என் மேகம் ???

Monday, January 25, 2010

அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...
பிடித்தவை மறந்தே போயிருந்தாள்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

//என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...
பிடித்தவை மறந்தே போயிருந்தாள்.//

அற்புதம் அமுதா.

பின்னோக்கி said...

அம்மா என்றாலே அர்ப்பணிப்பு. குடும்பம் என்ற வண்டியின் அச்சாணி. அவள் தான், தனது குடும்பம் என வேறாக பார்க்காத ஜென்மம். பல குடும்பங்களின் உயர் நிலைக்கு அம்மாவே காரணம்.

அம்மா !

உங்கள் கவிதை, வலியை உணர்த்துவதாக இருந்தாலும், எனக்கு அவளின் பாசமும் அர்ப்பணிப்பு மட்டுமே தெரிகிறது.

sathishsangkavi.blogspot.com said...

//என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா//

அது தாங்க அம்மா...

Deepa said...

அற்புதம் அமுதா.
நான்கு வரியில் நச்!

Unknown said...

உணர்வுகளை வார்த்தையாக்க தெரியவில்லை

என் தாயை நினைத்து கொண்டேன்

மாதவராஜ் said...

நுட்பமான விஷயங்கள் கொண்ட கவிதை முயற்சி என்றே சொல்வேன்.

அகஆழ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது, அமுதா...

Jaleela Kamal said...

அம்மா வுக்கு என்ன் பிடிக்கும் என்று யாருமே யோசிப்பதில்லை,அம்மா நமக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்பவள், தாயிற்கிணை இந்த உலகல் வேறு எதுவுமே இல்லை..

இதை தொடர்ந்து நானும் ஒரு பதிவு போடனும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்கும்போதே ஒரு குற்ற உணர்வு வருகிறது + நம்மளையும் யாரும் கேட்கப்போறதில்லைன்னு நினைக்கிறப்போ சிரிப்பும் வருது.

ரொம்பவும் யதார்த்தமா இருக்கு.