ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்ல புது காரணம் வேணுமா என்ன? வயிறு வலிக்குது, வேன் கூட்டமா இருக்கு, பரத் அடிக்கிறான், மஞ்சரி என் பக்கத்தில் உட்காரலை, மோனிஷா என் கண்ணைக் குத்தறாள், தூக்கம் வருது, டயர்டா இருக்கு, தலை வலிக்குது ... மேலும் , மேலும்....
அப்படி இப்படினு பேசிப் பார்த்தால் தான் நிஜ காரணம் வரும்.ஒரு காரணம், மேடம் வந்தவுடன் என் பெற்றோர் சற்று தொலைவில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். எனவே மேடம் மிஸ் பண்ணியது அந்நேரத்தில் சுட்டி டி.வி.யில் வரும் டோரா. அதனால் ஸ்கூல் போக விருப்பமில்லை. "சரி , டோரா சி.டி வாங்கி தரேன் ஆசை தீர பாரு", என்றவுடன் ப்ராப்ளம் தீர்ந்தது. (இந்த டோரா அதன் பிறகு 2 முறை வரும், ஆனால் மேடமுக்கு ஒண்ணு விடாமல் பார்க்கணும்.. சலிக்கவே சலிக்காதா??)
இன்னிக்கு பரத் அடிக்கிறான் தான் காரணம். நிஜ காரணம் போலும்...
"சரி மிஸ்ட்ட சொல்றேன்", என்றேன்.
"இல்லை , வேன்ல அடிக்கிறான்" , என்றாள்
"சரி ஆயாம்மாட்ட சொல்றேன்", என்றேன்
என்ன நினைத்தாலோ தெரியவில்லை, ஸ்கூலில் நுழையும் பொழுது, "நீ சொல்ல வேண்டாம், நானே சொல்லிக்கிறேன்", என்றாள். ஆச்சரியமாக இருந்தது. தன் நண்பர்கள் பற்றி பெற்றோர் ஆசிரியரிடம் கூறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றுகிறது?. ஆனால் நினைத்துக் கொண்டேன் "ம்.. என் குட்டிப் பெண் வளர ஆரம்பித்து விட்டாள்."
"ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."
ஸோ ஸ்வீட் செல்லக்கட்டி
13 comments:
படித்துவிட்டு வருகிறேன்.
\\"ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."\\
ஆஹா ஆஹா.
உண்மையில் வளர தொடங்கிவிட்டார்.
So Sweet
//ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ///
:)))))))))))
////ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ/////
:-))
டோரா , என் பையனோட உட்கார்ந்து நானும் பார்ப்பேன்
இதுதான் நிஜமாவே குழந்தைகளுக்கானது.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று சொல்லி ஒளிபரப்பப்படும் மற்ற எந்த நிகழ்ச்சியும் குழந்தைகளுக்கானது மாதிரி தெரியவில்லை
//"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."
ஸோ ஸ்வீட் செல்லக்கட்டி//
ஸோ ஸோ ஸ்வீட் கண்ணுக்குட்டி:)))!
ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."யப்பா! அம்மா மேல்
என்ன அக்கறை
உங்க பெண்ணுக்கு!!!!
CHOO CHWEET
//நீ சொல்ல வேண்டாம், நானே சொல்லிக்கிறேன்///
குட்! பாப்பா என்னங்க படிக்குது?
//பாப்பா என்னங்க படிக்குது?
L.K.G
டோரா ஒருவகையில் என் பட்டூவிற்கு பல வார்த்தைகளை கற்றுக்கொடுத்தது.
அதே போல் கதை சொல்லும் வழக்கத்தையும். இப்போது பத்துக்கும் மேற்பட்ட சிடிகள் உண்டு.
குழந்தைகள் உலகமே தனி.. சூப்பர்..
குட்டிக்கு வாழ்த்துக்கள் .. அம்மாவுக்கும்தான்
நன்றி
Post a Comment