தேடித் தேடிக்
கொடுத்த புத்தகம்.
அவர்
படித்துக் கொண்டிருக்கும் பொழுது
கதை பிடித்திருக்கிறதா என்று
தொண்டை வரை வந்தது கேள்வி...
கதையை முடிக்கட்டும்
என்று காத்திருந்தது
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது
***************
வெற்றிடம்...
அறிவியல் விளக்கம்
காற்றில்லாத இடம்
எப்படி இருக்கும்?
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை
**************
நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்
***********
11 comments:
அமுதா,
மூணுமே நல்லா இருக்கு. முதல் கவிதை மிகப் பிடித்தது. :)
அனுஜன்யா
\\தேடித் தேடிக்
கொடுத்த புத்தகம்.
அவர்
படித்துக் கொண்டிருக்கும் பொழுது
கதை பிடித்திருக்கிறதா என்று
தொண்டை வரை வந்தது கேள்வி...
கதையை முடிக்கட்டும்
என்று காத்திருந்தது
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது\\
ஆரம்பமே அசத்தல்
\\வெற்றிடம்...
அறிவியல் விளக்கம்
காற்றில்லாத இடம்
எப்படி இருக்கும்?
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை\\
அறிவியல் கவிதையோ
\\நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்\\
அருமையான அறிவுரை.
kavithai nalla irukku
// வெற்றிடம்...
அறிவியல் விளக்கம்
காற்றில்லாத இடம்
எப்படி இருக்கும்?
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை //
பொருள் பொதிந்த கவிதை தான் என்றாலும், கருத்துகள் இலைமறை காயாக இருப்பதும் அழகு சேர்க்கிறது.
அருமை அமுதா !!!!!!!
வாழ்த்துகள் !!!!
நன்றி அனுஜன்யா
நன்றி ஜமால்
நன்றி DG
நன்றி அ.மு.செய்யது
நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்
படிக்கும்போதே ஒருவித பயம் தொத்திக்குது.
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது//
ம்ஹும் , நெறைய இப்படித்தான் சிக்கிக்கொண்டே இருக்கிறது. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை//
:)-
மூன்றுமே அருமை!
உயர் தரம்!
மூன்றும் முத்துக்கள்.
//இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது//
சிக்கிய வார்த்தைகள் பெரும்பாலும்
மக்கியேதான் போய் விடுகின்றன.
//மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை//
அருமை அமுதா, மூச்சுத் திணறல் காற்றில்லாத இடத்தில் மட்டுமா வருகிறது..காலம் காட்டும் பல காட்சிகளாலும்.. சொல்லும் பல பாடங்களாலும் கூடத்தான்.
//நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்//
அருமை அமுதா:)!
நன்று! ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment