என் மேகம் ???

Thursday, January 20, 2011

என்னைப் பெற்ற மகளே!!!

பிறந்த நாள் வரும்
அவளுக்கு முன்னும்
எனக்கு அதன் பின்னும்

என்னைவிட சின்னவள் நீ
கன்னம் குழிய
சிரிக்கிறாள் மகள்

அன்பு பொழிந்து
அணைத்துக் கொள்ளும்
கோபம் மறந்து
கட்டிக் கொள்ளும்

கள்ளமற்ற உன்
குழந்தை மனம் முன்
சிறுத்து நிற்கும்
என் மனம்

நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன்
நான் சின்னவள்தான்...

என்னைப் பெற்ற மகளே!!!

9 comments:

தமிழ் அமுதன் said...

///நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன்
நான் சின்னவள்தான்...///


அருமை...வாழ்த்துகள்...!

பின்னோக்கி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Philosophy Prabhakaran said...

நெகிழ்வான கவிதை...

Unknown said...

நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன் ...]]]

சுகமான நிதர்சணம் ...

ராமலக்ஷ்மி said...

அற்புதம்.

Chitra said...

நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன்
நான் சின்னவள்தான்...

....very nice.

சந்தனமுல்லை said...

ஆவ்வ்வ்வ்... யூத்துன்னு சொல்றதுக்கு இப்டி ஒரு வழியா! ;-)

தமிழ் said...

உண்மை தான்

வாழ்த்துகள்

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி