என்றோ பேருந்தில்
சில்லறை இன்றி
தவித்த வேளையில்
முகமறியா நட்பின்
ஒற்றை ரூபாய்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...
அறிந்தோ அறியாமலோ
கொட்டிவிட்ட சொற்கள்
தெரிந்தோ தெரியாமலோ
மறுத்த நியாயங்கள்
உணரும் வேளையில்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...
பலன் நோக்கி
செய்ததல்ல என்றாலும்
பழியாக மாறி
மனம் வதைக்கும் வேளையில்
செய்த உதவி
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...
சின்ன சின்னதாய்
திருப்பாத நன்றிகளும்
சின்ன சின்னதாய்
செய்த தவறுகளும்
சின்ன சின்னதாய்
சந்தித்த துரோகங்களும்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...
8 comments:
அருமையான உறுத்தல்... வாழ்த்துக்கள்
முதல் பத்தி கலக்கல்...
வலைச்சரத்தில் இன்று:
கம்ப்யூட்டர் டிப்ஸ் - ஒன் ஸ்டாப் ஷாப்
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_23.html
//சின்ன சின்னதாய்
திருப்பாத நன்றிகளும்
சின்ன சின்னதாய்
செய்த தவறுகளும்
சின்ன சின்னதாய்
சந்தித்த துரோகங்களும்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது//
மனசாட்சி உள்ள மனங்கள் தினமும் சிந்திக்கும் உண்மை இது..கவிதை நினைவுகளையும் தவறுகளையும் பின்னோக்கி அழைத்து சொல்கிறது அமுதா..
கலக்கல் வரிகள்... வார்த்தைகளில் விளையாடி இருக்கறீங்க...
வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html
மூன்றாவது...! இந்த உறுத்தலுக்கான காரணமும் வெட்கப்பட வைக்கும் ஒரு உறுத்தலாய்...
மிக நல்ல கவிதை அருமை.
உறுத்தல்கள் பலவிதோ!?
நன்றாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment