முந்தைய பாகத்திற்கு “இங்கே”
இரண்டாவது நாள் நாங்கள் திட்டமிட்டது ”யுனிவர்சல் ஸ்டூடியோஸ்” என்ற மெகா தீம் பார்க். நட்புகள் சொன்ன டிப், முன்பதிவு செய்வது நலம். ஏனெனில் அங்கு ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் என்ற கணக்கு உண்டு. வலை சொன்ன தகவல் முடிந்தவரை வாரநாட்களில் சென்று வாரயிறுதியைத் தவிர்க்கவும் என்பது. வலையில் இருந்த தகவல்களினால் சில குழப்பங்களும் வந்தது. பிடிமானமில்லாத் செருப்பு போடலாமா, லக்கேஜ் வேண்டுமா எனபதெல்லாம் தான். இந்த் குழப்பத்தில் அம்மாவுக்கு என் பொண்ணு செருப்பை போட்டு பாடுபடுத்திட்டேன் (பிடிமானம் இருக்கிற செருப்புக்காக). அதுக்கு அவசியமே இல்லாமல் வசதிகள் இருந்தன.
யுனிவர்சல் ஸ்டூடியோஸ் பொதுவாக 10 - 7 திறந்திருக்கும். வெள்ளி என்றால் ஹாலிவுட் என்ற ஒரு பகுதி மட்டும் இரவு 10 வரை இருக்கும். எங்களுக்கு ஹாலிவுட் அவ்வளவு ஈர்ப்பாக இல்லாததால் வியாழனுக்கு வலையில் முன்பதிவு செய்து சென்றோம். மெட்ரோ இரயிலில் “ஹார்பர் ப்ரண்ட்” என்ற ஸ்டேஷன் சென்று செண்டோசா எக்ஸ்ப்ரஸ் பிடிக்க வேண்டும்... பிடித்தோம்....
யுனிவர்சல் ஸ்டூடியோஸில் மொத்தம் 7 பகுதிகள்:
1. ஹாலிவுட் (Hollywood)
2. ம்டகஸ்கார் (Madagascar)
3. ஃபார் ஃபார் அவே (Far Far Away)
4. தி லாஸ்ட் வேர்ல்ட் (The lost world)
5. தி ஏண்டியண்ட் இஜிப்ட் (The Ancient Egypt)
6. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
7. நியூ யார்க் சிட்டி (NewYork City)
மேப் பார்த்ததில் ஹாலிவுட்டில் தொப்பி கடை ஒன்று தவிர எங்களை எதுவும் ஈர்க்கவில்லை. எனவே, ஹாலிவுட் & நியூ யார்க் சிட்டி எங்கள் லிஸ்டில் கடைசிக்குப் போனது. மீதியில் எல்லாம் ரைட்ஸ் உண்டு. 7 பகுதியா தெரிஞ்சாலும், எல்லாம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் பக்கமா தான் இருக்கு. மேலும் “தி லாஸ்ட் வேர்ல்ட்” கிட்ட வாட்டர் வேர்ல்ட் உண்டு. இங்கே 12.30 மற்றும் 4.30 மணி போல தான் ஷோ உண்டு. இது நல்லா இருக்கும்னாங்க. அதனால் 12 மணி கிட்ட “தி லாஸ்ட் வேர்ல்ட்” போயிடணும்ங்கறதும் ப்ளான்.
எங்க முதல் விசிட் “மடகஸ்கார்”. இது இந்த படத்தோட தீம்ல இருக்கிற பகுதி. நான் இந்த படம் பார்க்கலை. ரெண்டு ரைட் உண்டு. ரெண்டுமே குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் பெரியவங்களும் போகலாம்.
i) Madagascar: A Crate Adventure
இது தண்ணில படகுல போவோம். போகும் வழில இந்த மடகஸ்கர் பட நடிகர்களோட ஒரு அனுபவம். வழியில் இந்த மிருகங்களின் பிரும்மாண்டமான உருவங்களும், அவற்றின் அசைவுகளும், திடீரெனெ மேலே விழுவது போல் வரும் பெட்டியும் அருமையாக அமைத்துள்ளனர்.
ii) King Julien’s Beach Party-Go-Round
இது நம்ம பிள்ளைங்க பீச்ல போகிற குதிரை பொம்மை சவாரி தான்.
2. ஃபார் ஃபார் அவே
இது ஷ்ரெக் படம் வச்சு தீம்.
i) Shrek 4-D Adventure
நீங்க அபிராமி மெகா மால்ல 4D சினிமா பாத்திருக்கீங்களா? கிட்டதட்ட அதே மாதிரி கொஞ்சம் பிரமாண்டாமா ஷ்ரெக்.
ii) Magic Potion Spin
இதுல தெரியாமல் ஏறிட்டோம். ரொம்ப சின்ன பசங்களுக்கானது. நம்ம ஊர் திருவிழாவில் சுத்துமே சின்னதா ஒரு சக்கர ராட்டினம்... அதே!!! அதனால் ஒண்ணும் சொல்றதுக்கில்ல...
iii) Enchanted Airways
ஒரு சின்ன ரோலர் கோஸ்டர். கொஞ்சம் கூட பயமில்லாமல் போகலாம் (ரோலர் கோஸ்டர்னு நினைச்சு ஏறினால் ஏமாத்தம் தான்...
3. தி லாஸ்ட் வேர்ல்ட்
ஜுராஸிக் பார்க்கை தீமா வச்சு இந்த பகுதி இருக்கும்.
i) Jurassic Park Rapids adventure
இந்த ரைடை நாங்க மிஸ் பண்ணிட்டோம். இதுக்கு போனப்ப 50 நிமிஷம் காத்திருக்கணும்னும், நனைஞ்சுடுவோம்னும் சொன்னாங்க. அப்புறம் வரலாம்னு 4 மணிக்கு வரும்பொழுது, மழை பெய்யற மாதிரி இருக்குனு, ரைட் எல்லாம் நிறுத்திட்டாங்க. ரைடைப் பார்க்கவே அழகா இருந்தது... பாருங்க “ஹட்ரோ எலெச்ட்ரிக் ப்ளாண்ட்” எல்லாம்....
ii) Canopy Flyer
இது அந்தரத்தில் பறந்து, தீம் பார்க்கை மேலே இருந்து ஒரு பார்வை பார்க்கலாம். செருப்பு பிடிமானம் இல்லாமல் இருந்தால் கழட்டி வைக்க சொல்லிடறாங்க. ரைடு முடிஞ்சு மாட்டிக்கலாம்.
iii) Dino-Soarin'
இது சும்மா சின்னப் பிள்ளைகள் ரைட் தான். நம்ம வி.ஜி.பில இருக்கும். டினோசர் மாதிரி இருக்கிறதுல ஏறி, பட்டனை அழுத்தி நாமளே மேலே கீழேனு போக வைக்கலாம்.
iv) Amber Rock Climb™
இது பாறை மாதிரி இருக்கிறது மேலே ஏறி, டினோசரோட தடயங்களைப் பார்க்கலாம். இதுக்கு தனி கட்டணம். நாங்க போகலை.
v) WaterWorld™
இது ஒரு ஷோ. நம்ம வி.ஜி.பில கோடை விடுமுறைக்கு அப்பப்ப இந்த மாதிரி நடக்கும். சும்மா ரெண்டு க்ரூப்புக்கு நடுவில் சண்டை. நம்ம மேல தண்ணி வாரி இறைப்பாங்க. குண்டெலாம் எரிஞ்சு, நெருப்பு கண் முன்னால் வரும். பாருங்க கடைசில ப்ளேன் கூட வந்தது
4. தி ஏன்சியண்ட் இஜிப்ட்
”மம்மி” தான் இந்த பகுதியோட தீம்
i) Revenge of the Mummy
சூப்பர் ரைடுங்க இது. ரைடுக்கு போற வழியே மங்கின வெளிச்சத்தில பிரமிடு மாதிரி செம பில்டப் இருக்கும். கையில ஒரு பர்ஸ் கூட வச்சிக்கக்கூடாது. பக்கத்தில லாக்கர் இருக்கு. முதல் அரை மணி நேரம் இலவசம். அப்புறம் ஒவ்வொரு மணிக்கும் 2$. நீங்களே கோட் கொடுத்து மூடி திறக்கலாம். வார நாள் என்பதால், கூட்டம் இல்லை. லாக்கர் இலவசமாகவே முடிஞ்சிருச்சு. இருட்டில் மம்மீஸோட என்கவுண்டர் செம த்ரில்லிங். அதுவும் ஓரிடத்தில் அப்படியே சுவரில் இடிச்சு நிற்க, சுவர் உடைஞ்சு அப்படியே வண்டு வரும் ... அப்புறம் வண்டி ரிவர்ஸ்ல போகும்... எல்லாம் நல்லா இருந்தது.
ii) Treasure Hunters
இது ஏதோ குழந்தைகள் ஜீப்ல போய் புதையல் கண்டுபிடிக்கவாம். வலைல, நேரம் அதிகம் இல்லைனா இதுக்கு போக வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க.. அதனால் போகலை
5. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
சயன்ஸ் ஃபிக்ஷன் தான் தீம்
i) TRANSFORMERS The Ride: The Ultimate 3D Battle
மம்மிய விட சூப்பர் ரைட் இது. 3D க்ளாஸ் போட்டு ஒரு கார்ல அனுப்பறாங்க. நல்ல/கெட்ட ட்ரான்ஸ்பர்மர்ஸ்க்கு நடுவில நாம் இருக்கோம். நிஜமாவே நாம அந்த சண்டையில் ஒரு அங்கமா இருக்கோம். பத்தி எரியும் பொழுது அப்படியே கார் தகிக்குது.
ii) Battlestar Galactica: HUMAN vs. CYLONTM
ரெண்டு ரோலர் கோஸ்டர். இதுக்கும் லாக்கர்ர் தேவை. ஹ்யூமன் நம்ம வீகா லேண்ட்ல இருக்க்கிற மாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும் தலை கீழா எல்லாம் தொங்காது. சைலான், ரெண்டு மூணு தடவை தலைகீழாவும் போகும். விருப்பமிருந்தால் ரெண்டும் போகலாம்... நாங்க ரெண்டும் போனோம்.
iii) Accelerator
இது நம்ம ஊர் கப் & சாஸர் ரைடு மாதிரி இருந்தது. ரெண்டு ரோலர் கோஸ்டருக்கு அப்புறம் ஒரு ரிலாக்சேஷன் மாதிரி இருந்தது.
6. நியூ யார்க் சிட்டி
இங்கே நியூ யார்க் சிட்டி மாதிரி சில செட்டிங்க்ஸ் இருந்தது.
Lights, Camera. Action!™ Hosted by Steven Spielberg
இந்த ஷோவும் நல்லா இருந்தது. ஒரு சின்ன அரங்கம். அமைதியான நியூயார்க் நகரம், கேட்டகரி 5 ஹர்ரிகேனால் தாக்கப்படுவதை மிக அழகாக லைவாக காட்டுவார்கள்.
7. ஹாலிவுட்
இங்கே விதம் விதமா தொப்பி இருந்த கடை நல்லா இருந்தது. அது போக ஹாலிவுட் கேரக்டர்ஸ் சுத்திட்டு இருந்தாங்க. ஒரு “ராக் ம்யூசிக்” இருந்தது. வந்தது வந்தோம் அதையும் பார்க்கலாம்னு கடைசியா அதுக்கும் போனோம். ஹாலிவுட் பேய்கள் ஒரு ராக் ஷோ பண்ணினார்கள். நல்லா தான் இருந்தது.
எல்லா பகுதியிலேயும் சாப்பாடு, கடை , ஸ்ட்ரீட் ஷோ உண்டு. நாங்க நேத்து எடுத்த சபதத்தை மறந்து, சாப்பாடு கொண்டு போகாமல் போய் ரொம்ப கஷ்டம். நிறைய சைனீஸ் ஸ்டைல் நாங்க லன்ச் டைம் இருந்த ஜுராஸிக்கில். கொண்டு போன பிஸ்கட்டில் சமாளிச்சோம். வெள்ளிக்கிழமை ஹாலிவுட் மட்டும் 10 வரை இருக்குமாம். ஏதோ பட்டாசு போடுவாங்க போல்...
நாங்க 7 மணிக்கே முடிச்சு, செண்டோசா எக்ஸ்பிரசைப் பிடிச்சு, கொஞ்ச நேரம் விவோசிட்டியில் உலாத்திட்டு, மெட்ரோ ஏறி ஹோட்டல் வந்து இரண்டாவது நாளை வெற்றிகரமா முடிச்சோம்.
3 comments:
இவ்வளவு தகவல்களை எப்படி நினைவில் வைத்திருந்தீர்கள் என்று வியப்பாக இருக்கிறது.
பேய்களின் ராக் ஷோ படம் எங்கே ?
செல்பவர்களுக்கு பயனாகும் வகையில் விரிவாகப் பதிந்திருப்பது அருமை. தொடருங்கள்.
இரண்டாம் நாள் பயணம் இனிமையான பயணம். அழகான படங்களும், குறிப்புகளும் அருமை.
Post a Comment