உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்ற கனவேதும் இன்றி, அவர்களைக் கனவு காண விட்டால் அந்த கனவைப்பற்றி கேட்கும் சுவாரஸ்யமே தனி. ”டீச்சர் , சயண்டிஸ்ட் ” எல்லாம் ஆக வேண்டாம் என்று சென்ற வருடம் சொன்ன பெண்ணிடம் இந்த வருடம் கேட்டேன்.
“என்ன ஆகலாம்னு முடிவு செஞ்சாச்சா நந்து?”
“இன்னும் இல்லைமா”
“டாக்டர்.. இஞ்சினியர் ... இதெல்லாம் வேண்டாமா?” (மெட்ரிக்கா சிபிஎஸ்ஈயா என்று எனக்கு இன்னும் கன்ப்யூஷன்... இந்த மாதிரி கனவு என்றால் மெட்ரிக்கில் தூக்கிப்போட்டு விடலாம் இல்லையா?)
“அய்யோ டாக்டர் இல்லைமா... எனக்கு இரத்தம்னாலே பயம்... அதுவுமில்லாம... someone's life is at risk"
"இஞ்சினியர்?"
"கவுன்சிலிங்க்கு நம்ம வீட்டுக்கு வந்த அக்கா சொன்னாங்கம்மா , நாம் எப்பவும் நம்ம அம்மா அப்பாவுக்கு மேலே போகணும். நான் எங்க அம்மா அப்பாவுக்கு மேலே வரணும்னு இஞ்சினியர் ஆக்றேன். நீ இன்னும் மேலே போகணும்னு...”
”அதனால?”
“நான் இன்னும் மேலே போகணும்னா பைலட் ஆகலாம்னு யோசிச்சேன்மா.... but. if I am a doctor someone's life is at risk. If I am a pilot my life is at risk. அதனால் இப்போதைக்கு ரைட்டர் இல்லைனா ஆர்கியாலஜிஸ்ட் ஆகலாம்னு இருக்கேன்...”
பார்ப்போம்... இன்னும் காலம் விரிந்து கிடக்கிறது அவளுக்கு, அவளுக்கானதைத் தேர்ந்தெடுக்க...
8 comments:
\\பார்ப்போம்... இன்னும் காலம் விரிந்து கிடக்கிறது அவளுக்கு, அவளுக்கானதைத் தேர்ந்தெடுக்க... \\
உண்மைதான்.
அப்துல்கலாம், இதனால் தான் குழந்தைகளை கனவு காணச் சொன்னாரோ!
நல்ல பகிர்வு.
என் மகள் இதை படிச்சிட்டு.. தட்ஸ் அ சேஃப் ஒன் தான் ந்னு சிரிக்கிரா..
//இன்னும் காலம் விரிந்து கிடக்கிறது அவளுக்கு, அவளுக்கானதைத் தேர்ந்தெடுக்க...//
அதே:)!
//அந்த கனவைப்பற்றி கேட்கும் சுவாரஸ்யமே தனி//
அதே அதே:))!
haha..:-)
கனவு காணுங்கள் என்ற கருத்துப்படி இப்படியெல்லாமா... வித்தியாசமான கற்பனை.
“நான் இன்னும் மேலே போகணும்னா பைலட் ஆகலாம்னு யோசிச்சேன்மா.... but. if I am a doctor someone's life is at risk. If I am a pilot my life is at risk. அதனால் இப்போதைக்கு ரைட்டர் இல்லைனா ஆர்கியாலஜிஸ்ட் ஆகலாம்னு இருக்கேன்...”
..... WOW!! SO smart!
// அதனால் இப்போதைக்கு ரைட்டர் இல்லைனா ஆர்கியாலஜிஸ்ட் ஆகலாம்னு இருக்கேன் //
யாருங்க அந்த புரட்சிப்பெண்...
ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை...
Post a Comment