என் மேகம் ???

Wednesday, March 28, 2012

அதீதத்தில் “கதை பேசலாம் வா”

கதை பேசலாம் வா
------------------

நான்கு சுவர்களுக்குள்
உரையாடல்கள் ஏதுமின்றி
உறைந்து கிடக்கின்றது
மௌனம்...

ஒட்டுக்கேட்ட கதைகளை
சுமந்து செல்லும் காற்று
நின்று போனது
வார்த்தைகளின்றி...

காற்று வேண்டும்
கதை பேசலாம் வா!!!


அதீதம் மார்ச் 16 இதழில் வெளியாகி உள்ள கவிதை. சுட்டி: ”கதை பேசலாம் வா

2 comments:

ராமலக்ஷ்மி said...

/காற்று வேண்டும்
கதை பேசலாம் வா/

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்:)! மிக நல்ல கவிதை அமுதா.

பாச மலர் / Paasa Malar said...

காற்று சுமந்து செல்லும் கதை கவிதை நன்று...