பிடிக்க வைத்த விளையாட்டு, பின் டம்ப்ஷராட்ஸ் விளையாட்டு என்று பன்னிரெண்டு மணிக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லும் வரை மழலைகளோடு நேரம் ஓடிவிட்டது)

குட்டீஸ் எல்லாம் பாட்டி வீட்டில் விட்டு விட்டு (இல்லைனா ஒரு ஸ்டாலுக்கு மேல பார்க்க முடியாது... நிறைய புக்ஸ் வேணும் என்ற கண்டிஷனை ஏற்றுக்கொண்டோம்), கரெக்டா ஒரு மணிக்கு கண்காட்சி இடத்துக்கு நுழைஞ்சோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வயிற்றுக்கு தந்துவிட்டு தெம்போடு கண்காட்சிக்குள்ளே நுழைஞ்சோம். வாசல்ல கிடைச்ச பதிப்பகம் பற்றிய கையேடும் , என்.ஹச்.எம்-மின் வரைபடமும் ஸ்டால்களைக் கண்டுபிடிக்க உதவியது. எதுவுமே முதலில் குழந்தைகளுக்கு என்றாகிவிட்ட வாழ்க்கையில் புத்தகங்களும் அவர்களுக்கு முதலில் என்று ப்ராடிஜி ஸ்டாலுக்குள் நுழைந்தோம். வாசிப்பில் நந்தினிக்கு ஆங்கிலத்தில் இருக்கும் ஈடுபாடு தமிழில் வரவழைக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. இந்த் முறை ப்ராடிஜி உதவி செய்தது. "ஹெய்டி" (சுட்டி டி.வியால் அவளுக்கு மிக விருப்பம்) மற்றும் "தும்பிக்கை எப்படி வந்தது" புத்தகங்கள் அவளது கவனத்தைக் கவர்ந்து வெற்றிகரமாகத் தமிழில் கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இன்னும் சில புத்தகங்கள் தேர்வு செய்து அடுத்து நான் ஆவலுடன் சென்றது...

"வம்சி பதிப்பகத்திற்கு"... நம் எழுத்துக்களையும் நமக்குத்தெரிந்தவர்களின் எழுத்துக்களையும் பதிப்பில் காண்பது மகிழ்ச்சி தானே!!! மாதவராஜ் அவர்களின் நான்கு புத்தகங்களையும் (குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது - சொற்சித்திரங்கள்
கிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவு கவிதைகள்
மரப்பாச்சியின் ஆடைகள் - வலைப்பதிவு சிறுகதைகள்
பெருவெளிச் சலனங்கள் - வலைப்பதிவு அனுபவங்கள்)
வாங்கினேன். இதில் எனது கவிதையும், அனுபவக்குறிப்பும் இடம் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் அயராத முயற்சியால் வந்த புத்தகங்களைத் தொகுத்த மாதவராஜ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்தோருக்கும் வாழ்த்துக்கள். அதன் பின் கால்கள் ஓயும்வரை சுற்றி நான் தேர்வு செய்த புத்தகங்கள் கீழே... கண்மணி குணசேகரனின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்று சரியாகத் தேடுவதாக நம்பிக்கொண்டு உறுதியாக தவறான பதிப்பகத்தில் தேடியதால் அதை மிஸ் செய்து விட்டேன்.. ஆங்காங்கே புத்தக விமர்சனங்களில் படித்த நூல்களை நினைவு கூர்ந்து தேர்ந்தெடுத்தேன். சில விரும்பிய புத்தகங்களை பட்டியல் தயாரிக்காததால் பதிப்பகம் அறியாமல் விடுபட்டுவிட்டது. அடுத்தமுறை ஒழுங்கான திட்டமிடல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

முடிவில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த விஷயம் நாங்கள் தேர்வு செய்த அளவிற்கு புத்தகங்களை குழந்தைகளுக்கும் தேர்வு செய்தது தான்.

வாங்கிய புத்தகங்கள்:

மேலே குறிப்பிடப்பட்ட மாதவராஜ் அவர்களின் தொகுப்புகள்
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
காட்டில் ஒரு மான் - அம்பை
மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துராமலிங்கம்
ஒரு கடலோரகிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
ஒற்றன் - அசோகமித்திரன்
நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ரா
குறுஞ்சாமிகளின் கதைகள் - கழனியூரன்
கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி
மனிதனும் மர்மங்களும் - மதன்
செங்கிஸ்கான் - முகில் (சரித்திரம் மீது திடீரென முளைத்த எனது ஈடுபாடு பற்றி பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)

குழந்தைகளுக்கு:

NationalBook Trust India பதிப்பில்:

A story about water
Nine Little Birds
குலோபா எலியரசியும் பலூன்களும்
A Real Giraffe
Tale of a Moustache

ப்ராடிஜி பதிப்பில்:

விண்வெளியில் விக்கி
புல்புல் கொடுத்த பெட்ரோல்
fishy fishes
தும்பிக்கை வந்தது எப்படி?
ஹெய்டி

Usbourne Young Readers பதிப்பில்

Dinosaurs next door

இது போக சில பம்பர் ஆக்டிவிடி புக்ஸும், Scholastic-ல் 3D புக்ஸும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தன.

இனி புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும் ...

13 comments:

அண்ணாமலையான் said...

இவ்ளோ புக் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.... உபயோகமா இருக்கும்...

பின்னோக்கி said...

எனக்காக கஷ்டப்பட்டு புத்தகங்கள் வாங்கி வந்ததற்கு நன்றிகள் பல.

//என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

இந்த புத்தகம் நிறைய பேர் பரிந்துரைத்திருக்கிறார்கள். படிக்க ஆவல்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் - போன வருடம் வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருப்பது.

மற்ற புத்தகங்களைப் பற்றி அறிய ஆவல். முயற்சிக்கிறேன்.

படங்கள் எதுவும் எடுக்க வில்லையா ?

நட்புடன் ஜமால் said...

கலெக்‌ஷென்ஸ் நோட் பன்னிக்கிறேன்.

------------

ஸ்ரீரங்கத்து தேவதைகளும்

புளியமரமும் மட்டும் தான் படித்தது போல் இருக்கு.

மெல்ல மெல்ல படிச்சிட்டு விமர்சணம் எழுதுங்கோ ...

அரங்கப்பெருமாள் said...

//இனி புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும் ..//

இங்க வச்சிட்டிங்க டிவிஸ்ட...

அமிர்தவர்ஷினி அம்மா said...

குட்டீஸ் கலெக்‌ஷன் சூப்பர், கலக்கிட்டீங்க மேடம்

புத்தகத்தை சீக்கிரமே படித்து முடிக்க வாழ்த்துக்கள் ;)

சந்தனமுல்லை said...

ஆஹா..கலக்கிட்டீங்க அமுதா...அப்பப்போ உங்ககிட்டேயிருந்து எட்டி பார்த்து நானும் படிச்சிக்கறேன்! :-)

sathishsangkavi.blogspot.com said...

எல்லா புக்கையும் படித்துவிட்டு முக்கியமான கருத்துக்களை எங்களுக்கும்
சொல்லுங்க...

swarna said...

Kutties collection is superb!

"உழவன்" "Uzhavan" said...

மிகுந்த திட்டமிடலோடுதான் வாங்கியுள்ளீர்கள். கிளிஞ்சல்கள் பறக்கின்றன புத்தகத்தை நான் மிகத் துல்லியமாக வாங்க மறந்திருந்தேன்.
இனி எப்போது இப்புத்தகத்தை வாங்கப் போகிறேனோ தெரியவில்லை

Unknown said...

ஒ அந்த அமுதா நீங்க தானா! மிக்க மகிழ்ச்சி. தொடர்பில் இல்லாததால் அது பற்றி அறியாமல் இருந்துவிட்டேன். எனக்குத் தெரிந்த மற்றொருவரு பதிவரும் படைப்பாளியாக ஆகியதில் மகிழ்ச்சியே.

வாழ்த்துக்கள்.

இலா said...

ஆஹா!! அமுதா.. இது நீங்கதானா.... அய்யோ புல்லரிக்குதே... ஒன்னும் எழுதலைன்னாலும் ஒரே ஹாஸ்டல் சாப்பாடு .. ஒரே காலேஜ் பெஞ்சு தேச்சேனேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு... மீண்டும் வருவேன் :))

Deepa said...

குட்டீஸ் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்த விளையாட்டுக்கள் சூப்பர்!

நல்ல நல்ல புத்தகங்கள் வாங்கி இருக்கிறீர்கள்.
வீட்டுக்கு வருகிறேன் இரவல் வாங்க! ;-)

மாதவராஜ் said...

வாசிப்பு அனுபவம் எழுத்துக்களை மேலும் செதுக்கும். செழிப்பாக்கும். வாழ்த்துக்கள்.