என் மேகம் ???

Tuesday, January 19, 2010

நினைவுகள்

எதற்காகவும் எதுவும் நிற்பதில்லை
காலம் நிற்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது

குழந்தைகள் வளர்கிறார்கள்
நாளை உலகை வெல்ல
பிரிந்து செல்லலாம்

பெரியவர்களுக்கு வயதாகிறது
காலத்தை வெல்ல
காற்றோடு கரையலாம்

இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்
என்றும் தந்திடும் ...
நெஞ்சோடு உறைந்த நினைவுகள்

9 comments:

அகல்விளக்கு said...

நினைவுகளை கவிதைப்படுத்திய விதம் அருமை...

நல்ல கவிதை...

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை அமுதா....

Deepa said...

//இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்//

நல்லா இருக்கு அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்//

என்னன்னவோ தோணுது.. அருமை அமுதா..

Unknown said...

எதார்த்த நிதர்சணம்.

சந்தனமுல்லை said...

நினைவு ஒரு பறவை.....

பின்னோக்கி said...

Time and tide wait for no man என்ற ஆங்கில பழமொழி நியாபகத்துக்கு வருகிறது

ராமலக்ஷ்மி said...

//குழந்தைகள் வளர்கிறார்கள்
நாளை உலகை வெல்ல
பிரிந்து செல்லலாம்

பெரியவர்களுக்கு வயதாகிறது
காலத்தை வெல்ல
காற்றோடு கரையலாம்//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

//இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்
என்றும் தந்திடும் ...
நெஞ்சோடு உறைந்த நினைவுகள்//

நிஜம் அமுதா. அருமையான கவிதைக்கு மிக்க நன்றி.

அகஆழ் said...

//இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்//

ஆஹா...நினைவுகளை நினைவு படுத்தியது.