என் மேகம் ???

Wednesday, January 6, 2010

என் சுவாசக் காற்றே!!!

ரொம்ப நாள் ஆச்சு குட்டீஸ் பத்தி எழுதி. ம்... நான் படிக்கும்பொழுது பண்ணலைனாலும் என் பொண்ணுக்கு செஞ்சத பதிவு செய்ய தான் இந்த பதிவு.

"அம்மா ஹாலிடேஸ்க்கு human body வர்க்கிங் மாடல் பண்ணனும்" - நந்தினி
"respiratory system பண்ணலாமா?"
"அது சிம்பிள் வேண்டாம்"
"circulatory, skeletal, nervous, digestive, excretory" என்று எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் பண்ணுவதாக சாக்கு. இப்ப நான் என்னத்த தேட? மிஞ்சியது ஹார்மோன் & இம்யூன் தான். சின்னதாக உருண்டையாக இருக்கும் இரும்புமணிகளைப் போட்டு, அப்படியே காந்தம் வச்சு நகர்த்தி, வைரஸ் வந்தால் வெள்ளை அணுக்கள் இப்படி தான் போராடும்னு செய்யலாமா என்றெல்லாம் யோசிச்சு.... அப்புறம் செய்து பார்க்க காந்தம் கிடைக்காததால் விடுமுறை முடியும் தருணத்தில் , "ஒண்ணு சுவாசக்குழாய் இல்லாவிட்டால் ஒண்ணுமில்லை" என்றவுடன் வேறுவழியின்றி அவளும் சரி என்றாள். சிம்பிள்தான் என்றாலும் அவ்வளவு சிம்பிளாக இல்லை இந்த வடிவம் வருவதற்கு.

கொஞ்சம் நெட்டின் உதவியுடனும் கொஞ்சம் சொந்த யோசிப்புடனும் இதோ மாடல்:ஒருT பைப்பின் இருபுறமும் பலூன், நடுவில் சின்ன இதயம். ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் அடியை வெட்டி இன்னொரு பலூனின் பகுதி diaphragm ஆனது. டப்பாவின் மூடிப்பகுதியில் இன்னொரு பலூனின் பகுதி கழுத்தாக இணைக்கப்பட்டு, சின்ன ஓட்டை வழியாக சின்ன ப்ளாஸ்டிக் டப்பா நுழைக்கப்பட்டது தலைக்காக. தலையின் வரைவு மற்றும் அலங்காரம் நந்தினி.. பலூன் உபயம் யாழினி... ஆக்கமும் இயக்கமும் நாங்கள் என்று இது ஒரு கூட்டு முயற்சி...

இப்பொழுது குழாய் வழியாக காற்றை செலுத்தினால் ... மூச்சு உள்ளிழுத்தல் (Inhale)
சுவாசப்பை விரிவடைகிறது...
இப்பொழுது குழாய் வழியாக காற்றை வெளி இழுத்தால் ... மூச்சு வெளியேற்றல் (Exhale)
சுவாசப்பை சுருங்குகிறது...


எப்பூடி?

10 comments:

பின்னோக்கி said...

டாக்டருக்கு படிக்குறவங்க கூட இந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டாங்க. பிரமாதம். அருமையா செஞ்சிருக்கீங்க.

Unknown said...

கிரியேட்டிவிட்டி ...

நலம்.

பூங்குன்றன்.வே said...

நீங்க விஞ்ஞானின்னு தெரிஞ்சு போச்சு எங்களுக்கு ! கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்கிடுங்க அமுதா :)

ராமலக்ஷ்மி said...

//ஆக்கமும் இயக்கமும் //

//எப்பூடி?//

சூப்பரு. எக்ஸலண்ட்.

வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கும் உற்சாகப் படுத்திய உங்களுக்கும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல் ப்பா அமுதா.. :)

சந்தனமுல்லை said...

:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கூட்டு முயற்சி செம்ம கலக்கல்

sathishsangkavi.blogspot.com said...

Superrrrrr........

ஹேமா said...

நல்ல ஆக்கம் அமுதா.
நானும் இங்க பாத்திருக்கேன் குழந்தைங்க செய்திருக்காங்க.
வாழ்த்துகள்.

Vidhya Sriram said...

Super Idea Amudha.. I think I need to go through all your project ideas recorded by you here, so that I get some creative ideas for my children's projects..
Very nice one.