என் மேகம் ???

Friday, October 17, 2008

அன்புத் தொல்லை

பெண் பிள்ளைகள் என்றாலே அப்பா மீது தனிப்பாசமும் உரிமையும் இருக்கும். எங்க வீட்லயும் இதே கதை தான். ஆனாலும் அப்பப்ப குட்டீஸ் எல்லாம் அம்மா பக்கம் சாய்ந்து "மகளிர் அணி" உருவாக்கி கலாய்ப்போம்.

போன வாரம் , ஊரைச் சுத்திட்டு வந்து மதியம் நல்லா படுத்து தூங்கிட்டு இருந்தோம். பெரியவங்க தூங்கினால் சின்னவங்க தூங்கறது மரியாதை இல்லைங்களே, அதனால் என்
பொண்ணுங்க முழிச்சிட்டு விளையாடிட்டு இருந்தாங்க...திடீர்னு குட்டிப் பெண்ணின் அழுகை.

விஷயம் என்ன என்றால், பொண்ணு எதுக்கோ அப்பாவை எழுப்பி இருக்காள். அப்பா திடீரென எழுப்பப்பட்டதால் மிரண்டு போய் ஒரு கத்து கத்த, பொண்ணு டென்ஷன் ஆய்ட்டா... சும்மாவா... அம்மா திட்டலாம், அப்பா திட்டலாமா?

"ஏண்டா செல்லம் அப்பாவை எழுப்பின, அம்மாவை எழுப்பக் கூடாதா?", நான்
"நீ தூங்கிட்டு இருந்தம்மா. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எழுப்பலை", குட்டிப்பொண்ணு

ஆஹா... இது அப்பா மேல உள்ள உரிமையா?, அம்மா மேல உள்ள பாசமா?... என்ன லாஜிக்கோ? ஒண்ணும் புரியல. ஆனால் சிரிப்பு வந்தது.

18 comments:

இனியவள் புனிதா said...

:-)

ராமலக்ஷ்மி said...

//ஆஹா... இது அப்பா மேல உள்ள உரிமையா?, அம்மா மேல உள்ள பாசமா?...//

ரெண்டும்தான்:)!

//என்ன லாஜிக்கோ? ஒண்ணும் புரியல.//

இதெல்லாம் புரிய வேண்டியதேயில்லை. பூரிக்க வேண்டியது.

//ஆனால் சிரிப்பு வந்தது.//

மனம் நிறைந்த சிரிப்பு!

அமுதா said...

/*இதெல்லாம் புரிய வேண்டியதேயில்லை. பூரிக்க வேண்டியது.*/
உண்மைதாங்க... இரசித்ததற்கு நன்றி

தங்கள் (முதல்) வருகைக்கு, நன்றி புனிதா

ஸ்ரீமதி said...

நான் கூட இப்படி தான்... ஆனா நான் எழுப்பும்போது என் அப்பாவுக்கு முன்னாடி அம்மா எழுந்துடுவாங்க.. :)) நான் இதுக்கு சொல்லும் காரணம் "அம்மா இப்ப தான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு படுத்துருக்காங்க.. பாவம் தானே.." அப்படின்னு :))

ஆயில்யன் said...

//இதெல்லாம் புரிய வேண்டியதேயில்லை. பூரிக்க வேண்டியது.
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் :)

அமுதா said...

வருகைக்கு நன்றி ஸ்ரீமதி. நீங்க சொன்ன மாதிரி, ரொம்ப வேலை செய்றதா என் பொண்ணு நினைச்சிருக்கலாம்.

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
நான் கூட இப்படி தான்... ஆனா நான் எழுப்பும்போது என் அப்பாவுக்கு முன்னாடி அம்மா எழுந்துடுவாங்க.. :)) நான் இதுக்கு சொல்லும் காரணம் "அம்மா இப்ப தான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு படுத்துருக்காங்க.. பாவம் தானே.." அப்படின்னு :))
///

அடி ஆத்தி அமுதா அக்கா சொல்றது அவுங்க குட்டீஸ்ங்கள!

ஆயில்யன் said...

//அமுதா said...
வருகைக்கு நன்றி ஸ்ரீமதி. நீங்க சொன்ன மாதிரி, ரொம்ப வேலை செய்றதா என் பொண்ணு நினைச்சிருக்கலாம்.
//

ம்ம் ஒரு வேளை குட்டீஸ்கள் தப்பா கூட நினைச்சிருக்கலாம்! (அப்பாத்தானே இம்புட்டு வேலையும் பார்த்தாரு அவரையே கேப்போம் அம்மாவுக்கு 1ம் தெரியாதுன்னு )

:))))))))))))))))))

அமுதா said...

ம்ம் ஒரு வேளை குட்டீஸ்கள் தப்பா கூட நினைச்சிருக்கலாம்! (அப்பாத்தானே இம்புட்டு வேலையும் பார்த்தாரு அவரையே கேப்போம் அம்மாவுக்கு 1ம் தெரியாதுன்னு )

:-) இப்படியும் இருக்கலாம் ஆயில்யன்

AMIRDHAVARSHINI AMMA said...

ஆனால் சிரிப்பு வந்தது.

:)))))))

ஜீவன் said...

"ஏண்டா செல்லம் அப்பாவை எழுப்பின, அம்மாவை எழுப்பக் கூடாதா?"

அப்படி எழுப்பினா? எழுந்துடுவீங்க ??
நிஜமாவா??

என்னைய தொந்தரவு பண்ணாத போய் அப்பாகிட்ட
கேட்டுக்க!! இப்படிதாங்க அதிகம் நடக்குது!!
சும்மா போங்க!

(அப்பாத்தானே இம்புட்டு வேலையும் பார்த்தாரு அவரையே கேப்போம் அம்மாவுக்கு 1ம் தெரியாதுன்னு ) இப்போ சொன்னிங்களே இது சரி

அமுதா said...

வருகைக்கு நன்றி அமித்து அம்மா

வாங்க ஜீவன்...ஏதோ பதிவுக்காக 1ம் தெரியாதுனு சொல்லிக்க வேண்டியது தான். 100 தடவை சொன்னாலும் பொய் உண்மை ஆகிடுமா? அதனால், அம்மாக்கு 1ம் தெரியாதுனு சொல்லிக்க வேண்டியது தான் :-)

குடுகுடுப்பை said...

தினமும் எங்க வீட்டில இதுதான் நடக்க்குது, சனி, ஞாயிறுன்னா அம்மாவை எழுப்பக்கூடாதுன்னு ஒரு சட்டமே வெச்சுருக்கா என் பொண்ணு.

புதுகை.அப்துல்லா said...

அட :)

தீஷு said...

பொண்ணுகளுக்கு எல்லாமே அப்பா தான். அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாதுனு இப்போவே என் பொண்ணு நினைக்க ஆரம்பித்து விட்டாள். அவளாகவே உனக்குத் தெரியாது அம்மா, நீ தான் ஸ்கூல் போகலயே என்கிறாள்.

அமுதா said...

வருகைக்கு நன்றி புதுகை அப்துல்லா
வருகைக்கு நன்றி தீஷு (அம்மா)

தவநெறிசெல்வன் said...

எனக்கு தோன்றுவது,
இரண்டாவது குழந்தைக்கு பிறகு முதல் பெண் அப்பாதான் எல்லாம் என்று ஆகிவிடுகிறாள் சிறிது காலத்திற்கு என்று நினைக்கிறேன், மேலும் காரியம் நடக்க வேண்டுமானால் வீட்டில் சக்திவாய்ந்தவர்கள் யார் என்பது குழந்தைகளுக்கு தெரிந்து விடுகிறது, அப்பா இருந்தால் அப்பா, ஊரில் இல்லாத போது அடுத்த சக்தி யார் என்று குழந்தைகள் பார்கின்றன பாட்டியோ தாத்தாவோ நல்ல அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் ஒட்டிக்கொள்வதை நான் கண்டிருக்கிறேன், என்றாலும் தங்களின் பதிவு ஒரு அருமையான தகவல், அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

அமுதா said...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி தவநெறிச்செல்வன்.
/*மேலும் காரியம் நடக்க வேண்டுமானால் வீட்டில் சக்திவாய்ந்தவர்கள் யார் என்பது குழந்தைகளுக்கு தெரிந்து விடுகிறது*/
இது உண்மை தான் .