என் மேகம் ???

Wednesday, October 22, 2008

தித்திக்கட்டுமே தீபாவளி!!!!

என் கணவரது அலுவலகத்தில், தீபாவளி நெருங்கும் வேளையில், ஆதரவற்ற சில குழந்தைகளின் விருப்பங்களைக் கண்டறிந்து, நிறைவேற்ற விரும்புவர்கள் செய்யலாம் என்று ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் விருப்பப் பட்டிருந்ததெல்லாம் டிரஸ், வாட்ச், பொம்மை, பள்ளிப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களே. நல்லதொரு முயற்சியாகத் தெரிந்தது. பகிர்ந்து கொள்ளுவது சந்தோஷத்தை பன்மடங்காக்கும். எனவே இந்த தீபாவளியை நாமும் இன்னொருவரின் சின்ன மகிழ்ச்சிக்காக நம்மால் முடிந்த அளவில் செலவிட்டால், தித்திக்குமே தீபாவளி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

9 comments:

சந்தனமுல்லை said...

வாவ்!! சூப்பர் ஐடியா!!

ராமலக்ஷ்மி said...

தீபாவளி சமயத்தில் பகிர்தலின் இன்பத்தை அவசியத்தைக் குழந்தைகள் உணந்திடும் வகையில் ஒவ்வொரு வருடமும் இது போல பொருட்களைச் சேகரித்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகின்றன பெங்களூரில் பல பள்ளிகள்.

ஆயில்யன் said...

இதே கான்செப்ட் சம்பவம் ஒன்றினை பற்றியும் பதிவு எழுதி டிராப்டாக தூங்கிக்கொண்டிருக்கிறது சில நாட்களாய் என்னிடத்தில்...!

நல்ல விசயம் ஊக்குவிக்கவேண்டும்!

இனிய நாளில் அனைவரும் இன்பமாய் இருக்க நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முயல வேண்டும் :)

அமுதா said...

நன்றி முல்லை

தகவலுக்கு நன்றி ராம்லஷ்மி மேடம். தனிப்பட்ட நபர்களாக செய்வது போக , பள்ளி மற்றும் அலுவலகங்களில் செய்தால் விழிப்புணர்ச்சியும் இருக்கும், நிறைய பேர் பயன் அடைவார்கள்

நன்றி ஆயில்யன். சீக்கிரம் பதிவாக போடுங்கள். நல்ல விஷயத்தை எத்தனை தடவை வேண்டுமானலும் சொல்லலாம், ஆனால், உடனே சொல்லிடணும். (நன்றே செய் , அதை இன்றே செய்)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாவ்!! சூப்பர் ஐடியா!!

REPEATTTTTTTTUU!

வேளராசி said...

அரும்புகள் இயக்கம் பற்றி மேலும் அறிய எனது பதிவைப் பார்க்க அழைக்கிறேன்.

அமுதா said...

தகவலுக்கு நன்றி வேளரசி

ரிதன்யா said...

நல்ல எண்ணம் அமுதா,
இது வளர வாழ்த்துகள்..

அமுதா said...

நன்றி ரிதன்யா