என் மேகம் ???

Wednesday, March 28, 2012

இது எந்த ஊர் --- சிங்கப்பூர்

குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் போகணுங்கறது ரொம்ப நாள் ஆசை. இப்ப U.S , யூரோப் என்று எல்லாரும் போக ஆசைப்படறாங்கனாலும், வெளிநாட்டு சுற்றுலானா சிங்கப்ப்பூருக்கு தனி இடம் இருக்குது. சில நட்புகளும் முன்னாடி போய் வந்திருந்ததால ப்ளான் பண்ணி சிங்கப்பூர் போய் வர்றதுனு முடிவானது. பேக்கேஜ் டூர்னா நேரத்துக்கு கிளம்பணும். பிள்ளைகளுக்கு அது சரிபடாதுனு, நாங்களா திட்டமிட்டு சாகவாசமா சுத்தலாம்னு முடிவு செஞ்சோம். வலையில் தான் எத்தனை விசயங்கள் கிடைக்குது.... அதனால் திட்டமிடல் சுலபமாகவும் , பயணம் இனிமையாகவும் முடிஞ்சது.

சிஙப்பூரில் “லிட்டில் இந்தியா”வில் தங்கினால், நம்ம ஊர் மக்களோட இருக்கிற மாதிரியே தான் இருக்குது . சிங்கப்பூரின் சுத்தம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். போக்குவரத்து மெட்ரோ ரெயில்/பஸ் என்று மிக வசதியாக இருக்கு. போக வேண்டிய இடம் பத்தி கூகிள் மேப்ல தேடினால் வழி சொல்லிடுது. அதையும் அங்கே mrt/பஸ் ஸ்டாப்ல இருக்கிற மேப் வச்சு ஈசியா எங்கேயும் போய் வரலாம். டாக்ஸில போனாலும் அதிக பட்சம் 20-30 வெள்ளி தான் ஆகும்னாங்க.

முஸ்தபா செண்டர் 24 மணி நேரமும் திறந்து இருக்கு. ஷாப்பிங் பிடிச்சவங்களுக்கு ஒரு நாள் பத்தாது இங்கே :-). ”சையத் அல்வி” சாலை போனால் வரிசையா நம்மூர் தான் பொன்னுசாமி, ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ், சரவணா பவன் ...ஒரு ஆளுக்கு 5 வெள்ளியாவது ஒரு வேளை சாப்பாட்டுக்கு தேவைப்படுது. டீ 2 வெள்ளி...நிறைய இருக்கு... அதுக்கு பதிலா முஸ்தபாவில் 1 வெள்ளிக்கு அழகா ஒரு டம்ளருக்கு மேலயே டீ கிடைக்கும். இங்கே சாப்பாடும் உண்டு... ஆல் இன் ஆல் தான்...

6 நாள் ப்ளான். முதல்ல போகவர டிக்கட் புக் பண்ணனும். அப்புறம் தான் விசா எல்லாம்... cleartrip வழியா டிக்கட் புக் பண்ணினோம். வலை வழிய ஏதோ பிரச்னைனு அவனை போன்ல பிடிச்சு புக் பண்ண சொன்னதுல, மொத்தமா புக் பண்ணாமல் தனித்தனியா புக் பண்ணினால், நல்ல ஆஃபர் கிடைக்கும்னு சொல்லி புக் பண்ணி தந்தான். அடுத்து ஹோட்டல் புக்கிங். முக்கால் வாசி சுற்றிக் கொண்டு, இரவு படுக்க மட்டும் தான் ஹோட்டலுக்கு வருவோம் என்பதால் சின்னதாக ஒரு ஹோட்டல் (பெண்டா) ”லிட்டில் இந்தியா”வில் மின்னஞ்சல் வழி புக் செய்தோம். அடுத்து விசாவுக்கு போட்டோ எடுத்து ட்ராவல் ஏஜென்சி வழியா விசா எடுத்தோம். விசாவுக்கு ரிட்டர்ன் ப்ளைட் மற்றும் ஹோட்டல் புக்கிங் அவசியம். ரெண்டே நாள்ல விசா ரெடி. இனி சுற்றுலா ப்ளானிங் தான். மொத்தம் 6 நாள். இது தான் ப்ளான்:

நாள் 1: சிங்ப்ப்பூர் வருகை+சிங்கப்பூர் ப்ளையர் + டக் டூர்




நாள் 2: யுனிவர்சல் ஸ்டூடியோஸ்


நாள் 3: செண்டோசா தீவு


நாள் 4: சிங்கப்பூர் ஜூ+நைட் சபாரி



நாள் 5: ஜுராங் பேர்ட் பார்க்


நாள் 6: ஷாப்பிங் + இந்தியா திரும்புதல்

போக்குவரத்து வசதியா இருக்கிறதால் நாமே ப்ளான் பண்ணி போறது வசதியா இருக்கு. ஷாப்பிங் முக்கால் நாள் ப்ளான் பண்ணினது தான் கொஞ்சம் இடிச்சுது. மத்தபடி எல்லாமே திருப்தியா இருந்தது. இனி ஒவ்வொரு நாள் அனுபவமும் தனிப் பதிவுகளாக ...

8 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான படங்களுடன் ஆவலை அதிகரிக்கும் முன்னுரை. தொடரக் காத்திருக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

போக்குவரத்து வசதியா இருக்கிறதால் நாமே ப்ளான் பண்ணி போறது வசதியா இருக்கு.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

படங்கள் அருமை !

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி இராஜராஜேஸ்வரி

கோவி.கண்ணன் said...

ரொம்ப அருமையான துவக்கம், தங்கள் பயணம் தொடர்பில் அனைத்துப் பதிவுகளையும் படிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது,

நேர்தியான படங்கள், பாராட்டுகள் அமுதா

RAMG75 said...

பயண அனுபவத்துடன் இனிவரும் காலங்களில் பயணிப்பவர்களுக்கும் தேவையான விஷயங்கள். அருமை.

பின்னோக்கி said...

பயண அனுபவங்களுடன், பயணம் செய்யத் தேவையான விஷயங்களும் வித்தியாசமாக இருந்தது.

பின்னோக்கி said...

பயண அனுபவங்களுடன், பயணம் செய்யத் தேவையான விஷயங்களும் வித்தியாசமாக இருந்தது.

துபாய் ராஜா said...

சுவையான, சுருக்கமான முன்னுரை. வாழ்த்துக்கள்.