என் மேகம் ???

Monday, February 7, 2011

முகங்கள்

எங்கெங்கும் கடந்து
செல்லும் முகங்கள்...

புன்னகை பூத்து
பார்ப்பவருக்கும் பரவிட

மனவலி கொண்டு
வேதனை ததும்பிட

எண்ணிய கிடைக்காது
ஏக்கம் உறைந்திட

ஏதோ ஒன்று
ஏமாற்றமாக ஒன்றிட

எரித்து விடும்
கோபம கொந்தளிக்க

ஏதோ எண்ணத்தில்
யோசனையில் ஆழ்ந்திட

உணர்வுகள் அற்று
வெற்றாய் வெறித்திட

கடக்கும் முகங்களுடன்
கடந்து செல்லும் எண்ணம்...

கவலை ஏதுமின்றி
கபடம் ஏதுமின்றி
பிள்ளைச் சிரிப்பை
சுமக்கும் முகமாக
எல்லாம் மாறினால்....

5 comments:

ராமலக்ஷ்மி said...

//கவலை ஏதுமின்றி
கபடம் ஏதுமின்றி
பிள்ளைச் சிரிப்பை
சுமக்கும் முகமாக
எல்லாம் மாறினால்.... //

நினைத்தாலே இனிக்கிறது, முந்தைய வரிகள் தந்த அழுத்தம் நீங்கி! நல்ல கவிதை அமுதா.

Chitra said...

முகமூடி இல்லாத முகங்கள். ...... ஆழ்ந்த அர்த்தங்களுடன் கவிதை நல்லா இருக்குது.

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று... இன்ட்லி ஒட்டுப்பட்டையில் ஏதோ கோளாறு இருப்பதாக தோன்றுகிறது...

தமிழரசி said...

//ஏதோ எண்ணத்தில்
யோசனையில் ஆழ்ந்திட

உணர்வுகள் அற்று
வெற்றாய் வெறித்திட

கடக்கும் முகங்களுடன்
கடந்து செல்லும் எண்ணம்...//

பெரும்பாலும் இப்படி தான் அமுதா..

ஆயிஷா said...

கவிதை நல்லா இருக்கு.