குட்டிப் பெண்ணுக்கு ஒரு வாரம் கழிச்சு ஸ்கூல். எல்லாம் நிஷா புயலின் உபயம். மேடமுக்கு பள்ளி செல்ல மனமில்லை. நான் வீட்டில் இருப்பேன் என்ற உறுதி மொழி வாங்கி பள்ளிக்குச் சென்று வந்தாள். எனக்கு நெட் சதி செய்ததால் வேலை செய்வது சிரமமாக இருந்தது. அவளிடம் அனுமதி பெற்று அலுவலகம் செல்லலாம் என்றிருந்தேன்
"குட்டிம்மா, நான் ஆபீஸ் போய்ட்டு சாயங்காலம் வந்துடறேன்."
"முடியாது, எனக்கு நீ வேணும்"
"சரி. நான் வீட்ல இருந்தால் டி.வி. பார்க்கக்கூடாது"
"முடியாது, எனக்கு நீ வேணும்"
சற்று பொறுத்து... "சரி நீ போ. நான் சமத்தா இருக்கேன்"
இது போன்று தான் முன்பொருமுறை மேடம் டிரஸ்ஸிங் டேபிளை உருட்டிக் கொண்டிருந்தாள். "பாப்பா, எல்லாத்தையும் இறைக்காதே..", என்றேன். உடனே என் கைப்பையை எடுத்து கொடுத்து, "ம். நீ ஆபீஸ் போ" என்றாள்.
----------
பெரியவளை சாப்பிட சொல்லி தொண்டை வறண்டு விட்டது. மணி "1:50".
"இங்க பாரு முள், 11க்கு வர்றதுக்குள்ளே சாப்பிடணும்"
"சின்ன முள்ளு தானே, சாப்பிட்டுடுவேன்"
---------
அவளது சித்தப்பா குழந்தையைப் பாட்டு பாடி, கதை கூறி தூங்க வைத்தேன். இவளுக்கும் சேர்த்து தான்.
அவள் தூங்கிய பின் "இனிமேல் நீ எனக்கு பாட்டு பாடாதே, கதை சொல்லாதே , எல்லாம் அவளுக்கே செய்"
"என்ன செல்லம், உன் தங்கச்சி தானே"
"ஆனால் நீ எனக்கு மட்டும் தான் அம்மா, என்னை மட்டும் தான் கொஞ்சணும்"
"அப்ப கிரியைக் கொஞ்சக் கூடாதா?" (கிரி 2 மாதம் முன் பிறந்த என் மருமகன்)
"அவன் சின்ன பையன் அவனை மட்டும் கொஞ்சு. மத்தவங்க எல்லாம் வளர்ந்தாச்சு, அதனால் என்னை மட்டும் கொஞ்சு"
-------------
9 comments:
மீ த ஃபர்ஸ்ட்டேய் :)
//இது போன்று தான் முன்பொருமுறை மேடம் டிரஸ்ஸிங் டேபிளை உருட்டிக் கொண்டிருந்தாள். "பாப்பா, எல்லாத்தையும் இறைக்காதே..", என்றேன். உடனே என் கைப்பையை எடுத்து கொடுத்து, "ம். நீ ஆபீஸ் போ" என்றாள்.//
LOL :))
//இது போன்று தான் முன்பொருமுறை மேடம் டிரஸ்ஸிங் டேபிளை உருட்டிக் கொண்டிருந்தாள். "பாப்பா, எல்லாத்தையும் இறைக்காதே..", என்றேன். உடனே என் கைப்பையை எடுத்து கொடுத்து, "ம். நீ ஆபீஸ் போ" என்றாள்.
//
:))))
டெர்ரா அதட்டுனா, பாப்பா ஆபிஸ் பேக் கொடுத்து அட்டாக் பண்ணிடுச்சு போல :))))
//அவன் சின்ன பையன் அவனை மட்டும் கொஞ்சு. மத்தவங்க எல்லாம் வளர்ந்தாச்சு, அதனால் என்னை மட்டும் கொஞ்சு"
//
பாப்பா சொல்றதுதான் கரீக்ட்டு!
நீங்கள் ஆபிஸ் போவது பல விதத்தில் உங்க குட்டிப் பொண்ணுக்கு வசதியா இருக்கு போல அமுதா.
//"சின்ன முள்ளு தானே, சாப்பிட்டுடுவேன்"//
சிரித்துக் கொண்டே இருக்கிறேன்:)))!
:-))
Clever Girl. எவ்வளோ சுட்டியா பேசுறாள்
இந்த மாதிரி பேசுறது எல்லாம்
உங்ககிட்ட இருந்துதான்,அவங்களுக்கும்
வந்து இருக்கும்!
Post a Comment