மண்ணின் மணத்தோடும்
மழையின் ஓசையோடும்
என்முன் மலர்ந்தது ஒரு நாள்
நறுமணத்தை முகர்ந்து
மெல்ல அனுபவிக்கும் இயல்புடன்...
இந்நாளை ருசிக்க விழைகிறது மனம்.
அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது
புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...
மென்மையாக முத்தமிட்டு
புன்னகை கலையாது துயிலெழுப்பி
கதை பேசி காலை கடன் முடித்து
பசித்த பின் ருசித்து உணவு உண்டு
எலி வாலா அணில் வாலா
என்று கூரையில் பார்த்து சிரித்த
என் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து
முத்தமிட்டு வழியனுப்ப யோசிக்கையில்
அவசரமாக நினைவு வருகிறது
பள்ளி பேருந்தின் நேரம்
மென்மையான முத்தத்துடன் மட்டுமே
தொடங்கியது அந்த பரபரப்பான காலை...
7 comments:
//அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது
//
அழகாய் இருக்கிறது :)
புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...
.....அழகு
//மென்மையான முத்தத்துடன் மட்டுமே
தொடங்கியது அந்த பரபரப்பான காலை...//
அதுவே ஆற்றி விடும் இயலாமையின் இன்னலை!
நன்றி ஆயில்யன்
நன்றி ஜீவன்
நன்றி இராமலஷ்மி மேடம்
இது உங்களின் மழைக்கால நினைவுகள்?
//மென்மையாக முத்தமிட்டு
புன்னகை கலையாது துயிலெழுப்பி
கதை பேசி காலை கடன் முடித்து
பசித்த பின் ருசித்து உணவு உண்டு//
இதில் இருக்கிறது நமது பொறுமையின் எல்லை!! :-))
/*இதில் இருக்கிறது நமது பொறுமையின் எல்லை!! :-))*/
உண்மை... அதனால் தான்
"மென்மையான முத்தத்துடன் மட்டுமே
தொடங்கியது அந்த பரபரப்பான காலை..."
புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...
NICE.
Post a Comment