சென்ற பதிவில் ”சுட்டீஸுடன் டர்டில் வாக்” ஆலிவ் ரிட்லீ ட்ர்ட்டில் முட்டை போட்டதா.... மார்ச்சில் இருந்து முட்டை பொரிக்கும் என்றார்கள். பெசண்ட் நக்ரில் இருந்து மெரினா செல்லும் வழியில் பீச் ஓரத்தில் உள்ளது "hatchery". hatchery என்றால்... வேலி போட்டு, மணலில் முட்டைகள் இயற்கையாகப் பொரிக்க வைத்துள்ளனர். வெளிவரும் நேரம் (பெரும்பாலும் மாலை...). கூடை போட்டு மூடி விடுகின்றனர். பின்னர் கூடையில் அவற்றை எடுத்து கடல் நோக்கி விடுகின்றனர். இந்த மாதம் தினம் மாலை 5:30க்கு மேல் சென்றால் பார்க்கலாம். பார்ப்போமா?
hatchery
பொரித்த ஆமைகளைக் கூடையில் அள்ளுகின்றனர்
கூடையிலே (கருவாடு இல்லை....) குட்டி ஆமை
கொஞ்சம் கிட்ட் பார்ப்போமா?
செல்லக்குட்டி...
கடற்பிரவேசம்
எவ்ளோ சின்னதா இருந்தாலும் தடங்கள் பதிக்காமலா?
ஒரு இரண்டு நிமிஷம் டைம் இருந்தால், இந்த குட்டி ஆமைகள் கடல் நோக்கி போனதை இந்த மூணு வீடியோ க்ளிப்ல பாருங்க... அதற்கு அப்புறம் ஆமை நடையையே நீங்க வேற மாதிரி தான் நினைப்பீங்க....
குட்டி ஆமைகளின் கடல் நோக்கி பயணம்
நான் தான் ஃபர்ஸ்ட்
ஹை..வீடு வந்துடுச்சு...
எப்படி இருக்கு? ஆயிரத்தில் ஒண்ணு தான் பிழைக்குமாம். இது இரண்டு ஆமை போட்ட முட்டைகளில் இருந்து வந்தவை. கடவுளே எல்லாம் பொழச்சு ரொம்ப நாள் வாழட்டும்!!! இதை ஒரு வேலையாகக் க்டமையுடன் செய்யும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்....
4 comments:
/கடவுளே எல்லாம் பொழச்சு ரொம்ப நாள் வாழட்டும்!!! இதை ஒரு வேலையாகக் க்டமையுடன் செய்யும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..../
பகிர்வுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
உங்க பதிவை என் குழந்தைகளோடும் பகிர்கிறேன்...
நல்ல காரியம் செய்கிறீர்கள், நல்லா இருங்க! மனமார்ந்த வாழ்த்துகள்!
super video. rasichu paartheen aamai nadaiyai.
Oh.. Super Amudha.. I have also been to Turtle walk on a full moon day. One of my lovely and never forgettable experience.
Happy to see you were having similar likings. :)
Post a Comment