என் மேகம் ???

Sunday, January 10, 2010

வாழ்க்கை




புதிர்கள் நிறைந்த பாதைகளுடன்
விரிந்து கிடந்தது வாழ்க்கை
எதைத் தொட்டால் வெற்றியென
அலுப்புடன் தேடினேன் பதில்களை...

பதில்கள் தேடிக்கொண்டிருந்தவளிடம்
கேள்வியுடன் வந்தாள் மகள்
போட்டி ஒன்றில் கலந்திடவே
புது யோசனை ஒன்று கேட்டு...

அலுத்துப் போன மனதிற்கு
யோசிக்க விருப்பம் இல்லை
பரிசு கிடைக்க வேண்டுமெனில்
பழகியதைச் செய்திட சொன்னது

சிரித்துக் கொண்டே வாழ்க்கையை
எளிதாக விளக்கினாள் சின்ன பெண்
போட்டியில் பங்கு பரிசுக்கல்ல..
என் மகிழ்ச்சிக்கு என்றாள்

வாழ்க்கை கூட இப்படிதான்
அனுபவித்து வாழ்ந்திட தான்
புரிதலுடன் புதிர்களை
சுவாரசியமாக நோக்கினேன்


(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

19 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை...

பரிசு வெல்ல வாழ்த்துக்கள்....

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

போட்டியில் பங்கு பரிசுக்கல்ல..
என் மகிழ்ச்சிக்கு என்றாள் ]]


தெளிவு.

நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

//அலுத்துப் போன மனதிற்கு
யோசிக்க விருப்பம் இல்லை
பரிசு கிடைக்க வேண்டுமெனில்
பழகியதைச் செய்திட சொன்னது//

/வாழ்க்கை கூட இப்படிதான்
அனுபவித்து வாழ்ந்திட தான்
புரிதலுடன் புதிர்களை
சுவாரசியமாக நோக்கினேன்//

பொறுத்து - பொருத்தி பார்த்தால் புரிபடும் வாழ்க்கை !

அன்றாட நிகழ்வுகள்
சுவாரஸ்யம் நிறைந்தவை :)

அண்ணாமலையான் said...

பரிசு வெல்ல வாழ்த்துக்கள்....

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....”
ரிப்பீட்டேய்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

புரிதலுடன் புதிர்களை
சுவாரசியமாக நோக்கினேன் //

வாழ்த்துக்கள் அமுதா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவாரசியத்துடன் நோக்கிய உடன் புதிர்களும் எளிதாக அவிழுமே.. :)

தமிழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்

அமுதா said...

அனைவருக்கும் நன்றி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

பால்ரஸ் குண்டை, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் அசைத்து, அதை வெளி வட்டத்திற்கு கொண்டுவரும் விளையாட்டு போல வாழ்க்கை. அந்த குழந்தை அப்படி எடுத்துக் கொண்டது அருமை.

வெற்றி பெற (வேண்டும்) வாழ்த்துக்கள்.

goma said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள்

R.Gopi said...

//புதிர்கள் நிறைந்த பாதைகளுடன்
விரிந்து கிடந்தது வாழ்க்கை
எதைத் தொட்டால் வெற்றியென
அலுப்புடன் தேடினேன் பதில்களை...//

ஆரம்பமே அசத்தலா இருக்கே அமுதா....

//பதில்கள் தேடிக்கொண்டிருந்தவளிடம்
கேள்வியுடன் வந்தாள் மகள்
போட்டி ஒன்றில் கலந்திடவே
புது யோசனை ஒன்று கேட்டு...//

ஹா...ஹா... நல்லா இருக்கு உங்க கற்பனை...

//வாழ்க்கை கூட இப்படிதான்
அனுபவித்து வாழ்ந்திட தான்
புரிதலுடன் புதிர்களை
சுவாரசியமாக நோக்கினேன்//

பலே முடிவு.....

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்....

R.Gopi said...

தோழமைகள் அனைவருக்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்....

பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html

பத்மா said...

positive poem
romba nallairukku
all the best
padma

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Deepa said...

ரொம்ப பிடிச்சிருக்கு அமுதா!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் அமுதா

டிசிப்ளின் மாமாவையே டிசிப்ளினாக்கிய செயல் நன்று - வினாயகம் மாமா பழக்கத்த வுட்டுட்டாரும்மா - கதிர்வேல் மாமா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்ததா

நல்ல சிந்தனை

நல்வாழ்த்துகள் அமுதா

"உழவன்" "Uzhavan" said...

சமீபத்திய அனுபவத்தை அழகாகக் கவிதையாக்கிவிட்டீர்கள் என எண்ணுகிறேன் :-)
வாழ்த்துக்கள்!