பொருள் தேடும் உலகத்தில்
பொருள் விளங்கா வாழ்க்கையில் - அரும்
பொருளாக வந்து - வாழ்விற்குப்
பொருள் தந்தவளே...
கோபம் கொண்டு நான் சீறினாலும்
கொஞ்சிப் பேசி சிரித்து
பஞ்சாய் என் கோபம் பறக்கையிலே
தஞ்சம் அடைந்தேன் உன் சிரிப்பினிலே...
சொன்ன சொல் கேளாது
சொன்னதையே சொல்லும்
உன் கிள்ளைப் பேச்சினிலே
என் பிடிவாதம் மறந்தேன் செல்லமே...
என் நெஞ்சோடு சாய்ந்து
நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்கையிலே
என்னுலகம் நீயானாய்...
10 comments:
//பொருள் தேடும் உலகத்தில்
பொருள் விளங்கா வாழ்க்கையில் - அரும்
பொருளாக வந்து - வாழ்விற்குப்
பொருள் தந்தவளே...//
பொருள் பொதிந்த அரும் வரிகள்!
//நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்கையிலே
என்னுலகம் நீயானாய்...//
அற்புதம் அமுதா, வேறென்ன சொல்ல!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராமலஷ்மி மேடம்.
ம்ம்..நல்ல கவிதை!!
கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சஞ்சய்
நன்றி முல்லை
நன்றி ஜீவன்.
ஒரு தாய்மையின் மனநிலை மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது,
//என் நெஞ்சோடு சாய்ந்து
நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்கையிலே//
எவ்வளவு சத்தியமான வார்த்தை.
செல்வம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வம்
உண்மையான வரிகள்.அது என்னமோ தெரியலங்க குழந்தைங்க மேல மட்டும் அப்படு வருது பாசம்.
கருத்துக்கு நன்றி குடுகுடுப்பை.
/*அது என்னமோ தெரியலங்க குழந்தைங்க மேல மட்டும் அப்படு வருது பாசம். */
ஆமாங்க... நான் நினைச்சு பார்த்தது கூட கிடையாது, எனக்கு குழந்தை பிறந்ததுனா இப்படி உருகுவேன்னு...
Post a Comment