என் மேகம் ???

Monday, December 29, 2008

பறவைகள் பலவிதம்...



கிருஸ்துமஸ் அன்னிக்கு புலிகாட் போகலாம்னு ப்ளான். ஆனால் சில மக்கள் அங்கே குடும்பத்தோடு போக வேண்டாம்னு அறிவுரை வழங்கியதால் (அப்படியா? எனி கமெண்ட்ஸ்?), வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சரணடைந்தோம்.

அங்கே மதிய சாப்பாடு கிடைக்காது என்று புளிச்சோறும், தயிர்ச்சோறும் எடுத்துக்கொண்டோம். காரில் ஒரு மழலைப்பட்டாளத்தோடு காலை பத்து மணிக்குப் பயணம் தொடங்கியது. பரனூர் வரை சாதாரண காட்சிகள் தான். ஆனால் பரனூரில் இருந்து சில தொலைவு வரை இயற்கை காட்சி மிக மிக அழகாக இருந்தது. நம் சென்னை அருகிலா இது என்று ஆச்சரியப்படுத்தியது. வேடந்தாங்கலுக்குப் பிரியும் ஒரு கிளைச் சாலையை இம்முறை ஒழுங்காகப் பார்த்ததால் ஊரைச் சுற்றாமல் நேராக வேடந்தாங்கலுக்குப் போகும்பொழுது மணி 12.30.

பனங்கிழங்கு அவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயும் , கொய்யாவும் பச்சை பனங்கிழங்கும் கிடைத்தன. 20 ரூபாய்க்கு பைனாகுலர் வாடகைக்குக் கொடுத்தார்கள். 20ருபாய்க்கு வாங்கும் பைனாகுலரை விட கொஞ்சம் பரவாயில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றோம்.



மிக அழகான அமைதியான இடம். ஆரவாரமில்லாத கூட்டம். தண்ணீர் ஏரியில் தளும்பிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தும், அமர்ந்தும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் கரையில் நடந்தவாறு இயற்கையைப் பருகிக் கொண்டிருந்தோம். நாரை, கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நீர்க்காகம், வாத்து என்று பலப்பல பறவைகள். சென்ற முறை பல பறவைக் குஞ்சுகளைக் காண முடிந்தது. இம்முறை ஒரே ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தருவதை மட்டுமே காண முடிந்தது. மீதியெல்லாம் வளர்ந்து விட்டன போலும்.

கரை நெடுக வெயிலின் கடுமை தெரிய விடாத நிழல் தரும் மரங்கள். ஆங்காங்கே நின்று காண வாட்ச் டவர், மற்றும் நின்று காண வசதியாக "platform" இருந்தது. வழி முழுமையும் ஓய்வெடுக்க பெஞ்சுகள், தாகம் தீர்க்க குடிநீர் குழாய், கழிவறை வசதி என்று எல்லாம் இருந்தன. முன்பெல்லாம் குரங்குகள் நிறைய இருக்கும், இம்முறை அவ்வளவாகத் தட்டுப்படவில்லை.

கட்டி வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் பறவைகளை இரசித்தோம். குழந்தைகள் எல்லாம் நடைபாதையில் ஓடி விளையாடினர். நேரம் சென்றதே தெரியவில்லை. நான்கு மணிக்குப் பின்பு இன்னும் பல பறவைகள் வர ஆரம்பித்தன. ஐந்து மணிவரை இரசித்துவிட்டுக் கிளம்பினோம். வேடந்தாங்கலை விசிட் அடிக்க சரியான நேரம் நவம்பர் முதல் சனவரி வரை என தமிழ்நாடு சுற்றுலா வலைதளம் கூறுகிறது.

17 comments:

ராமலக்ஷ்மி said...

பறவைகளைப் பார்ப்பதே பரவசம்தான். பெங்களூரிலிருந்து மைசூருக்கு போகும் வழியில் சற்று முன் வருகிற ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் பார்க்க வேண்டிய ஒன்று. அதே போல எங்கள் திருநெல்வேலிப் பக்கம் கூடங்குளத்தில் அபூர்வ வகைப் பறவைகளைப் பார்க்கலாம்.

ஆயில்யன் said...

பாடப்புத்தகங்களில் மட்டும் படித்திருந்த இடம் வேடந்தாங்கல்!

வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கும் இடமும் கூட!

நல்லதொரு விடுமுறையாக பயணமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் ! :))

ஆயில்யன் said...

//. இம்முறை ஒரே ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தருவதை மட்டுமே காண முடிந்தது. மீதியெல்லாம் வளர்ந்து விட்டன போலும். //

இறக்கை முளைச்சுடுச்சு !!!

வேடந்தாங்கலை விட்டு பறந்து போயிடுச்சுங்கபோல....!

:))

அகநாழிகை said...

வேடந்தாங்கல் சீசன் என்பது இப்போதெல்லாம் குறிப்பிட்ட மாதத்தில் என்று வகைபடுத்த முடியவில்லை. பறவைகள் வரும் பருவம் மாறி மாறி வருகிறது.. இந்த ஆண்டு சீசன் முன்பாகவே தொடங்கி விட்டது. நீங்கள் மலை வையாவூர் கோயில் வழியாக வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பக்கத்திலேயே கரிக்கிலி என்ற கிராமத்திலும் பறவைகள் வருகை அதிகம் உள்ளது. வேடந்தாங்கலை ரசிக்க சரியான நேரம் அதிகாலை நான்கு முப்பது முதல். வேடந்தாங்கலுக்கு எட்டு கிலோ மீட்டெர் தொலைவில் உள்ள மதுராந்தகத்தில் நான் வசிக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பனங்கிழங்கா.. ஹ்ம்.. எஞ்சாய் செய்திட்டீங்களா...
சின்னப்பிள்ளையில் போனது வேடந்தாங்கல் இன்னொருமுறை போக எப்ப டைம் கிடைக்குமோ தெரியல..

அ.மு.செய்யது said...

//கிருஸ்துமஸ் அன்னிக்கு புலிகாட் போகலாம்னு ப்ளான். ஆனால் சில மக்கள் அங்கே குடும்பத்தோடு போக வேண்டாம்னு அறிவுரை வழங்கியதால் //

என்ன காரணம் ????

அ.மு.செய்யது said...

//பனங்கிழங்கு அவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயும் , கொய்யாவும் பச்சை பனங்கிழங்கும் கிடைத்தன.//

வெறும் அற்ப பெருமைக்காக Lays,Kurkure & Cadbury's dairymilk என்று என்றும் அலையும் கூட்டத்தினர் மத்தியில்,இது போன்று இயற்கை வஸ்துக்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பது மற்றரை யோசிக்க வைக்கலாம்.

Dhiyana said...

//கரை நெடுக வெயிலின் கடுமை தெரிய விடாத நிழல் தரும் மரங்கள்.//

கேட்கும் பொழுதே குளிர்ச்சி அமுதா.

கணினி தேசம் said...

வேடந்தாங்கல் சென்று வந்ததுபோல் இருக்கிறது.. பதிவை படித்தபிறகு!!

கணினி தேசம் said...

//அங்கே மதிய சாப்பாடு கிடைக்காது என்று புளிச்சோறும், தயிர்ச்சோறும் எடுத்துக்கொண்டோம்.//

தமிழ்நாட்டின் பேவரைட் உன்வாயிற்றே ..அன்றும்..இன்றும்..என்றென்றும் !!

கணினி தேசம் said...

//ஆங்காங்கே நின்று காண வாட்ச் டவர், மற்றும் நின்று காண வசதியாக "platform" இருந்தது. வழி முழுமையும் ஓய்வெடுக்க பெஞ்சுகள்....
//

பரவாயில்லையே வருபவர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார் போல..

நல்ல விசயம்தான்.

சந்தனமுல்லை said...

//பறவைகள் சரணாலயத்தைச் சரணடைந்தோம்.
//

:-)

அமுதா said...

/*பறவைகளைப் பார்ப்பதே பரவசம்தான். */ - ஆமாம் மேடம்.

/*நல்லதொரு விடுமுறையாக பயணமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் ! :))*/
ஆமாம் ஆயில்யன், ஒரு பெரிய மழலைப்பட்டாளத்தோடு சென்றிருந்தோம். எனவே வெகு இனிமை

அமுதா said...

/*பறவைகள் வரும் பருவம் மாறி மாறி வருகிறது.. */
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகநாழிகை. ம்.. இப்ப தான் எல்லாமே மாறுகிறதே...

/*பனங்கிழங்கா.. ஹ்ம்.. எஞ்சாய் செய்திட்டீங்களா*/
ஆமாம் கயல்விழி... 5 கிழங்கு 5 ரூபாய் தான்.. வாங்கி ஆசை தீர சாப்பிட்டோம்...

அமுதா said...

/*கேட்கும் பொழுதே குளிர்ச்சி அமுதா.*/
நன்றி தீஷு அம்மா...

/*வேடந்தாங்கல் சென்று வந்ததுபோல் இருக்கிறது.. பதிவை படித்தபிறகு!!*/

நன்றி கணினி தேசம்.

நன்றி முல்லை..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பார்த்தாலே பரவசம்தான் பறவைகளை..

ம், நல்லவிதமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் ஒரு விடுமுறை நாளை.

Earn Staying Home said...

எனக்கு மிகவும் பிடித்தது பனங்கிழங்கு