என் மேகம் ???

Friday, March 20, 2009

ஊக்கமது கைவிடேல்

இந்த நூறாவது பதிவை எழுதுகிறேன் என்றால் ஒவ்வொரு பின்னூட்டமும், நம்மையும் ஃபாலோ பண்றாங்கப்பா என்ற நம்பிக்கையும் தரும் ஊக்கம்தான். எனது நன்றிகள்.

"மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்றார் வள்ளுவர். உண்மை தான் உள்ளம் மட்டும் நைந்து போய் ஊக்கம் இழந்தால் நம் செயல்திறன் குறைந்து விடும். அதனால் தான் "ஊக்கம் உடைமை" பற்றி ஓர் அதிகாரமே திருவள்ளுவர் எழுதினார்; "ஊக்கமது கைவிடேல்" என்று ஒளவை கூறினார்.

"அவியல் இன்னிக்கு சூப்பர்", என்ற பாராட்டில் 25 வருடங்களுக்கும் மேல் சமைக்கும் அம்மாவின் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அது வீடு முழுதும் பரவுகிறது. இது அங்கீகாரம் தரும் ஊக்கம்

என் பெண் நீச்சல் கற்றுக்கொண்டாள். என்றாலும் பெரிய குளத்தில் நீச்சலடிக்க பயம். எத்தனையோ வார்த்தைகளும், க்ளாஸ்களும் அவளுக்கு நம்பிக்கை தரவில்லை. அவள் தோழி ஒரு நாள் வந்தாள். குளத்துள் காசை போட்டு நீச்சல் அடித்து எடுத்து வந்தாள். மூன்றாம் நாள் இவளும் அவ்விளையாட்டில் இருந்தாள். இது ஆரோக்கியமான போட்டி தந்த ஊக்கம்.

சைக்கிள் கற்றுக்கொண்டால் அவள் கொஞ்சம் independent ஆக இருப்பாள் என எவ்வளவோ முயற்சித்தோம். ம்ஹூம்.. அவளுக்கு அதை ஓட்ட பிடிக்கவில்லை. அவள் தோழி வந்து புத்தகம் வாங்கி செல்வதை மேற்கோள் காட்டியும் அவளுக்கு விருப்பமில்லை. ஒரு நாள் , "என்னால் இனிமேல் உன் டான்ஸ் க்ளாஸுக்கு வந்து விட முடியாது , அதனால் டான்ஸை நிறுத்தி விடுவோம்", என்றேன். இரண்டே நாள் தான் சைக்கிள் கற்றுக்கொண்டாள். எனக்கு புது சைக்கிள் வாங்கி கொடு நானே க்ளாஸ் போய்க்கொள்கிறேன் என்றாள். இது டான்ஸின் மீது இருந்த் ஆர்வம் தந்த ஊக்கம்.

சீக்கிரம் படிச்சு முடிச்சா டி.வி பார்க்கலாம் என்று வேகமாக படிப்பது ஆசை தரும் ஊக்கம்.
இந்த சனி ஞாயிறு வந்து வேலை முடிச்சிட்டால் இரண்டு நாள் லீவ் போட்டு பிள்ளைகளோடு இருக்கலாம் என்று வேலையில் வரும் உற்சாகம் பாசம் தந்த ஊக்கம்.

"இதுக்கெல்லாம் சோர்ந்து போனால் எப்படி? இன்னும் சாதிக்க நிறைய இருக்கு, உங்களால் கண்டிப்பா முடியும்" என்ற ஆறுதலான வார்த்தைகள் தோல்வியால் துவண்டவரை அடுத்த அடி எடுத்து வைக்க ஊக்கம் தரும்.

"உடம்புக்கு என்ன வந்துடுச்சுனு இப்படி இருக்கீங்க? நல்ல உணவா அளவா சாப்பிட்டு, உற்சாகமா இருந்தால் நோய் ஓடிடாது", என்ற ஆறுதலான வார்த்தைகள் நோயில் இருப்போர்க்கு தேறிவிடுவோம் என்ற தெம்பு தரும்.

இப்படி ஊக்கம் கொடுக்க பல காரணங்கள் இருக்கலாம். பல வேளைகளில் வலிகளும் வேதனைகளுமே பலருக்கு ஊக்கம் கொடுத்திருக்கும். நிராகரிப்பு, கோபம் என்ற வேண்டாத விஷயங்களை ஊக்கமாக எடுத்து உயர்ந்தோர் பலருண்டு. நாம் வலிகளைக் கொடுக்க வேண்டாம், மனம் நிறைந்து ஊக்கம் கொடுக்கலாமே!!


காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

22 comments:

சந்தனமுல்லை said...

100-க்கு வாழ்த்துகள்..அமுதா!

pudugaithendral said...

காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை //

சத்தியமான வார்த்தைகள்.

100க்கு எனது வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்!! நூறாவது பதிவிற்கு!

படிச்சுட்டு அப்புறம் வரேன்!!

அமுதா said...

நன்றி முல்லை, புதுகை தென்றல் & ஜீவன்

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அமுதா.

//காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.//

நல்லாச் சொன்னீங்க அமுதா. இதை நான் பலருக்கு செய்தும் வருகிறேன்.

என்னுடைய 25-ஆம் பதிவுக்கும் இதேதான் தலைப்பு:)!

சந்தனமுல்லை said...

உங்க ஹெட்டர் போட்டோ அழகாயிருக்கு..பதிவில் சொல்லியிருக்கும் விஷயமும்!!

நட்புடன் ஜமால் said...

100ஆவது வாழ்த்துகள்

\\காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்\\

அருமையா சொன்னீங்க ...

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்
/*இதை நான் பலருக்கு செய்தும் வருகிறேன்.*/
பாராட்டுக்கள்

மீண்டும் நன்றி முல்லை.
நன்றி ஜமால்

ஆயில்யன் said...

500 அல்லது 1000த்து பதிவில போடவேண்டிய தலைப்பு! நூறிலேயே போட்டாச்சா...?!

ரைட்டு இனி அடிச்சு ஆட ஆரம்பிக்க வேண்டியதுதானே :)

ஆயில்யன் said...

நீங்கள் பிறருக்கு கொடுத்த ஊக்கம் பல சாதனைகளை வெளிப்படுத்தியது !

மூத்த பதிவர்கள் (லைக் புதுகை,ஆச்சி,ராமாக்கா,அ.அ.அக்கா,ஜீவண்ணே,ஜமால் அண்ணாச்சி..!) உங்களுக்கு கொடுக்கும் ஊக்கம் பல பதிவுகளை வெளிப்படுத்தட்டும்

வாழ்த்துக்கள் :)

அமுதா said...

நன்றி ஆயில்யன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

100க்கு வாழ்த்துக்கள்

மன்னிக்கவும், பதிவை இப்போது படிக்கமுடியவில்லை.

(படித்தபின் பிறகு ஒரு பின்னூட்டம் வரும்()

அமுதா said...

நன்றி அமித்து அம்மா. பதிவைப் பற்றி கண்டிப்பாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

Pems said...

அமுதாவுக்கு வாழ்த்துக்கள்!!ஆனா ஒன்னு நீங்கநூறாவது பதிவுவரைபோய்டிக அதுயெப்பாடிக....

Anonymous said...

வாழ்த்துக்கள்!! நூறாவது பதிவிற்கு! ஆனா ஒன்னு நீங்கநூறாவது பதிவுவரைபோய்டிக அதுயெப்பாடிக....

அமுதா said...

உங்கள் விடாமுயற்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கு நன்றி Pems/Anony (இன்னும் 2 தடவை ரிப்பீட் ஆன கமெண்ட்டை விட்டுட்டேன் :-))

நிகழ்காலத்தில்... said...

\\உண்மை தான் உள்ளம் மட்டும் நைந்து போய் ஊக்கம் இழந்தால் நம் செயல்திறன் குறைந்து விடும்\\

தொடருங்கள்........
வாழ்த்துகள்.

ஆதவா said...

நூறாவது பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

ஊக்கம் என்பது உயர்வைத் தரும்... காசு தற்காலிக பூஸ்டாக இருக்கலாம்.... என்றும் நிரந்தரம் ஊக்கம் மட்டுமே!!!

தொடர்ந்து எழுதுங்கள்....

அப்துல்மாலிக் said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் உங்களுக்கு "ஊக்கம்" கொடுக்கலேனா எப்படி..
வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் தொண்டு!

அமுதா has left a new comment on your post "பெரியவங்க இப்படி சொல்லியிருக்காங்க...":

நல்ல பொன்மொழிகள்

தங்கள் பாராட்டுக்கும் என் நன்றிகள்.

அமுதா said...

நன்றி அபுஅஃஸர், ஆதவா, உழவன், அறிவே தெய்வம்

Vidhya Sriram said...

Please continue your writing with same enthusiasm and zeal. :-)