என் மேகம் ???

Sunday, October 2, 2011

நிழற்பட பயணம்

அந்த சுவற்றில்
துவங்கியது
அவன் நிழற்பட பயணம்...

தவழ்ந்து சிரித்து
பெற்றோர் அணைத்து
தங்கை கைபிடித்து
தம்பி தோள் சேர்த்து
நட்புடன் கைகோர்த்து
மனைவியுடன் இணைந்து...

வாரிசின் புன்னகையுடன்
சற்றே நின்றது
அவன் நிழற்பட பயணம்
அந்த சுவற்றில்...

மீண்டும் குடியேற
தேவைப்பட்டது
அவன் நிழற்படத்துக்கு
மாலை ஒன்று...

4 comments:

ராமலக்ஷ்மி said...

மனதை உலுக்கும் இதுபோன்ற பயணங்கள் எத்தனை:((!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ எப்படிங்க இப்படி கற்பனை..:)

அமுதா said...

முத்துலட்சுமி... கற்பனை இல்லை... யோசிச்சு பாருங்க... நம்ம பிள்ளைங்க வந்த பிறகு அவங்க போட்டோ தான் வீடு முழுக்க நிறைஞ்சு இருக்கும். பெரியவங்க போட்டோ கண்லயே இருக்காது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யா அதான் இந்த நோக்குல யோசிக்கலைன்னு சொல்லவந்தேன்...