உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்; மாமாவுடன் விவாதம் செய்தால் நேரம் ஓடுவது போல்....
”ஹாலில் இந்த சுவரை ஒரு ரெண்டு அடி இழுத்தால் தான் கொஞ்சம் நல்லா இருக்கும்”, மாமா சொன்ன பொழுது மனம் ஒப்பவில்லை தான். ஒரு அர்த்தமற்ற விவாதத்திற்குப் பின் அரைமனதுடன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த ரெண்டடி இழுப்பின் அத்தியாவசியம் தெரியும். இப்படி வீட்டின் ஒவ்வொரு அடியிலும்....
தென்னங்கன்று நட இடமில்லை என்று நான் அம்மாவிடம் விவாதம் செய்து மறுத்து வர, ஆனால் மாமா தென்னங்கன்றை வாங்கி வந்து இடம் பார்த்து வைத்து.. இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி தோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும்....
ஐயாப்பா டெய்லி நைட் வந்து எங்களை மட்டும் பார்த்துட்டு போவார் என்று இன்னும் சொல்லும் கிள்ளைகளின் மழலையிலும்...
ஒவ்வொருமுறை சுற்றுலா செல்லும் பொழுது, அப்பா இருந்தால் வந்திருப்பார் என்று கணவரும், மாமாவுக்கு இப்படி வர்றது பிடிக்கும், நிறைய விஷயம் சொல்லுவார் என்று நானும் சுற்றுலாவின் ஒவ்வொரு சுற்றிலும்...
என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நினைவுகள் நிழலாக உடன் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்த வருடம் ரொம்பவே மிஸ் செய்கிறோம். முன்பெல்லாம் ஊருக்குப் போகக் காரணம் தேவையில்லை. அது ஒரு திட்டமிட்ட பயணம். இப்பொழுது... அத்தையும் இங்கிருப்பதால் காரணமின்றி செல்லத் தோன்றுவதில்லை.
எத்தனை விவாதம் அவருடன்!!! புத்தகம், சுற்றுலா, உறவுகள், பெண்ணுரிமை, பிள்ளை வளர்ப்பு, ஆத்திகம், நாத்திகம், சமையல், தோட்டம், நினைவுகள் என்று.... அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ? இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....
8 comments:
மனம் கனக்கச் செய்யும் பகிர்வு.
//மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... //
ஆம் அழகானவையே.
மாமாவின் ஆசிகள் தொடரும் என்றென்றும், உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்!
ஹ்ம்.. இதே போல நான் என் மாமாவின் அப்பா விடம் வாக்குவாதம் நிறைய செய்திருக்கேன்.. பட் நினைச்சுப்பார்த்தா நல்லா இருக்கும் அந்த உரிமை..
//மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....//
நினைவுகளை சுமந்து கொண்டு காற்றாய் பறந்து போகிறது வாழ்வின் பல கணங்கள்.
மாமாவின் நேசத்தை தேடும் நெகிழவான பதிவு.
//மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....//
நினைவுகளை சுமந்து கொண்டு காற்றாய் பறந்து போகிறது வாழ்வின் பல கணங்கள்.
மாமாவின் நேசத்தை தேடும் நெகிழவான பதிவு.
அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ? இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்...
....மனதில் சோகமும் நெகிழ்வும் ..... இந்த வரிகளை வாசிக்கும் போது!
அழுத்தமான அனுபவங்கள்
படித்தேன் அருமை
//மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... //
நெகிழ வைக்கும் நினைவுகள்.
manam kanakkirathu.. vaalththukkal
Post a Comment