என் மேகம் ???

Wednesday, November 16, 2011

அதீதத்தில் என் கவிதை

ஆக்ரமிப்பு
---------

குறுக்கு சாலை
கடக்கும் வாகனங்கள்
கடத்திச் செல்கின்றன
குழந்தைகளின்
தெருவிளையாட்டுக்களை...


இரவும் பகலும்
ஓயாமல் பேசும்
தொலைக்காட்சி பெட்டிகள்
பறித்துக் கொள்கின்றன
பாட்டியின் கதை நேரத்தை...

பலூன் சுடுதலும்
இராட்டினங்களும்
சுருக்கி விடுகின்றன
மழலைப் பாதங்களுடன்
அலைகளின் விளையாட்டை...


அதீதம் நவம்பர் 14 2011 இதழில் வெளிவந்துள்ளது இக்கவிதை.

என் கவிதை ஒன்று முதன்முறையாக மின்னிதழில் வெளியிடப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

5 comments:

ராமலக்ஷ்மி said...

என் வானத்தில் இன்னொரு நட்சத்திரமாக இக்கவிதை. இனி தொடர்ந்து மின்னிதழ்களிலும் மின்னிட என் வாழ்த்துக்கள் அமுதா:)!

அமுதா said...

மிக்க நன்றி மேடம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறுக்கு சாலை
கடக்கும் வாகனங்கள்
கடத்திச் செல்கின்றன
குழந்தைகளின்
தெருவிளையாட்டுக்களை...
//
அருமை அமுதா..
எவ்வளவு இழக்கிறாங்க இன்றைய குழந்தைகள்..

பின்னோக்கி said...

அழகான கட்டுரை. வாகனமும் குழந்தைகளும் நிதர்சனம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

En Idhayathai Thottathu