சுட்டெரிக்கும் வெயிலில்
புத்தகச் சுமையோடு
கைப்பிடித்து நடத்தி
அழைத்து வந்தாலும்...
போக்குவரத்து நெரிசலில்
அலுவலக அவசரத்தில்
இருசக்கர வாகனத்தில்
அழைத்து வந்தாலும்...
வெயில் சற்றும் படாமல்
சொகுசாக இருத்தி வைத்து
காரில் பூவைப் போல்
அழைத்து வந்தாலும்...
எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்...
15 comments:
//எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்...//
எத்துணை உண்மை.
அத்தனை கனவுகளும் பலித்திடட்டும்.
வாழ்த்துக்கள் அமுதா.
supper!
எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்...\
சரியே!
ஆமாம் ...ஆமாம் ...ஆமாம் ...
அமுதா சரியாகச் சொன்னீர்கள்.காய்ச்சல் கண்டு டாக்டரிடம் அழைத்துப் போய் கியூவில் காத்திருக்கும் போதும் கூட
//எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்...//
கனவுகள் சுகமானவை,நல்ல கனவுகள் இதமானவையும் கூட.
அத்தனை கனவுகளும் பலித்திடட்டும்.
ஆமாம். கண்டிப்பாய் பலித்திட பிராத்திப்போம்.
உண்மைதான் அமுதா.
கவிதை அருமை.
//எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்... //
ஆஹா
நல்லா சொன்னீங்க போங்க இல்லையா பின்னே
வண்ண வண்ண கனவுகள் தான்
வாழ்க்கையை விவரிக்கின்றன
வாழ்க்கையாய் விரிகின்றன....!
கனவில் காணுங்கள்
நனவாக்கி காட்டுவார்கள் உம் மக்கள் :)
ம்ம்ம்.. என் பெற்றோரின் கனவு நனவானதோ இல்லையோ?? நாம் இப்ப வெட்டியா ப்ளாக் எழுதிக்கிட்டு, கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் என் பெற்றோருக்குத் தெரியாமல் :-)))
எல்லோருடைய கனவும் பலிக்க, நம்ம ப்ளாக் சங்கத்திலிருந்து ஆண்டவனை வேண்டுவோம்.
என்ன ஒரு அழகான கவிதை.
இதுக்கு வெறும் 6 பின்னூட்டம் மட்டும்தானா
இந்தாங்க என்னுடைய பங்கு 7ம் பின்னூட்டம்
//எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
/////எல்லா பெற்றோரின் கண்களிலும்
குழந்தையின் எதிர்காலம் பற்றி
வண்ண வண்ணக் கனவுகள் தாம்.../////
உண்மைதாங்க... ஏனெனில் பெற்றோர்கள் வாழ்வதே பிள்ளைகளின் கனவுகளில்தான்...!!! சரிதானா....
அழகு கவிதை!
அழகிய கனவு அது அமுதா..தவிர்த்தாலும் வந்து நிற்கும் கனவு..
இப்படிப்பட்ட எண்ணங்களை-கற்பனைகளை செயலாக்குவதில்தான் அவர்களின் வெற்றியும்,பிள்ளைகளின் பிரதியுபகாரமும்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு கவலை.அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டமாதிரி,இந்த அந்திமக் காலத்தில் என்னால் அவர்கள் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்று.
Kanvu Meipadavaendum
:-) நல்லாருக்கு அமுதா!
Post a Comment