என் மேகம் ???

Thursday, December 11, 2008

மெளனம்


நீ சிரித்திருந்த போழுது...


மெளனம் சங்கீதமானது

சொல்லாத மொழிகள்
மயிலிறகாக வருடின

காரணங்கள் எதுவும்
நமக்குள் தேவைப்படவில்லை

மெளனம்...
இனிய மொழி ஆனது

ஆனால்...
நீ முறைத்திருந்தபொழுது...



மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது

பேசாத வார்த்தைகள்
மனதைக் குத்துகின்றன

கூறாத காரணங்கள்
நன்றாகப் புரிகிறது

மெளனத்தின் கனத்தை
இனி சுமக்க முடியாது

இந்த இரும்புத்திரையை
இனிய மொழியாக்குவோம்

17 comments:

Unknown said...

அமுதா,

கவிதை ஓகே ரகம். வழக்கமான டைப். கொஞ்சம் வித்தியாசமாக முயற்சிக்கலாமே

கவிதை காதலி/காதலன் பற்றி தான் பொருந்துகிறது. குழந்தை படம் எதற்கு?

//நீ சிரித்திருந்த போழுது.//

சிரிக்கும்போது எப்படி மெளனம் வரும். ஒரு சின்ன ஓசை வருமே?

என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை எல்லாம் உண்டு.

சாத்தலாம் / வாழ்த்தலாம்.கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே .ரவிஷங்கர்

ஆயில்யன் said...

எனக்கும் கூட இப்படி நிறைய தடவை நடந்திருக்கு மெளனமா பேசாமா ரொம்ப நாள் இருந்தா அப்படியே பயங்கர டென்ஷன் ஆகி போன் போட்டு நண்பர்களை திட்டி சமாதானமாகிய நாட்கள் தான் நினைவுக்கு வருது!

இப்பவும் ரெண்டு பயலுங்க இப்படித்தான் திரியறனுங்க! போன் பண்ணி திட்டினாத்தான் சரியா வரும்!

பரிசல்காரன் said...

//
மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது//

ரொம்ப நல்ல சிந்தனைங்க.

உங்க போன பதிவின் மொழி நடையும், எழுத்தும் ரொம்ப அருமை! உங்க பொண்ணை மேடம், மேடம்ன்னு சொல்லிருந்தது க்ளாஸ்!!

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிஷங்கர்

அமுதா said...

வாங்க ஆயில்ஸ்.
//இப்பவும் ரெண்டு பயலுங்க இப்படித்தான் திரியறனுங்க! போன் பண்ணி திட்டினாத்தான் சரியா வரும்!

நீங்க திட்டு வாங்காம பாத்துக்கங்க...

அமுதா said...

வாங்க பரிசல்.. உங்கள் (முதல்) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தமிழ் அமுதன் said...

மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது!


அசத்தல்!

நட்புடன் ஜமால் said...

\\நீ சிரித்திருந்த போழுது...


மெளனம் சங்கீதமானது\\

அருமை.

காதலன்/காதலி - இவர்களின் புன்னைக்கூட சிரிப்பாய் சங்கீதமாய் ... ம்ம்ம் ... நல்லாருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது\\

நல்ல முயற்சி தான்.

மொளனத்தின் ஓசை பொதுவாய் இதையத்தில் தான் அறையும் (எனக்கு அப்படித்தான் நடந்தது)

நட்புடன் ஜமால் said...

\\மெளனத்தின் கனத்தை
இனி சுமக்க முடியாது\\

இது ரொம்ப நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

குழந்தை படம் ரொம்ப டாப்பு.

அமுதா said...

நன்றி ஜீவன்

//நல்ல முயற்சி தான்.

மொளனத்தின் ஓசை பொதுவாய் இதையத்தில் தான் அறையும் (எனக்கு அப்படித்தான் நடந்தது)


ம்.. "இதயத்தில் அறைகிறது" நல்லா இருக்கு. நான் எழுதும் பொழுது மெளனம் காதை அடைக்கிற மாதிரி இருந்தது, அதான் அப்படி எழுதினேன் :-)

ராமலக்ஷ்மி said...

//மெளனம் சங்கீதமானது

சொல்லாத மொழிகள்
மயிலிறகாக வருடின//

இது அருமை என்றால்..

//மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது//

வெகு அருமை அமுதா.

மெளனத்தை சங்கீதமாய்
இனிய மொழியாய் ரசித்து..
பிறகு
ஓசையாய் கனமாய் உணரும் விதமே ஒரு அழகிய கவிதை.

அமுதா said...

மிக்க நன்றி இராமலஷ்மி மேடம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மெளனத்தின் கனத்தை
இனி சுமக்க முடியாது
ம், கண்டிப்பாக


இந்த இரும்புத்திரையை
இனிய மொழியாக்குவோம்

அருமையாக இருக்கிறது.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

சில வரிகள் அருமை..

தொடரட்டும்..

வாழ்த்துக்கள்