சில சமயம் தத்துவார்த்தமான சிந்தனைகளில் மன்சு போகும் தெரியுமா...அப்ப சில சமயம் "மொக்கை" தத்துவமும் "வாழ்க்கை" தத்துவமும் பிச்சுகிட்டு வரும். இப்பவே சொல்லிட்டேன் இதைப் படிச்சுட்டு திட்டாதீங்க.. இன்னிக்கு எனக்குள் உதிச்ச இந்த இரட்டை தத்துவம் தான் பதிவு.
சரி.. இன்னிக்கு சாப்பிட்டுட்டு இருந்தோமா... (யார் சமைச்சதுங்கற இரகசியம் எல்லாம் சொல்ல மாட்டேன்), பிரியாணியும் இருந்தது. அதில போட்ட பட்டை, கிராம்பு, ஏலக்காய் etc etc இங்கிலீஷ்ல என்ன தமிழ்ல என்னனு ஒரு பேச்சு... அப்ப தோணுச்சு
"எந்த மொழியில பட்டை, கிராம்பு, ஏலக்காய் பத்தி தெரிஞ்சுகிட்டாலும் சமைக்க தெரிஞ்சா தான் பிரியாணி வரும்" (ஹ்ம்.. கிட்ட தட்ட இதைத் தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுனு சொல்லி வச்சிருக்காங்க)
இப்படி ஒரு தத்துவம் தோணினதால, ஒரு சின்ன விசயத்துல காயம்பட்ட மனசு இன்னும் தத்துவார்த்தமா யோசிச்சு சொன்னது, "சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, அவங்களுக்கு உதவியோட அருமை புரியறது இல்லை...உதவியும் வாங்கிட்டு...பிரதிபலனா காயப்படுத்துவாங்க" (ஹ்ம்...கிட்டதட்ட இதைத்தான் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு சொல்லி வச்சிருக்காங்க சுற்றம் என்ன ... நட்பு முதற்கொண்டு எல்லா வட்டத்துக்கும் பொருந்தும்)
5 comments:
//சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, அவங்களுக்கு உதவியோட அருமை புரியறது இல்லை...உதவியும் வாங்கிட்டு...பிரதிபலனா காயப்படுத்துவாங்க" //
இது மொக்கையில்லீங் உலக தத்துவம்...
ஹலோ மேடம்,
உங்கவீட்டு பிள்ளைய அடிங்க,
இல்ல அது கிட்ட உங்க தத்துவத்த சொல்லுங்க, ok.
ஆனா, புள்ளபூச்சியாட்டம் இருக்குற,
அடுத்த வீட்டு பிள்ளைங்ககிட்ட தத்துவம் சொல்றேன்னு
மொக்கபோட்டீங்க.......
அந்த பாவம் உங்கள சும்மா விடாது.....
மொக்கைன்னு சொல்லிட்டு.. வாழ்வியலின் பெரும் தத்துவத்தை தந்திருக்கிறீர்கள். வருங்கால சந்ததியினர் பிரியாணி செய்யும்/சாப்பிடும் போது உங்கள் நினைவு அவர்களுக்கு வருவதை யாராலும் தவிர்க்க முடியாது
ரைட்டுங்க ..! புரியுது...!
பிரியாணிக்கும், ‘குற்றம் பார்க்கில்..”க்கு என்ன சம்பந்தம்னு புரியவேயில்லை!! ஒருவேளை, அவங்க உங்ககிட்ட பிரியாணி சமைச்சுக்கேட்டு, நீங்க சமைச்சதைச் சாப்பிட்டு எதாவது சொல்லிட்டுப் போயிட்டாங்களா?
:-)))))))))
Post a Comment