1. BLOOD
2. சுட்டிகள்
http://www.indianblooddonors.com/
http://www.bharatbloodbank.com/
http://www.chennai-madras.com/emergencynumbers/bloodbanks.htm
http://www.friendstosupport.org
3. இரத்த வகையைப் பற்றி சில தகவல்கள்:
இரத்தவகை - மக்களிடம் இருக்கும் சதவீதம்
O + ...... 40 %
O - ...... 7 %
A + ...... 34 %
A - ...... 6 %
B + ...... 8 %
B - ...... 1 %
AB + ...... 3 %
AB - ...... 1 %
என் அனுபவம்:
மீட்டிங் செல்லும் அவசரத்தில் இருந்த பொழுது எட்டிப்பார்த்தது இரத்தம் வேண்டி ஒரு மின்னஞ்சல். வந்து பார்ப்போம் என்று தலைகாட்டிய எண்ணத்தை மாற்றி "forward" என்று அனைவருக்கும் அனுப்பிவிட்டு சென்று விட்டேன்.
மின்னஞ்சல்கள் நிறைய மக்களைச் சென்றடைவதாலும், இரத்த தானம் பற்றிய விழிப்புணர்ச்சி உள்ளதாலும், இரத்தம் கிடைப்பது எளிதென்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
அன்று ஐந்து மணிக்குள் நான்கு யூனிட் இரத்தம் கிடைத்தால் மறுநாள் அறுவை சிகிச்சை நடக்கும் என்பது நிலை. AB+ இரத்தம் நான்கு யூனிட் தேவைப்பட்டது. இரத்த வங்கிகளில், நமக்கு நான்கு யூனிட் இரத்தம் தேவை என்றால், நான்கு பேர் இரத்ததானம் செய்தபின் வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில், ஒருவருக்கு இரத்தம் கொடுக்க எண்ணம் இருந்தது என்றாலும், அவர் இருந்தது தேவைப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில். எனவே வந்து கொடுக்க இயலவில்லை. என் அலுவலகத்திலிருந்து ஒருவர் சென்றார். இரத்ததானத்திற்காக இரத்தத்துடன் தங்கள் பொன்னான நேரத்தையும் செலவிடுபவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேற்சொன்ன சுட்டியில் இருந்து கிடைத்த எண்களில் சிலரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. சரியாக நான்கு மணி போல்தான் இரத்தம் கொடுக்க நால்வரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. இரத்தம் தேவைப்பட்டவர்கள் சின்ன நகரத்தில் இருந்து வந்ததால் அவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். இரத்தம் கிடைத்த பின் தான் அவர்கள் சற்று தெளிவு பெற்றனர். மின்னஞ்சலும், சுட்டிகளும் மிகவும் உதவின என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை இயன்ற அளவு பயன்படுத்தி உதவுவோம். எனவே, முடிந்தால் இரத்ததானம் செய்யுங்கள், இல்லை என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை "forward" பண்ணுங்கள், இரத்தம் இன்னும் தேவைப்பட்டது எனில், யாரேனும் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
23 comments:
நல்ல தகவல்
நல்ல பகிர்வு
ஆஹா.. இது ஒரு பயனுள்ள பதிவு.... இச்சுட்டிகளை என் தளத்தில் நான் பயன்படுத்திக் கொள்வேன்...
இரத்தவகை தெரிந்தாலும், இத்தனை சதவீதம் என்று தெரியாது... அறியப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
ஆஹா.. இது ஒரு பயனுள்ள பதிவு.... இச்சுட்டிகளை என் தளத்தில் நான் பயன்படுத்திக் கொள்வேன்...
இரத்தவகை தெரிந்தாலும், இத்தனை சதவீதம் என்று தெரியாது... அறியப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
நல்ல தகவல் அமுதா...
பயன்படுத்தி கொள்கிறேன்.
இந்த ஓ நெகட்டிவ் க்கு நாங்க பட்டபாடு இருக்கே, யப்பா ஒரு தனிப்பதிவே போடலாம்.
இப்பதான் தெரியுது, அது கிடைக்கறதுக்கு ஏன் அவ்ளோ கஷ்டம்னு.
நன்றி நல்ல பகிர்தலுக்கு.
மிக நல்ல பகிர்தல் அமுதா.
அருமையான செய்தி
வாழ்த்துகள்
அமுதா நல்ல தகவல்
//O + ...... 40 %
//
எனக்கும் இதுதாங்க அப்போ கொஞ்சம் பயப்படாமல் இருக்கலாம்
அவசியமான பகிர்வு :)
பயனுள்ள பதிவு அமுதா.
நல்ல தகவல் நன்றி!!
0+ தான் நானும்!!!
தகவல் பகிர்ந்தமைக்கு நன்ற் அமுதா!
வருகைக்கு நன்றி:
ஜமால், ஆதவா, செய்யது
அமித்து அம்மா, ராமலஷ்மி மேடம், திகழ்மிளிர்
அபுஅஃஸர், அப்துல்லா, தீஷு, ஜீவன், முல்லை
நல்ல தகவல் அமுதா, நன்றி
நான் A+. நல்ல உடல் நலத்துடன் இருக்கிற எல்லாருமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாராளமா ரத்த தானம் கொடுக்கலாம்
அமுதா நானும் மின்னஞல் சுட்டிகளைச் சேகரித்துக்கொண்டேன்.நன்றி.
இத்தனை வகையில் இரத்தமா?அதுதான் மனிதனுக்கு மனிதன் குணங்கள் வித்யாசப்படுகிறதோ!
வாழ்த்துகள் அமுதா..
உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடன் இணையத்தில் குட்பிளாக்ஸில் இடம் பெற்றுள்ளது.
http://youthful.vikatan.com/youth/index.asp
வருகை தந்த அனைவருக்கும் நன்றி. தகவலை நினைவில் வைத்து இயன்றவரை பயன்படுத்திகொள்ள வேண்டுகிறேன்.
Syed Abdul kadhar.M said...
வாழ்த்துகள் அமுதா..
உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடன் இணையத்தில் குட்பிளாக்ஸில் இடம் பெற்றுள்ளது.
http://youthful.vikatan.com/youth/index.asp
தகவலுக்கு மிக்க நன்றி Syed Abdul kadhar.M
அந்த Syed Abdul kadhar.M நாந்தானுங்கோ...
வேற ஐடில வந்து சொல்லிட்டேன்.
/*அந்த Syed Abdul kadhar.M நாந்தானுங்கோ...
வேற ஐடில வந்து சொல்லிட்டேன்*/
ஆஹ்... தலைவா... மன்னிச்சுடுங்க... எனக்கு புத்தி கொஞ்சம் மட்டு....:-))
யூத்ஃபுல் விகடனில் கண்டேன். தொடர்ந்து இது போன்ற நல்ல பல பதிவுகள் தந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் அமுதா.
/*ராமலக்ஷ்மி said...
யூத்ஃபுல் விகடனில் கண்டேன். தொடர்ந்து இது போன்ற நல்ல பல பதிவுகள் தந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் அமுதா.*/
நன்றி மேடம்
வாழ்த்துகள் அமுதா..யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு!
வாழ்த்துக்கள் (யூத்விகடன்)
Post a Comment