என் மேகம் ???

Wednesday, October 15, 2008

சினிமா - கேள்வி பதில்

சினிமா விளையாட்டில் சேர்த்துக் கொண்ட சந்தனமுல்லைக்கு நன்றி. சின்ன வயசில சினிமான்னா, பெரியவங்க கூட்டமெல்லாம், சின்னவங்களை உறங்க வைத்து விட்டு செகண்ட் ஷோ போவது என திட்டமிடுவார்கள். இது தெரிந்து நாங்கள்லாம் திட்டம் போட்டு விழித்தும் , கண்ணசந்த வேளையில் மாயமாக பெரியவர்கள் மறைந்து விடுவார்கள். என்றாலும் சில ஹிட் படங்கள் கண்ணில் காட்டப்படும். டி.வி வந்த பிறகு நிறைய பார்த்த்து ரீஜனல் ஃபிலிம்ஸ் தான். கூட்டத்துக்கு பயந்து சினிமா போவது குறைந்த பொழுது, ஈ.சி.ஆரில் வீடு அமைய, பிரார்த்தனாவும் மாயாஜாலும் வா வா என்று அழைக்க, மீண்டும் ரெகுலர் சினிமா விசிட்டர் ஆகிவிட்டேன். ஜம்மன்று மெத்தை விரித்து கணவரும் குழந்தைகளும் துயில, இயற்கை காற்றில் சினிமா பார்ப்பதும் நன்றாகத் தான் உள்ளது.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நினைவு தெரிந்து ஸ்கூலில் "காந்தி" படம் கூட்டிட்டு போனது புகை போல் நினைவில் உள்ளது. எல்லாம் வரிசையாக் போய் இருக்கையில் அமர்ந்தது (புகையில்) தெரிகிறது. வேறொன்றும் நினைவில் இல்லை. திகிலோடு பல் டாக்டரிடம் பல்லைக் காட்டிவிட்டு அதை விட திகிலானது "நூறாவது நாள்" படம். அப்புறம் "the car" பார்த்து இராத்திரி எல்லாம் ஹெட்லைட் துரத்தினது... ஆனா எப்பவும் இருந்த கேள்வி, "இவங்க எல்லாம் எங்கிருந்து வராங்க எப்படி போறாங்க...ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா" - இந்த ஞாயிற்றுக்கிழமை தான் (சுற்றத்துடன் செல்லும் ஜாலிக்காக) இரண்டாவது முறையாகப் பார்த்தோம். சீரியசாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ரிலாக்ஸ் செய்யும் காமெடியை இரசித்தோம்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?சமீபத்தில் டி.வி.யில் ""பஞ்ச தந்திரம்" படம் பார்த்தேன். "பின்னாடி என்ன இருக்கு" போன்ற காமெடிகளை மீண்டும் மீண்டும் இரசித்து பார்த்தேன். 3 மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தால் தலை வலிக்கிறது. எனவே வீட்டில் உட்கர்ந்து படம் பார்க்கக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்...

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?காலேஜ் கட் அடித்து எல்லாரும் "கிழக்கு சீமையிலே" பார்த்த பொழுது "ஏனிந்த கொலை வெறி" என்று மனம் கனத்தது.
"கன்னத்தில் முத்தமிட்டால்..." தாயாகவும், மனைவியாகவும் . சில காட்சிகளை மிகவும் இரசித்த படம்.
"பருத்தி வீரன்" - கிளைமாக்ஸ் பார்த்து இனிமேல் இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு "நோ" என்று உறுதி எடுக்க வைத்த படம்.

ஏனோ கனமான கதையுள்ள நாவல்களை மீண்டும் படிக்க விழைவது போல் சினிமாவை என்னால் ஏற்க முடியவில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கவே விரும்புகிறேன்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?சினிமா தான் அரசியலுக்கு நுழைவாயில் போலிருக்கும் இன்றைய நிலைமை...

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?வாரமலர் "துணுக்கு மூட்டை" கிசுகிசு வாசிச்சு துப்பறிய முயற்சிப்பேன். ஆ.வி. படிச்சுட்டு லஞ்ச் டைம்ல டிஸ்கஸ் செய்வேன். ஆனால் சினிமா செய்திக்குனு தனியா வாங்கி வாசிக்க மாட்டேன்.

தமிழ் சினிமா இசை?
குழந்தைகள் இரசிப்பதால், அவர்களோடு சேர்ந்து குத்து பாட்டு இப்ப பிடிக்குது. மனதை கொள்ளை கொள்ளும் "மெலடி" ரொம்ப பிடிக்கும். எதுவாக இருந்தாலும் வார்த்தைகளோடு இரசிப்பதில் தான் எனக்கு சுகம். இப்ப பண்ற ரீ-மிக்ஸ் எல்லாம் ஒரிஜனலை மறக்க வைப்பதால் பிடிக்கவில்லை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் எப்பொழுதாவது இடம் உண்டு. "தாரே ஜமீன் பர்..." நெஞ்சை நெகிழ வைத்தது.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?வெள்ளித்திரை மட்டும் தாங்க தொடர்பு. இந்த லெவல்ல இருந்தாலே அது நல்லாதான் இருக்கும்.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அதுக்கென்னங்க... அமோகமா இருக்கும். அப்பப்ப நல்ல படம் வரும். வரிவிலக்கு இல்லைனா தமிழ் படம்னு சொன்னால் தான் தமிழ் பட டைட்டில்னு தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல வரிவிலக்கு கொடுத்தா தான் பாட்டெல்லாம் புரியும், அப்புறம் வரிவிலக்கு கொடுத்தால் தான் தமிழ்ப்படம்னு புரியும். 70 வயசு ஹீரோ 15 வயசு பொண்ணோட டூயட் பாடிட்டு 17 வயசு பொண்ணை அக்கானும் 20 வயசு பொண்ணை அம்மானும் கூப்பிடுவாங்க. சூப்பர் மேக்கப், சூப்பர் நடிப்புனு புகழுவோம்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு நோ ப்ராப்ளம். எத்தனை நல்ல புத்தகங்கள் உள்ளன வாசிப்பிற்கு? பிள்ளைங்கள கூட்டிட்டு போகலாமானு கவலைப் பட வேணாம். எல்லாம் நன்மைக்கே...
தமிழர்கள்... கில்லாடிங்க அவங்க... வேற பொழுதுபோக்கை உருவாக்கிடுவாங்க...


நான் யாரை அழைப்பது? ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்க போல இருக்கே. அதனால் இஷ்டம் இருக்கறவங்க எடுத்து எழுதுங்க. நன்றி..

11 comments:

ஆயில்யன் said...

//ஏனோ கனமான கதையுள்ள நாவல்களை மீண்டும் படிக்க விழைவது போல் சினிமாவை என்னால் ஏற்க முடியவில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கவே விரும்புகிறேன்.//

இது கரீக்ட்தான் நானும் கூட பெரும்பாலும் இப்படியான ரொம்ப கனமான சப்ஜெக்ட் படமெல்லாம் பாக்குறதுன்னா அப்படியே கிர்ர்ர்ர்ர்ன்னு ஆகிடும் :)

தமிழ் அமுதன் said...

ஜம்மன்று மெத்தை விரித்து கணவரும் குழந்தைகளும் துயில, இயற்கை காற்றில் சினிமா பார்ப்பதும் நன்றாகத் தான் உள்ளது.

நல்லா சொல்லி இருக்கீங்க! பவுர்ணமி நேரத்துல படம் பார்க்க முடியுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"

:))))))))-

தமிழர்கள்... கில்லாடிங்க அவங்க... வேற பொழுதுபோக்கை உருவாக்கிடுவாங்க...

அப்படிப்போடுங்கன்னேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ME THE FIRST

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குங்க.

அமுதா said...

வாங்க ஆயில்யன். உங்க கருத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி


வாங்க ஜீவன்... ஒரு வார்த்தைல கருத்து சொல்லீடுவீங்க. இன்னிக்கு நிறைய அடிச்சிட்டீங்க. நன்றி. ப்ரார்த்தனா திறந்தவெளி தியேட்டரில், பவுர்ணமி எல்லாம் படம் பார்க்கலாம். மழை நேரத்தில தான் பார்க்க முடியுமானு தெரியல. ஒரு தடவை படம் பார்க்கும் பொழுது தூறிடுச்சு, அப்புறம் தூறல் நிற்கும் வரை காருள் இருந்து பார்த்தோம். பெரிய மழைனா என்ன செய்வாங்கனு தெரியாது. இங்க என்ன ஒரு வசதினா, பிள்ளைங்களை children's park-ல விளையாட விட்டுட்டு, அங்க் இருந்தே கொஞ்சம் படம் பார்க்கலாம்

amirdhavarshini amma /*Me the first*/ இல்லீங்க... ஆயில்யன் தான் ஃபர்ஸ்ட். சாரி, கமெண்ட்ஸ இன்னிக்கு தான் பார்க்க முடிஞ்சுது, அதான் லேட். வருகைக்கு நன்றி

நன்றி குடுகுடுப்பை - உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்...

RAMYA said...

சும்மா சொல்லக்கூடாது சூப்பர் அமுதா

சிந்திப்போம்

ரம்யா

சந்தனமுல்லை said...

//ஸ்கூலில் "காந்தி" படம் கூட்டிட்டு போனது புகை போல் நினைவில் உள்ளது. //

ஹஹ்ஹா!! இப்போ கூட ரீசண்டா டீவில போட்டாங்களே பார்த்தீங்களா?
//ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"//

:-))

//3 மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தால் தலை வலிக்கிறது. எனவே வீட்டில் உட்கர்ந்து படம் பார்க்கக் //


ஆஹா! ;-))

அமுதா said...

தங்கள் (முதல்) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரம்யா

முல்லை இரசித்து இரசித்து கமெண்டிட்டதற்கு நன்றி...

இவன் said...

//"ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"//

:))))))))-

அமுதா said...

தங்கள் வருகைக்கு நன்றி