என் மேகம் ???

Thursday, July 16, 2009

பனி உலகமும் மீன் உலகமும்

யாழினிக்குப் பனி இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று ஆசை. ஸ்விட்சலாந்துக்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று சென்னை "அபிராமி மால்" பனியுலகம் சென்றோம் (2 வாரம் ஆகிவிட்டது. லேட்டான பதிவு கல்லிருந்தால் ... என்ற பழமொழி போல, இணைய இணைப்பு இருந்தால் நேரம் இல்லை, நேரம் கிடைத்தால் இணைய இணைப்பு இல்லை...). நீங்கள் மால் உள்ளே நுழையக் கட்டணம் கிடையாது. திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்க்கலாம் (டிக்கட் வாங்கிட்டுதான்) அல்லது "பனியுலகம்", "மீன் உலகம்", "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்" எல்லாம் டிக்கட் வாங்கி செல்லலாம். எல்லா உலகுக்கும் சேர்த்து 250ரூ கோம்போ பாக்கேஜ் உண்டு. இல்லையெனில் முறையே 150, 20, 40, 50 என்று நுழைவுக்கட்டணம். இது போக "விண்டோ ஷாப்பிங்" பண்ண கடைகள் உண்டு. கார் பார்க்கிங் தான் பிரச்னை. நாங்கள் சனி காலை சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். உணவுக்கு ஃபுட் கோர்ட்டும் உள்ளது.

முதலில் 150ரூ கொடுத்து பனியுலகம் சென்றோம். ஜெர்கின், காலணி, கையுறை, பாஸ்போர்ட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்த பாஸ்போர்ட்டில் அடுத்த முறை நம்மை வரவழைக்க சில தள்ளுபடிகள் உண்டு. உள்ளே ஒரு பெரிய பனி சறுக்கு இருந்தது. பனிபொம்மைகள் செய்து பார்த்தோம், பின் பனியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டோம். சில்லென்று பனி விளையாட்டு அருமையாக இருந்தது. கொஞ்சம் குளிராக இருந்தால் "இக்ளூ"வுக்குள் சென்றோம். சின்ன "ஸ்லெட்ஜ்" இருந்தது. குட்டீஸை வைத்து அதில் இழுக்க அவர்களுக்கு ஜாலிதான். மொத்த 20 நிமிடத்தில் கடைசி ஓரிரு நிமிடம் இடி, மின்னல் காற்று வந்து சிலிர்க்க வைத்தது."ஸ்விட்சர்லாந்து மாதிரியே இருக்கும்மா" என்று குட்டீஸ் கூறி (ஏதோ ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தாற்போல்...) லூட்டி அடித்தார்கள். அந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது.

அடுத்து மீன் உலகம். பனி உலகம் சென்றதால் 15ரூ நுழைவுக் கட்டணம். சின்ன அளவுதான் என்றாலும் அங்கிருந்த பெண் கொடுத்த விளக்கங்கள் அருமை. மெல்ல மெல்ல நட்சத்திர மீன் ஊர்ந்தது.




ஃப்ளவர் ஹார்ன், கையைக் காட்டிய இடமெல்லாம் வந்தது. கெள ஃபிஷ் மாடு போன்ற கொம்புடன் இருந்தது.



நீமோ ஸீ அனிமோனுடன் இழைந்து விளையாடிக் கொண்டிருந்தது. உயிருடன் மீனை "ஸீ அனிமோனுக்கு" உணவாக இட, அது அப்படியே குவிந்து அதன் இரத்தத்தை உரிஞ்சி விட்டது. நீமோ மிஞ்சிய உடம்பை உண்டது.




நீமோவுக்கு செதில்கள் இல்லாத்தால் ஸீ அனிமோன் ஒன்றும் செய்யாதாம்.



அப்புறம் இறால்களுக்கு உணவிட்டார். அட!!! எட்டுக்கால் பூச்சி ஓடுவது போல் இருந்தது. பத்து இறால் சேர்ந்தால், நீந்திக் கொண்டிருக்கும் மீனை வேட்டை ஆடிவிடுமாம்.

"பிரான்ஹா" மீனின் பல்லைப் பிடுங்கி மீன்தொட்டியில் போட்டிருந்தார்கள். பல்லிருந்தால் தொட்டியை உடைத்து விடுமாம். பத்து மீன்கள் சேர்ந்தால் ஒரு ஆளையே கொன்றுவிடுமாம். அம்மாடியோவ்!!! சின்னதா இருக்கே என்ற சலிப்புடன் நுழைந்த்வர்கள் மீன் பற்றி தகவல்கள் தெரிந்த பிரமிப்புடன் வெளியே வந்தோம்.



அப்புறம் "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்". குட்டீஸ் உலகம் ஏழு வயதுக்குட்பட்டவர்களுக்குரிய விளையாட்டுக்களுடன் இருந்தது. நந்தினிக்கு வாங்கிய டிக்கட் வேஸ்ட். "கிஸ்ஸிங் கார்ஸ்" வழக்கமான கார் மோதல் தான்.


ஓரிடத்தில் மெகந்தி, டாட்டூ, போர்ட்ரெய்ட் எல்லாம் இருந்தது. அறுபது ரூபாய் கொடுத்து ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்தோம். "நாமே இதை பெயிண்ட் பண்ணலாம்" என்று நான் வாய் விட, மறுநாள் ஒரு மணிநேரப் பொழுது யாழினிக்கும் நந்தினிக்கும் என் கையில் அந்த வாக்கை சரி பார்க்க உதவியது :-)



யாழின் கைவண்ணம்



நந்துவின் கைவண்ணம்

8 comments:

நட்புடன் ஜமால் said...

அந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது. ]]


அருமை.

ராமலக்ஷ்மி said...

பனி உலகத்துக்கும் மீன் உலகத்துக்கும் உங்களோடு நாங்களும் வந்த மாதிரி உணர்வு படித்து முடிக்கையில். நந்து யாழின் கைகளில் டாட்டூக்கள் அருமைங்க. அவங்க கைவண்ணங்களுக்கு உங்க கையாலே சுத்திப் போட்டுடுங்க!

அ.மு.செய்யது said...

அழகான பதிவு...குழந்தைகளின் புகைப்படமும் அருமை !!

"உழவன்" "Uzhavan" said...

அபிராமிமால் போனபோதெல்லாம் இங்கெல்லாம் போகனும்னு தோணலயே :-(
போனமா படத்தை பார்த்தோமா.. அப்படியே வெளியெ கொஞ்சம் மேஞ்சிட்டு வந்தோமானுதான் இருந்திருக்கேன். :-)
இப்ப போகனும் போல இருக்கு.

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ! நாங்களும் ஒருவாட்டி போகணும்!
மீன்களை பத்தின தகவல்கள் அருமை!

(நமெக்கெல்லாம் வறுவலுக்கு சிறந்த மீன் எது?குழம்பு வைக்க சிறந்த மீன் எது அப்படிங்கிற தகவல்தான் தெரியும் ;;)) ..)

அமிர்தவர்ஷினி அம்மா said...

nice sharing amudha

kutties photos' super

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2009/07/blog-post_3116.html

நட்புக்கு மரியாதை கண்டிப்பா வாங்க

அரங்கப்பெருமாள் said...

MCTM-ல படித்தேன்.ஆர்ம்ஸ் ரோட்டுல ஹாஸ்டல்..அப்பவெல்லாம் இப்படி இல்லை...நான் சொல்லும் காலம் "தளபதி" படம் வெளியான காலம். அதன் பிறகு அங்கு செல்ல காலம் கனியவேயில்லை... மறுமுறை வரும்போது வருவேன்..