என் மேகம் ???

Sunday, March 8, 2009

யாழினியும் மீனும்




யாழினிக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு அவளது பிடித்தம் ஆச்சரியமாக இருக்கும். எப்பொழுதிலிருந்து அவளுக்கு மீன் மீது ஈடுபாடு என்று யோசித்ததில்...

முதன்முதலில் ப்ளே ஸ்கூல் சென்றபொழுது அவள் வரைந்தது கூட மீன் தான். ஏதோ ஒரு வடிவம் போட்டு உள்ளே ஒரு புள்ளி வைத்து காட்டுவாள். இது என்னடா? "ஃபி...ஃபி.." என்பாள். ஃபிஷ் என்று புரிவதற்கு எங்களுக்கு கொஞ்ச நாள் ஆனது.

அதன் பிறகு ஒரு நாள் எதற்கோ பரிசாக வந்த அந்த விடிவிளக்கை அவள் அழுகை நிறுத்த ஏற்றினேன். அது வண்ண வண்ண மீன்கள் சுற்றும் மீன்தொட்டி தோற்றம் கொண்டது. அதைக் கண்டதும் அமைதியாகி அலுக்காது வேடிக்கை பார்க்கலானாள். அதன் பிறகு அவ்வப்பொழுது அதைப் போடச் சொல்லி அமைதியாக கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். அழகாக இருக்கும். எனவே மீன் வளர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

வீட்டிற்கு மீன் தொட்டியும் மீன்களும் வந்தன. தினம் அவற்றுக்கு உணவு போடுவது, மாதமொரு முறை சுத்தம் செய்வது என அவள் அப்பா சொல்லிக் கொடுத்தார். தினம் அவள் தான் மீன்களுக்கு உணவு இடுவாள். அவ்வப்பொழுது போய் வண்ண வண்ண மீன்களும் வாங்கி வருவார்கள்.

அதை அவள் "கோல்டு ஃபிஷ்", "ஏஞ்சல் ஃபிஷ்", "ஷார்க்", "கப்பி", " டாங்க் க்ளீனர்" , "டெலஸ்கோப்" ஃபிஷ் என வகைபடுத்துவதைக் காண எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நுங்கம்பாக்கத்தில் மீன் கண்காட்சிக்கு கூட்டிச் சென்ற பொழுதுதான் அவள் எவ்வளவு மீன்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்தது. பாதியில் எனக்கு அலுத்துப் போனது, அவளுக்கு அலுக்கவே இல்லை. அவள் மீன் ஆர்வத்திற்கு என்னால் முடிந்தது மீன்கள் படம்
போட்ட புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தது மட்டுமே!!!

இதற்கு நடுவே ஃபைட்டர் ஃபிஷ் எப்படி குட்டி போடும் என்று அவள் சித்தப்பா விளக்க, ஃபைட்டர் ஃபிஷ் ஜோடி தேடி அவள் தந்தையுடன் அலைச்சல்... மாப்பிள்ளை கிடைத்தார், பெண் கிடைக்கவில்லை. மதுரை போனால் கடைச்சனேந்தல் மீன் பண்ணைக்கு ஃபைட்டர் ஃபிஷ் பெண் தேடி ஒரு விசிட் இருக்கும். சென்னையில் அடையாறு, தி.நகர், வடபழநி என்று அலைவார்கள். 2 நாள் கழித்து வா என்றால் சரியாக 2 நாள் கழித்து போய் நிற்பார்கள். வீட்டில் அதிகாலையில் இருந்தே அங்கு போக நச்சரிப்பு தொடங்கிவிடும். அவள் அப்பாவும் அவளை வெளியே அழைத்து போய், "கடை பூட்டி இருக்கு சாயங்காலம் தான் திறப்பார்கள் ", என்பார். அவள் "இங்க பூட்டி இருக்கு, வடபழநில திறந்து இருக்கும்", என்பாள். ஒரு வழியாக மதுரையில் இருந்து ஒரு ஜோடி சின்ன ஃபைட்டர் மீன்கள் சென்னை வந்தன. அவை பெரிதாக வேண்டும். இன்று வரை அவற்றுக்கு நல்ல கவனிப்பு நடந்து கொண்டுள்ளது.

தொட்டி மீன்கள் மட்டும் அல்ல, உணவுக்கும் அவளுக்கு மீன் பிடிக்கும். பாசமலரின் முரண்கள் பலவிதம் கவிதை போல்....

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.



ஒரு நாள் ஒரு மீன் கதை அவளுக்கு சொன்னேன். கரடி டேல்ஸ் புக் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்திருந்தேன். அதை அவளுக்குப் படிச்சு காட்டினேன்.

Timsy, Bucki, Moti அப்படீனு மூணு மீன் இருக்கும். Timsy எப்பவும் எல்லா வேலையும் முன்னாடியே முடிச்சுடும், Bucki சொன்ன நேரத்துக்கு முடிக்கும், Moti லேட்டா தான் முடிக்கும். ஒரு நாள் Timsy வந்து மீன்வர்கள் வரப்போறாங்க நாம் இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு சொல்லும். ஆனால் Bucki & Moti, வரட்டும் பார்க்கலாம்னு சொல்லிட்டு வராது. மீனவர்களும் வருவாங்க, Bucki & Moti வலைல மாட்டிப்பாங்க. Bucki செத்த மாதிரி நடிக்கும். அதைத் தூக்கி தனியா போட்ட உடனே அது தண்ணில குதிச்சுடும். அப்ப Timsy மனசு கேட்காமல் வந்துடும். Timsy & Bucki , Moti கிட்ட இரகசியம் பேசி, ஒரு குதி குதிக்கும். தண்ணி தெறிச்சு மீனவன் கண்ல பட்டு வலையை நழுவ விடுவான், Moti வெளியே நழுவிடும். மூணு மீனும் பாறைக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கும். Bucki & Moti, இனிமேல் நாங்க புத்திசாலித்தனமா எல்லா வேலையும் முன்னாடியே செய்றோம்னு Timsy கிட்ட சொன்னாங்களாம்.

நீங்க மூணு மீன்ல எது Timsy, Bucki, Moti? என்று கேட்டேன். நான் Timsy , நான் Timsy அப்படீனு அக்கா தங்கைக்குள்ள சண்டை. இன்னிக்கு நீ ஸ்கூலுக்கு லேட்டா போன, அதனால் நீ "Moti", நீ அரக்க பரக்க ஓடி வேனைப் பிடிச்ச , அதனால் நீ "Bucki" அப்படீனு சொன்னேன். மறு நாள் காலங்காத்தால எழுந்து நான் Timsy அப்படீனு அடுப்படில நிற்கறாங்க. யார் சீக்கிரம் கிளம்பறாங்களோ அவங்க தான் Timsy-னு சொன்னேன். ரெண்டு பேரும் Timsy மீனா சீக்கிரம் கிளம்பிட்டாங்க.

இப்பவும் தொட்டில மீன்கள் நீந்திகிட்டு இருக்கு, மூணு மீன் கதையை நானும் சொல்றேன்... அவளும் இன்னும் மீன்களை அலுக்காமல் இரசிச்சுட்டு இருக்காள், அலுக்காமல் கதை கேட்கிறாள்...ஆனால், சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.

13 comments:

சந்தனமுல்லை said...

:-)

//ஆனால், சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.//

LOL!

நட்புடன் ஜமால் said...

மீண் தொட்டி இன்னும் கொஞ்சம் பெரு பண்ணுங்களே ...

நட்புடன் ஜமால் said...

\\கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.\\

மிக அருமை ...

அமுதா said...

நன்றி முல்லை

நன்றி ஜமால். கவிதையின் பாராட்டு பாசமலருக்கு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

...ஆனால், சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.

aahaaa

ரெண்டு டிம்ஸிக்கும் வாழ்த்துக்கள்...

ஆமா, நீங்க டிம்ஸியா, பக்கியா, மோட்டியா. :)-

ஆயில்யன் said...

//ஒரு நாள் ஒரு மீன் கதை அவளுக்கு சொன்னேன். கரடி டேல்ஸ் புக் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்திருந்தேன். அதை அவளுக்குப் படிச்சு காட்டினேன்.///
நல்லா இருக்கு கதை :-)

அவ்வப்போது எங்களுக்கும் இது போன்ற கதைகள் சொல்லுங்க...!

அமுதா said...

நன்றி அமித்து அம்மா.
/*ஆமா, நீங்க டிம்ஸியா, பக்கியா, மோட்டியா. :)-*/
கதை சொன்னா கேட்டுக்கணும். சின்ன பிள்ளைங்க மாதிரி கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது...

நன்றி ஆயில்யன்

/*அவ்வப்போது எங்களுக்கும் இது போன்ற கதைகள் சொல்லுங்க...!*/
கதை தானே சொல்லிட்டா போகுது. ஆனால் அமித்து அம்மா மாதிரி கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது...

ஆதவா said...

உங்க பொண்ணோட அறிவை நினைத்து பாராட்டுகிறேன். சின்ன வயதிலேயே இப்படி இருப்பது யாராலும் முடியாது...

என் நண்பரின் பையனுக்கு கார்கள் என்றால் உயிர்.. புதிதாக எந்த கார் வந்தாலும் அதன் மாடலையும் அது எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வான்...

இப்பல்லாம் ரொம்ப முன்னேறிட்டாங்க..

அப்துல்மாலிக் said...

//கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு//

அருமை..

சமைத்த‌ மீன் எங்கேர்ந்து பிடித்தது

தமிழ் அமுதன் said...

//தொட்டி மீன்கள் மட்டும் அல்ல, உணவுக்கும் அவளுக்கு மீன் பிடிக்கும்.// ....


எங்களுக்கும் தான்!!

ஊர்சுற்றி said...

மீனுக்கும் குழந்தைகளுக்கும் இத்தனை நெருக்கமா... நானெல்லாம் மீனை பார்த்தமா சாப்டோமானுதான் இத்தனை நாள் இருந்திருக்கேன். :)

Dhiyana said...

//சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.//

:-).. super

ராமலக்ஷ்மி said...

//மறு நாள் காலங்காத்தால எழுந்து நான் Timsy அப்படீனு அடுப்படில நிற்கறாங்க. //

So cute..:)!