குட்டீஸை டிராயிங் கிளாஸ் அனுப்ப ஆரம்பிச்ச உட்னே வீட்டு சுவர் இப்படி ஆய்டுச்சு (யாழினியின் கைவண்ணம்).
ம்ஹும், இதுக்கு கலர் கலரா அடிச்சாலாவது நல்லா இருக்குமே, முடியுமானு நினைச்ச சமயம், முல்லையோட இந்த பதிவு நம்பிக்கை தந்துச்சு. வீட்ல போய் குட்டீஸ்ட்ட நாம் சுவருக்கு பெயிண்ட் அடிக்கலாம்னு சொன்னவுடனே அப்பாவோட போய் பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டாங்க. டோராவை வீட்டுக்குக் கொண்டு வரலாம்னு திட்டமிட்டோம். சரினு முதல்ல ஒரு ட்ரையல் பார்த்தோம். மொட்டை மாடிக்கு போகிற வழில இருக்கிற சுவரைக் கொடுத்தேன். நந்தினி பூ வரைஞ்சு வண்ணம் தீட்டினாள். யாழினியும் தான். நந்தினிக்குப் பிடித்த பின்க் சட்டையும், நீல ஸ்கர்ட்டும் வண்ணம் தீட்டிக் கொண்டன...
அன்னிக்கு அவங்க சித்தப்பா வந்து ஆர்வமாகி அவளோட சேர்ந்து டோராவுக்கு பதிலா டெய்ஸியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. ரொம்ப நாளா தள்ளிப் போன வண்ணம் தீட்டல் நேற்று நிறைவு பெற்றது. இந்த முயற்சில ஒரு தடவை யாழ் நீலவண்ணத்தில் குளிச்சு டர்பண்டெய்ன் தேய்ச்சு குளிச்சாள். எனவே குட்டீஸ் வண்ணம் தீட்டறதை கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஆமைக்கு மட்டும் நந்தினி வண்ணம் தீட்டினாள். மீதி எல்லாம் அவள் அப்பா & சித்தப்பா வேலை. எப்படி இருக்கு? இனி அடுத்து இதை ரூமுக்குள்ள கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம்... எப்ப முடியுமோ தெரியல...
இதுக்கு நடுவில் பெரியவங்களை உற்சாகப்படுத்த குட்டீஸ் செஞ்ச ஒரு "ஷோ" எங்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் நடித்தவர்கள் யாழினி-4 வயது நிவேதா-3 வயது ... எழுத்தும் இயக்கமும் நந்தினி - 10 வயது.
நந்தினி சொல்கிறாள், யாழினி வ்ருகிறாள் ஓரிடத்தில் டினோசர் பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
(இதோ வருகிறாள் சிண்ட்ரல்லா. அவள் ஒரு காட்டில் மாளிகைக்குள் செல்கிறாள். உடனே கதவுகள் மூடுகின்றன (நந்தினி கை தட்டி கதவுகள் மூடும் ஓசை ஏற்படுத்துகிறாள்). அங்கே மான்ஸ்டர்ஸ் இருக்கின்றன (பொம்மைகள்). உடனே "ஸ்னோவைட்" வந்து மான்ஸ்டர்ஸைக் கொல்கின்றாள் (நிவேதா வந்து பொம்மைகளை வெட்டிச் சாய்க்கிறாள்). அவர்கள் தோழிகள் ஆகிறார்கள். "நான் சிண்ட்ரல்லா, உன் பெயர் என்ன?". "நான் ஸ்னோவொயிட்.". "we are friends"
ஷோ முடிகிறது.
அவர்களாக செய்த இந்நாடகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளை engage பண்ண எனக்கு ஒரு வழியும் காட்டியது. இனி எங்கள் வீட்டில் அடிக்கடி குட்டி ஷோக்கள் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
24 comments:
அட உங்க குட்டீஸ் வரையலா ...
\\யாழினியின் கைவண்ணம்\\
அட இவங்கள கவணிக்கவே இல்லையே
இவர்களுக்கு ஒரு பேரவை துவங்கிட வேண்டியதுதான் ...
நந்தினிக்குப் பிடித்த பின்க் சட்டையும், நீல ஸ்கர்ட்டும் வண்ணம் தீட்டிக் கொண்டன...
:)-
ரொம்ப அழகாயிருக்கு ட்ராயிங்க்ஸ் + கலரிங்.
இனி எங்கள் வீட்டில் அடிக்கடி குட்டி ஷோக்கள் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
அப்படியே அதை அப்ப அப்ப அப்டேட் செய்றதுனும் முடிவு செய்துக்கோங்க.
இல்ல்னா எங்களுக்கு எப்ப தெரியும்.
டெய்ஸி டோரா வீட்டுக்கு வந்ததுமில்லாம பெண்கள் இந்த நாடகத்தையும் நடத்தினார்களா. பெரிய மீடியா குழுவே சேர்ந்திடுச்சு உங்க வீட்டில.
வாழ்த்துகள்மா.
அழகா இருக்கு அமுதா..கலர்புல்லா!
ரெண்டு பேரும் நல்லா வரைஞ்சு இருக்காங்க!! :-)
கலக்கல் ஓவியங்க்ள்!@
நீங்களாவது நன்கு ஊக்கம் கொடுங்கள்!!! ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க வையுங்கள், மல்டி மீடியா படிக்க வையுங்கள்!!
நான் கவனிப்பாரற்று போய்விட்டதால் ஒரர நல்ல ஓவியன் எனும் நிலையை இழந்துவிட்டேன்!!!!
வாழ்த்துகளை சொல்லுங்கள்!!!
:) nice
அட....அசத்துறாங்க போங்க..
முடிஞ்சா அவங்க கைவண்ணங்களுக்காகவே ஒரு பிரத்யேகமாக ஒரு வலைதளத்தை உருவாக்குங்கள்.
இன்னும் நிறைய அவர்கள் கற்பனாசக்தியை வளர்க்கலாமில்லையா ?
நன்றி ஜமால்
நன்றி அ.அம்மா
நன்றி வல்லிசிம்ஹன் மேடம்
நன்றி முல்லை
நன்றி ஆதவா. அவர்களுக்குப் பிடிப்பதை நிச்சயம் ஊக்குவிக்கிறேன்.
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
/*அ.மு.செய்யது said...
அட....அசத்துறாங்க போங்க..
முடிஞ்சா அவங்க கைவண்ணங்களுக்காகவே ஒரு பிரத்யேகமாக ஒரு வலைதளத்தை உருவாக்குங்கள்.
இன்னும் நிறைய அவர்கள் கற்பனாசக்தியை வளர்க்கலாமில்லையா ?*/
நன்றி செய்யது. ஆம் .. ஆளுக்கு ஒரு வலைதளம் அமைக்கணும். நந்தினிக்கு அமைச்சிட்டேன்... நேரம் தான் கொஞ்சம் கடினமாக உள்ளது. செய்கிறேன்.
குட்டீஸ்களின் கிறுக்கல்களை ஓவியமாக்கிய உங்களுக்கு ஒரு ஓ போடலாம்ங்க
நல்லா சொல்லிக்கொடுங்க, என்கரேஜ் பண்ணுங்க
நல்லா வருவாங்க
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
நான் கவனிப்பாரற்று போய்விட்டதால் ஒரர நல்ல ஓவியன் எனும் நிலையை இழந்துவிட்டேன்!!!!//
இது எனக்கும் பொருந்தும். சரியான கவனிப்புஇல்லாததால் பாடகி, ஓவியர் எனும்நிலைகளை இழந்துவிட்டேன்.
நீங்க அந்த தப்பை செய்யாதீங்க.
வாழ்த்துகளை சொல்லுங்கள்!!!//
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும்
நல்லாயிருக்கு அமுதா:)!
ஷோ எல்லாம் நடக்குதா? நான் நந்தினி மேடம் வயதில் இருக்கையில் தங்கைகள்
மற்றும் அத்தையின் குட்டீஸ்களைச் சேர்த்துக் கொண்டு இது போல பல ஷோக்கள் நடத்துவோம்:)! [டிவி இல்லா காலத்தில் பெரியவங்களுக்கு அது பெரிய எண்டர்டெயின்மெண்ட்:)]. அதை நினைவு படுத்தி விட்டீர்கள். வல்லிம்மா சொன்னது போல அப்டேட் பண்ணத் தவறாதீர்கள்.
அட..அட...அடடா...அசத்தறாங்கப்பா குழந்தைகள்,அவர்களது ஓவியங்கள் அழகு தான் கூடவே "யாழினி" என்ற பெயர் என்னை ரொம்பவும் கவர்ந்தது. இப்படிப் பட்ட பதிவுகள் படிக்க சுவாரஸ்யம் அமுதா.
குழந்தைகளை இதுமாதிரி உபயோகமான பொழுதுபோக்குகளில் ஈடுப்படுத்துவது ஆரோக்கியமான ஒன்று.....அவர்களின் கற்பனைத் திறன் வளர்ச்சி பெறும்.........
வாழ்த்துக்கள் அமுதா...
நன்றி அபுஅஃப்ஸர்.
நன்றி புதுகைத்தென்றல்
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி மிஸஸ். டவுட்
நன்றி anbudan vaalu
////இதுக்கு நடுவில் பெரியவங்களை உற்சாகப்படுத்த குட்டீஸ் செஞ்ச ஒரு "ஷோ" எங்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் நடித்தவர்கள் யாழினி-4 வயது நிவேதா-3 வயது ... எழுத்தும் இயக்கமும் நந்தினி - 10 வயது ////
நந்தினி இயக்கத்துல நீங்க எப்போ ''ஆக்ட்'' கொடுக்க போறீங்க!!
ஷோ நல்ல கற்பனை வளம். சூப்பரா வரைஞ்சியிருக்கிறார்கள். Free hand drawing or any stencils?
நன்றி ஜீவன்
/*நந்தினி இயக்கத்துல நீங்க எப்போ ''ஆக்ட்'' கொடுக்க போறீங்க!!*/
தினம் தினம் அவங்க இயக்கதில தான் நாளே ஓடுது!!!!
நன்றி தீஷு...
அவங்க சித்தப்பா free hand வரைஞ்சது. நந்தினியும் இப்ப நல்ல வரையறா. அதெல்லாம் ஃபோட்டோ எடுத்து அவளோட வலைப்பூல போடணும். ரொம்ப நாளா அந்த வேலையும் pending-ஆ இருக்கு
ம்..ம்.. நீங்க சொந்த வீட்டுக்காரங்க..ஜமாய்க்கிறீங்க. :-)
நாங்கெல்லாம் இப்படி வாடகை வீட்டுல பண்ணமுடியாது. :-(
நல்ல கற்பனை வளம் ரெண்டு பேருக்கும்.
யாழினிக்கும் நந்தினிக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க :)
நன்றி உழவன்
நன்றி தாரணி பிரியா..
Post a Comment