என் மேகம் ???

Friday, March 20, 2009

காதல் காதல் காதல்.... காதல் போயின்???

சுற்றுவட்டாரத்தில் காதல் , திருமணத்தில் முடிந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் காதல் மீது கவனம் கொள்ள வைத்த ஒரு தோழியின் காதலே!!!

நான் அவரை சந்தித்த பொழுது அவர் கல்லூரி முடித்து மூன்று ஆண்டுகள் இருக்கலாம். ஹாஸ்டலில் வெகு நேரம் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார். அவரது ஆண் நண்பரின் அழைப்பு என்று வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கும். அமைதியாக இருக்கும் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்த பொழுது நான் அவரது காதலை வியந்தேன். கல்லூரியில் முளைவிட்டு வளர்ந்த காதல் அது. அவர் அவரது காதலருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்றால் மிகை ஆகாது.

காதலருக்காக அசைவ உணவை விட்டிருந்தார். முன்னணி கல்லூரியில் தேர்வு பெற்று பல வேலை வாய்ப்புகளைக் காதலுக்காக நிராகரித்திருந்தார். திருமணத்திற்குப் பின் தான் தனது வேலை பற்றிய முடிவு என்று உறுதியோடு காத்திருந்தார். கிராமத்தில் இருந்து வந்ததால் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. கிட்டதட்ட அவரது காதலால் அவர் தந்தையின் உயிர் ஊசலாடும் நிலைக்குப் போயிருந்தது. என்றாலும் உறுதியாகப் போராடி வீட்டில் அனுமதி பெற்றார். அமெரிக்காவில் இருந்து வைர மோதிரத்தோடு வந்தார் காதலர். தன் வீட்டில் சம்மதம் பெறச் சென்றார். மீண்டும் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு அவரது இருப்பு இவருக்குத் தெரியவில்லை. மின்னஞசல்கள் கிணற்றில் இட்ட கல்லாயின. மேலும் இரண்டு வருடங்கள் காத்திருந்துவிட்டு எந்த தகவலும் இல்லாததால் வீட்டில் சொன்ன இடத்தில் கழுத்தை நீட்டினார். எனக்கு அவரது காதலின் மென்மையும், உறுதியும் தெரியுமாதலால், மிகவும் வருத்தமாக இருந்தது. காதல் என்றால் எனக்கு இது தான் ஒரு சின்ன ஏக்கத்தோடு நினைவுக்கு வரும்.

இன்று எனக்கு நினைவுக்கு வந்த காரணம் இன்னொரு காதல். அவன் தன் காதலைப் பற்றி எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். இரு வருடங்களாகக் காதலிப்பதாகவும் தங்கள் வீட்டில் போராடுவதாகவும் கூறினான். விரைவில் கைகூட வாழ்த்தினேன். சமீபத்தில அவனுக்கு திருமணம் நிச்சயமானது. அவனது ஆட்டம் பாட்டத்துடன் வேறு ஒரு பெண்ணுடன். ஒரு சிலருக்கு காதல் விளையாட்டாக உள்ளது. இதுவும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். தோல்வியின் வலியை நினைத்துப் பார்க்கவே எனக்கு வலிக்கிறதே!!! அனுபவிப்பவருக்கு எப்படி இருக்கும்?

16 comments:

நட்புடன் ஜமால் said...

நாம் நேர்மையாக இருந்து அவ்விடத்தில் நம்மையே இருத்தி பார்ப்பதால் தான் வலி தெரிகிறது

நேர்மை இல்லாத இடத்தில்

அப்படி ஒன்று எதிர்ப்பார்க்க இயலாது

ஆனாலும் ஒரு பக்கம் நேர்மையாக இருந்தவருக்கு வலி அதிகம் இருக்கும்தான்

அமுதா said...

/*நேர்மை இல்லாத இடத்தில்
அப்படி ஒன்று எதிர்ப்பார்க்க இயலாது*/
உண்மை ஜமால். கருத்துக்கு நன்றி

தமிழ் அமுதன் said...

இவர்களின்'' தோல்வி வலிகளை''

காலம் கவர்ந்து சென்றிருக்குமோ?

Unknown said...

//காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். //

பல காதல்கள் திருமணத்தில் முடிவதே இல்லை. எங்கள் கல்லூரியில் பல காதல்கள் இப்படி திருமணத்தில் முடியாமலே போயிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் ஓரிவர் மட்டுமே, அவர்களை இன்றும் மனதில் மரியாதையோடு வைத்திருக்கிறேன்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//காதலருக்காக அசைவ உணவை விட்டிருந்தார். //

நல்ல விஷயம்.

முன்னணி கல்லூரியில் தேர்வு பெற்று பல வேலை வாய்ப்புகளைக் காதலுக்காக நிராகரித்திருந்தார்.//

கொஞ்சம் யோசிதிருக்க வேண்டிய விஷ்யம்.

ஆதலினால் காதல் செய்வீர்.( இந்த தலைமுறைக்கு பொருந்தாதோ...

ஆயில்யன் said...

:((

ஆதவா said...

காதலில் நேர்மை வேண்டும்.... அது இல்லாதவர்களிடம் காதல் இல்லை...

உங்கள் அனுபவத்தில் தோழியின் காதலன் என்ன நிலைமைக்குத் தள்ளப்பட்டான் என்று யோசிக்கவேணும்!!!!

அ.மு.செய்யது said...

////காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். ////

கொஞ்சம் கஷ்டம் தாங்க..

நல்ல அறிவுரை..அமுதா

ராமலக்ஷ்மி said...

உள்ளன்பு இல்லாத காதலில் உறுதி இருக்காது.

அமுதா said...

/*ஜீவன் said...
இவர்களின்'' தோல்வி வலிகளை''
காலம் கவர்ந்து சென்றிருக்குமோ? */
குறைத்திருக்கலாம்... மரத்திருக்காது என்று எண்ணுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்

அமுதா said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ராஜா, நவநீதன்,ஆயில்யன், ஆதவா, செய்யது & ராமலஷ்மி மேடம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

"காதல் காதல் காதல்.... காதல் போயின்???"

சாதல் எல்லாம் இல்லைங்க,

இன்னொரு காதல் இல்லனா கல்யாணம்.

நாம் வருத்தப்பட்ட அளவுக்கு கூட சம்பந்தப்பட்டவர்கள் வருத்தப்பட்டார்களா என்று தெரியாது?

:)-

"உழவன்" "Uzhavan" said...

பிக்கப், ட்ராப். எஸ்கேப்புனு இருக்கிறவங்களுக்கு இது எங்கெங்க புரியப்போகுது??
தலை வலியும், பல் வலியும் தனக்கு வந்தா தானே தெரியும் னு சொல்வாங்க. அதுமாதிரி காதலிக்குறவங்களுக்கு தான அதோட அருமை தெரியும்.

ஹேமா said...

காதல் என்பது மனம் ஒருநிலைபட்டு ஒருவரிடமே இருந்துவிட்டால் மாறச் சந்தர்ப்பமே இல்லை.அந்த உண்மையான காதல் ஒருவரிடம் மட்டுமே !

Rithu`s Dad said...

////காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். ////

காதல் திருமணம் வரை மட்டும் தானா? பரஸ்பரம் காதல் (அன்பு) இல்லாது, காதலித்து விட்டோமே என்று மட்டும் திருமணம் செய்வது.. காதலித்து - வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் - திருமணும் செய்ய முடியாது போவதை விட .. மிக கொடுமையானது..

பிரிந்த காதல் குறைந்தபட்சம் காலத்தினால் மறக்க(டிக்க) படலாம்.. அனால் காதலில்லாமல் காதலித்தோம் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்தவர்கள் நிலை.. காலம் முழுதும் கொடுமை தானே?

சரி தானே??

FunScribbler said...

பொண்ணுங்க தான் காதல்ல ஏமாத்திட்டு போறாங்கன்னு ஒரு கருத்து இருக்கு. ஆனால் பசங்களும் அவ்வாறே என்று உங்கள் பதிவு தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

உங்களது தோழியின் வலி புரிகிறது. :( கிடைத்த வாழ்க்கையை முடிந்தவரை சந்தோஷமாக வாழ சொல்லுங்கள் (வலிகள் அதிகம் இருந்தாலும்....)