"உன் பெயர் என்ன", இது நந்தினியின் 4 வயதில் பலராலும் அவளின் மழலைக்காகக் கேட்கப்படும் கேள்வி. "நந்தினி என்ற சுதந்திரா என்ற லஷ்மி தேவி என்ற ஏஞ்சல் என்ற..." என்று கிட்ட தட்ட ஒரு நிமிடத்துகு நீளும் பதிலில் "நந்தினி" தவிர ஒன்றும் புரியாது. இதில் ""நந்தினி என்ற சுதந்திரா" மட்டுமே நாங்கள் வைத்தது, மீதி அவள் பிடித்து வைத்துக்கொண்டது. இப்பொழுது யாழினியிடம் உனக்கு இன்னொரு பெயர் வைக்கலாம்னு பார்க்கிறேன் என்றால் "இல்லைமா, யாழினி மட்டும்தான் என் பெயர். வேற எதுவும் கிடையாது, அப்படியே கூப்பிடுங்க..." என்கிறாள்.
அவளிடம் வெளிப்படும் தன்னம்பிக்கையும், தனித்தன்மையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இன்று ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்ல அவளுக்கு உடை தேர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.
"அம்மா, நான் இதைத் தான் போட்டுக்குவேன்"
"இது கொஞ்சம் கிழிஞ்சிருக்குமா"
"தச்சு கொடு.."
நான் தைக்க முயற்சித்தேன். தையல் இயந்திரம் கொஞ்சம் மக்கர் செய்தது.
"குட்டிமா, தைக்க முடியலைடா, நீ அத்தைட்ட தைக்கச் சொல்லி வாங்கிக்கறியா?"
"இல்லம்மா, நீ தான் எனக்கு அம்மா, நீதான் தைக்கணும்"
இதற்கப்புறம் நான் தைத்துக் கொடுக்காமல் இருக்க முடியுமா? என்றாலும் எனக்கு அவ்வுடை சற்று விருப்பமில்லை, அவள் அத்தை சொன்னால் கேட்பாள் என்றெண்ணினேன். எனவே ,
"நான் இன்னொரு ட்ரெஸ்ஸும் வைக்கிறேன். அத்தை கிட்ட நீ கேளு, அவங்க சொல்றத போட்டுக்க.."
"இல்லம்மா, எந்த ட்ரெஸ் போடணும்னு நான் தான் சொல்வேன்"
அவளது தெளிவான பதிலில் நான் வாயடைத்துப் போனேன்.
*******************************************************
சரி... சின்னவங்களை மட்டும் சொன்னால் பெரியவங்க என்னை கேள்வி கேட்பாங்க. அதனால் அவங்களைப்பத்தி....
இரண்டு வருஷம் முன்னால அவங்க வகுப்பாசிரியர் சொன்னது என்னன்னா "hats off to you parents!!!. உங்கள் குழந்தையை நன்னடத்தையோடு வளர்த்துள்ளதற்கு எனது பாராட்டுக்கள்", என்று எங்களை மகிழ்வித்தார். இப்பொழுது அவர் மீண்டும் அவளுக்கு ஒரு பாடத்திற்கு ஆசிரியர். வகுப்பாசிரியர்களைச் சந்திக்கும் பொழுது அவரையும் காணச் சென்றிருந்தேன்.
"உங்களை நான் வரச் சொல்லலையே!!!"
"இவ தான் இழுத்துட்டு வந்தா மேடம்"
"ஓ... obedient, good mannered, helping nature, ..." என்று ஒரு பத்து வார்த்தைகள் கூறிவிட்டு "The good thing is these things have not got into her head", என்றார் (அவள் தலைக்குள்ள இதெல்லாம் ஏறி இன்னும் தலை கனமாகலையாம்). மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"
நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்
************************************************************
20 comments:
அருமை....!!
எனக்கும் எதிர்க்காலத்தில் இப்படி ஒரு மகள் பிறக்க வேண்டிக்கோங்க...
நன்றி..
எனக்குப் புரியலைங்க... இந்த பதிவு எதற்கு???
வாழ்த்துக்கள் உங்கள் செல்லங்களுக்கும் உங்களுக்கும்.
//யாழினி மட்டும்தான் என் பெயர். வேற எதுவும் கிடையாது, அப்படியே கூப்பிடுங்க..."////
......அது!!!!!!
//ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் //
தருணங்கள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்!
படிக்கும் போதே பெருமையாகத்தான் இருக்கிறது
வாழ்த்துக்கள் இருவருக்கும், பெற்றவர்க்ளாகிய உங்களுக்கும்
மகிழ்ச்சி..வாழ்த்துகள்! :-)
//நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்//
வாழ்த்துகள் அமுதா.
தனிவழி ...
எங்கேயோ கேட்ட குரல்
\\"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"
நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்\\
ஆரோக்கியம்
சந்தோஷம் ...
//நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்
//
வாழ்க வளமுடன் :)
//
"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"/
இதை விட ஒரு பெற்றோருக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
தங்கள் இரு செல்லங்களுக்கும் வாழ்த்துகள்.
/* ரங்கன் said...
அருமை....!!
எனக்கும் எதிர்க்காலத்தில் இப்படி ஒரு மகள் பிறக்க வேண்டிக்கோங்க...
நன்றி..*/
கண்டிப்பா ரங்கன். ரொம்ப அட்வான்ஸாவே வாழ்த்தும் சொல்லிடறேன். :-))
/*ஆதவா said...
எனக்குப் புரியலைங்க... இந்த பதிவு எதற்கு???*/
குழலினிது யாழினிது என்று என் குழந்தைகளுடனான சில அற்புதமான தருணங்களை பதித்துக் கொள்கிறேன் ஆதவா.
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி ஜீவன்
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி அமித்து அம்மா
நன்றி தீஷு
நன்றி முல்லை
நன்றி ஜமால்
நன்றி செய்யது
நன்றி பாலராஜன்கீதா
அருமை
விகடன்ல உங்க பதிவு வெளிவந்துருக்காமே, ஜீவன் பதிவுல படிச்சேன்
வாழ்த்துக்கள்
குட்டீஸ் கிட்ட சொல்லுங்க இதை
நன்றி ஆனந்த்
/*அமிர்தவர்ஷினி அம்மா said...
விகடன்ல உங்க பதிவு வெளிவந்துருக்காமே, ஜீவன் பதிவுல படிச்சேன்
வாழ்த்துக்கள்
குட்டீஸ் கிட்ட சொல்லுங்க இதை*/
நன்றி அமித்து அம்மா. அவங்களுக்கு பட்டாம்பூச்சி காட்டினால் தான் புரியுது. ஏன்னா அவங்க ஸ்கூல்ல "குட்" அப்படீனால் கைல ஸ்டார், ஐஸ்க்ரீம் வரைஞ்சு விடுவாங்க...
:)
Post a Comment