என் மேகம் ???

Wednesday, June 23, 2010

ஒரு கணம்...

மகிழ்ச்சியில்
பகிர்ந்து கொண்ட
தித்திக்கும் கணங்கள்...

சோகத்தில்
தோள் சாய்த்த
ஆறுதல் கணங்கள்...

தடுமாற்றத்தில்
கை கொடுத்த
உதவி கணங்கள்...

சச்சரவுகளும்
சமாதானமும் நிறைந்த
சிறுபிள்ளை கணங்கள்...


எல்லாவற்றையும்
மறக்கச் செய்யும்
கணமும் உண்டு...

ஈகோ தலையெடுத்து
உறைந்து போன
ஒரு கணம்....

10 comments:

பின்னோக்கி said...

கவிதை அருமை. ஈகோவை தமிழ் படுத்தியிருக்கலாமே ? :)

அமுதா said...

/*
பின்னோக்கி said...
கவிதை அருமை. ஈகோவை தமிழ் படுத்தியிருக்கலாமே ? :)
*/
ம்.. பொருத்தமா சரியா தமிழ்ப்படுத்த வரலை எனக்கு... அதனால் அப்படியே விட்டுட்டேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க.. அமுதா..
ஈகோ- தன்முனைப்பு ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த கணம் மட்டும் எதுமே செயல்படாத ஒரு தேவையற்ற கணமாக இருப்பதை உறைந்து போன கணமாக அழகாகச் சொல்லி இருக்கீங்க..

நட்புடன் ஜமால் said...

செம கனம் ...

ராமலக்ஷ்மி said...

//எல்லாவற்றையும்
மறக்கச் செய்யும்
கணமும் உண்டு...//

மிக அருமை அமுதா.

ஹுஸைனம்மா said...

அருமை, உண்மை!!

VELU.G said...

அந்த ஒரு கணம் எல்லாவற்றையும் வீழ்த்திவிட்டது

கவிதை அருமை

அன்புடன் நான் said...

கவிதை பெருங்கனம்!

பாராட்டுக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை அருமை, கடைசிவரிகள் உண்மை.