முகமூடி
========
யூனிபார்ம் அல்லாத
வேறு உடையில்
காணும் பொழுது
குழம்பித் தான் போகிறேன்
முகமூடி களைந்து
முகம் காட்டும்
பழகிய மனிதர்களைக்
காண்பது போல்...
விபத்து
=======
கனவுகளின் மிச்சம்
கடமைகளின் சொச்சம்
தீராத ஏக்கம்
சொல்லாத விஷயம்
தீண்டாத இன்பம்
துளைக்காத துன்பம்
இன்னும் பலவற்றை
நசுக்கிச் சென்றிடும்
வாகனம் ஒன்று...
பிணைப்பும் இழப்பும்
====================
பிணைப்பின் இன்பம்
அறியவில்லை
பிணையும் வரை...
பிணைந்த பின்
இழப்பின் பயம்
சுழலத் துவங்கும்...
இழப்பின் வலி
ஊடுருவும் வரை
அறியவில்லை
இழந்த பின்...
இழப்பின் பயம்
காணவில்லை
4 comments:
ஓ நிஜம்மாவே கலக்கறீங்க..அமுதா.. ஒவ்வொன்னும் பல யோசனைய கொண்டுவருது.
மூன்றுமே மிக அருமை அமுதா.
//இழந்த பின்...
இழப்பின் பயம்
காணவில்லை//
ஆழமான உண்மை.
முதல் கவிதை.... நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.
சீருடைக் கவிதை அருமை
அனைத்தும் அழகு
Post a Comment