என் மேகம் ???

Saturday, February 21, 2009

மங்கையராய் பிறப்பதற்கே



துள்ளித் திரிந்த மான்குட்டிக்கு
பிரச்சனைகள் ஏனோ??

அடைந்தாலும் அடையாவிட்டாலும்
பருவம் ஒரு பிரச்சனை



பயணங்கள் திட்டமிடலில்
மாதம் ஒரு பிரச்சனை

மாதப்பிரச்னை நின்றுவிட்டால்
எலும்பைத் துளைக்கும் பிரச்சனை

மாதப்பிரச்சனை மறையா விட்டால்
கருவறையே பிரச்சனை

கருவொன்று உருவாகி
உயிர் பெற்று அழுவதற்குள்
நித்தம் ஒரு பிரச்சனை

இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்

யார் சொன்னது ...
மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும் என்று?

என்ற தீராத கோபம்
மறைந்து போனது கண்ணே
உன் மத்தாப்புச் சிரிப்பினிலே!!!



என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் ஈன்றிடவே?

என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்...


(படங்கள்: இணையம்)

44 comments:

KarthigaVasudevan said...

என்னங்க இது கவிதை ஒரே புலம்பலா இருக்கேன்னு நினைச்சேன்...கடைசில சமாதானப் படுத்திட்டீங்க.நல்ல இருக்கு உங்க கவிதை.

அ.மு.செய்யது said...

சமீபத்தில் நான் பார்த்த அழகான கவிதைகளில் ஒன்று.

ஆரம்பத்தில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும் இறுதியில் ஒரு பெண்ணின் கரை எதுவென அழகாக சொல்லி விட்டீர்கள்..

அபி அப்பா said...

நல்லா இருந்துச்சுப்பா கவிதை! உண்மையும் கூட:-(

நட்புடன் ஜமால் said...

மாதவம் செய்தல் வேண்டும்

நட்புடன் ஜமால் said...

\\பயணங்கள் திட்டமிடலில்
மாதம் ஒரு பிரச்சனை

மாதப்பிரச்னை நின்றுவிட்டால்
எலும்பைத் துளைக்கும் பிரச்சனை

மாதப்பிரச்சனை மறையா விட்டால்
கருவறையே பிரச்சனை\\

விளங்கிகொள்ள மட்டுமே முடிந்த விடயம்

உணரவே முடியாதது

ஆனாலும் அரவனைப்பை இருக்க முயலும் ஒரு ஜீவன் ...

நட்புடன் ஜமால் said...

\\இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்\\


சரியா சொன்னீங்க

அதுவும் பெண்களே பெண்களுக்கு தரும் பிரச்சனைகள் அதிகம் இப்பொழுதெல்லாம்

Anonymous said...

//என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்...//

சோகம் கொட்டி ஆரம்பித்தாலும், நம்பிக்கையோடு கவிதை நிறைவு பெறுவது நிறைவு தருகிறது.

அமுதா said...

நன்றி மிஸஸ் டவுட்.


/*அ.மு.செய்யது said...
சமீபத்தில் நான் பார்த்த அழகான கவிதைகளில் ஒன்று.*/
நன்றி செய்யது
நன்றி அபி அப்பா (முதல் வருகை??)

அமுதா said...

நன்றி ஜமால்.
/*அதுவும் பெண்களே பெண்களுக்கு தரும் பிரச்சனைகள் அதிகம் இப்பொழுதெல்லாம்*/
உண்மை . பிரச்னைகளின் பெரும்பகுதிக்கு பல நேரங்களில் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்

அமுதா said...

/*சூர்யா ஜிஜி said...

சோகம் கொட்டி ஆரம்பித்தாலும், நம்பிக்கையோடு கவிதை நிறைவு பெறுவது நிறைவு தருகிறது.*/
நன்றி சூர்யா

Rajeswari said...

என்னமோ போங்க பையன பிறந்திருக்கலாம்னுதான் எனக்கு தோனுது

அமுதா said...

/* Rajeswari said...
என்னமோ போங்க பையன பிறந்திருக்கலாம்னுதான் எனக்கு தோனுது*/
வருகைகு நன்றி ராஜேஸ்வரி. ஆணாவது பொண்ணாவது, அருமையா வளருங்க. அதற்கப்புறம் அவங்க handle பண்ணிக்குவாங்க... ஆனாலும் பொண்ணுங்களை அழகுப்படுத்தறது தனி திருப்தினா.. அவங்க நம்ம கிட்ட பொழியற அன்பு ஆண் குழந்தைகள் கிட்ட வராதுங்க... மனசு கடைசில அன்புக்காகத் தானே ஏங்குது?

அபி அப்பா said...

//நன்றி அபி அப்பா (முதல் வருகை??)//

முதல் வருகை இல்லை! முதல் பின்னூட்டம்:-))

நிஜமா நல்லவன் said...

நல்லா இருந்துச்சு கவிதை!

அமுதா said...

அபி அப்பா said...
/* முதல் வருகை இல்லை! முதல் பின்னூட்டம்:-)) */
ஓ.. முதல் பின்னூட்டத்திற்கு நன்றி...

நன்றி நிஜமா நல்லவன்

குடந்தை அன்புமணி said...

பெண்களுக்கே உரிய இயல்புகளை இயல்பாகவே வெளிப்படுத்தியுள்ளது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்!

தமிழ் said...

நல்ல இருக்கிறது

அமுதா said...

நன்றி அன்புமணி
நன்றி திகழ்மிளிர்

"உழவன்" "Uzhavan" said...

அருமை அமுதா ! வாழ்த்துக்கள்.

வார்த்தையின் வலி மத்தாப்பு சிரிப்பினைக் காணும்வரைதான் இருந்தது.

உழவன்
http://tamizhodu.blogspot.com

Anonymous said...

என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் ஈன்றிடவே?

என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்...
//
அழகான கவிதை

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

ஆ.ஞானசேகரன் said...

மங்கையாரா பிறப்பதன் அழகு மழலையின் சிரிப்பை பார்க்கும் பொழுதுதான்... நல்லா இருக்கு கவிதை

அமுதா said...

நன்றி உழவன்
நன்றி ஆனந்த்
நன்றி வலைப்பூக்கள்
நன்றி ஞானசேகரன்

Thamira said...

அன்புமணி said...
பெண்களுக்கே உரிய இயல்புகளை இயல்பாகவே வெளிப்படுத்தியுள்ளது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்!

// வாழ்த்துகள்.!

ஆதவா said...

என்ன சகோதரி!! நீங்களே இப்படி நினைக்கலாமா? மாதவராய் பிறந்திருக்கவில்லையே என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன் தான்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஏது?

பெண்கள் இத்தனை பிரச்சனைகளையும் மீறி சாதிக்கிறார்கள்.!!

கவிதை நன்றாக இருப்பினும் அதன் கரு எனக்கு பிடிக்கவில்லை!!

இறுதி வரிகள் நன்றாக இருக்கின்றன

தேவன் மாயம் said...

என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்.//

கவிதை அருமை!!
பெண்களுக்கு சிரமம் தந்த இறைவன் கொடியவன்!!

anbudan vaalu said...

அழகு கவிதைங்க.......

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க :)

அமுதா said...

நன்றி தாமிரா

அமுதா said...

ஆதவா said...
என்ன சகோதரி!! நீங்களே இப்படி நினைக்கலாமா? மாதவராய் பிறந்திருக்கவில்லையே என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன் தான்.

/* வருகைக்கு நன்றி ஆதவா. வாழ்வின் இன்னும் சில பரிணாமங்களைக் காணும் பொழுது இந்த வலி உங்களுக்குப் புரியலாம். இந்த கேள்விக்கு ஒரு பின்னூட்டத்தில் பதில் அளிக்க முடியாது என்றே எண்ணுகிறேன்.

/*பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஏது?
பெண்கள் இத்தனை பிரச்சனைகளையும் மீறி சாதிக்கிறார்கள்.!! */
உண்மை.


/*கவிதை நன்றாக இருப்பினும் அதன் கரு எனக்கு பிடிக்கவில்லை!

இறுதி வரிகள் நன்றாக இருக்கின்றன*/
கருத்துக்கு நன்றி.

அமுதா said...

thevanmayam said...
கவிதை அருமை!!
பெண்களுக்கு சிரமம் தந்த இறைவன் கொடியவன்!!

நன்றி thevanmayam. சமூகம் புரிதலுடன் பெண்களை நடத்தினால் இவை வலிகள் என்றே உணர வேண்டி இருக்காது.

அமுதா said...

நன்றி anbudan vaalu
நன்றி தாரணி பிரியா

சந்தனமுல்லை said...

கவிதை நல்லாருக்கு அமுதா!

அமுதா said...

நன்றி முல்லை

தமிழ் அமுதன் said...

எல்லா வலிகளையும்,துயர்களையும் பொறுத்து கொண்டு,

///என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்.///

என்று நினைக்கும் உயர்ந்த குணம் இருகிறதே!!!!

அதனால் சொல்லி இருப்பார்கள்!

'''மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்''

என்று .................

அமுதா said...

நன்றி ஜீவன்

அமுதா said...

/*எல்லா வலிகளையும்,துயர்களையும் பொறுத்து கொண்டு,... */
பொறுத்தார் பூமி ஆள்வார்???

அமிர்தவர்ஷினி அம்மா said...

மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும் //

பாரதியார்
இப்ப நீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

நித்தம் ஒரு பிரச்சனை

இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்

எத்தனை ப்ரச்சனைகள் வந்தாலும் எதிர்கொண்டு நின்று போராட
மங்கையராய் பிறக்கவேண்டும்
அதற்கு மாதவம் தான் செய்திருக்க வேண்டும்.

உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்
100க்கு 200% உண்மை

அமுதா said...

nanri amithu amma

ஹேமா said...

ஆண்களைவிட பெண் பெருமை கொள்ளக்கூடியவள் என்றாலும் அவள் படும் வேதனைகளும் அதிகம்.என்றாலும் உறவுகள் கூடும் ஒரு பூங்கா அவள்தான்.

ராமலக்ஷ்மி said...

//இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்

யார் சொன்னது ...
மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும் என்று?//

உண்மைதான் என்றெண்ணியபடி கவிதையின் முடிவுக்கு வந்து விட்டோமோ எனவிருக்கையில் எத்தனை அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் அமுதா. அழகு. என் பாராட்டுக்கள். மகிழ்வோம் மங்கையராய்ப் பிறந்ததற்கு.

அமுதா said...

/*ஹேமா said...
ஆண்களைவிட பெண் பெருமை கொள்ளக்கூடியவள் என்றாலும் அவள் படும் வேதனைகளும் அதிகம்.என்றாலும் உறவுகள் கூடும் ஒரு பூங்கா அவள்தான்.*/
உண்மை . நன்றி ஹேமா...

/*ராமலஷ்மி said...
அழகு. என் பாராட்டுக்கள். மகிழ்வோம் மங்கையராய்ப் பிறந்ததற்கு*/
நன்றி மேடம்.

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவிதை பாராட்டுக்கள்