என் மேகம் ???

Friday, October 8, 2010

எங்க வீட்டு கொலுவிலே....




“அம்மா நம்ம வீட்ல கொலு வைப்போமா?” என்ற கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. சிறு வயதில் இந்த கேள்வி நாங்கள் கேட்ட பொழுது “அதெல்லாம் நமக்கு வழக்கமில்லை” என்ற பதில் கிடைக்கும். “அம்மா பாட்டு கத்துக்கவா; டான்ஸ் க்ளாஸ் போறேனே”.... எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் கிடைக்கும். யாருக்கு வழக்கம் என்று சொல்லிக்கொள்ள அருகிலேயே இரண்டு மாமிகள் வீடு உண்டு. போய் தெரிந்த இரண்டு பாடல்கள் பாடி சுண்டலோ பொரியோ வாங்கி வருவோம்.

“ஹிந்து, க்றிஸ்டியண்ஸ் முஸ்லீம்-னா என்னம்மா? அவங்க என்ன பேசுவாங்க... ஹிந்தியா, தமிழா, இங்கிலீஷா?”. இந்த கேள்விகளுக்கே மதத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாகி விட்டது, இதில் எதற்கு பண்டிகைகளுக்கு ஜாதியை இழுத்துக் கொண்டு என்று, “கொலு வச்சா தினம் சுண்டல் செஞ்சு பூஜை பண்ணனும், அம்மாவுக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. முடியாதுடா...” என்று தாஜா செய்ய ஆரம்பித்தேன். ”இல்லை, எனக்கு கொலு வேணும்” என்று அடம் தொடங்கியது.

எல்லாம் இந்த பெரிய அமாவாசைக்கு விடுமுறை கொடுத்த பள்ளியால்... அன்று கொலு வைக்கப்படும் நாள் என்றும் மிஸ் சொல்லி இருந்தார்களாம். எனக்கே அன்றுதான் தெரியும் மகாளய அமாவாசைக்கு தான் நவராத்திரி துவங்கும் என்று. சிறுவயதில் எங்கள் அடம் பார்த்து அம்மா சொன்ன ஐடியா தான் குழந்தைகள் வைக்கும் கொலு. வீட்டின் அருகில் காலி இடத்தை சுத்தம் செய்து, மரக்கிளைகளால் பந்தல் செய்து, செங்கல் படிகள் அமைத்து, எல்லோர் வீட்டில் இருந்தும் கொலு பொம்மைகள் கொண்டு வந்து... தினம் ஒருவர் வீட்டில் இருந்து நைவேத்தியம் வைத்து... விளக்கேற்றி என்று ஜாலியாக கொலு வைத்துள்ளோம்.

எனவே அதே முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். “சரி, இடம் தரேன், நீங்களே கொலு வைங்க... தினம் சாயங்காலம் சாமி கும்பிடணும்...சாமிக்கு பொரி, பழம்னு ஏதாவது வைக்கணும். சரியா?, என்றேன். சந்தோஷமாக கொலு தொடங்கியது. இரண்டு அட்டைப்பெட்டிகள் கொலு படிக்கு எடுத்து கொடுத்தேன். புத்தகங்கள் மூன்றாம் படியானது. நான் அலுவலகம் சென்று விட்டேன். மாலையில் அழகான கொலு வீட்டில் இருக்க, “எங்க வீட்டு கொலுவிலே...” என்று பாடல் ஆடல் என்று அமர்க்களப்படுத்தினர் குழந்தைகள்.


11 comments:

ராமலக்ஷ்மி said...

அழகு கொலு அமுதா:)! நந்தினிக்கும் யாழினிக்கும் உங்களுக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்!!!

எஸ்.கே said...

நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) உங்க அம்மா ஐடியாவும் வீட்டுக்கு ஒரு நாள் நைவேத்யமும் கூட நல்லா இருக்கே..

அண்ணாமலையான் said...

சூப்பரா இருக்கு...

கோமதி அரசு said...

ஆகா! குழந்தைகள் சேர்ந்து கொலு வைத்து ,எங்கள் வீட்டு கொலுவிலே பாடல் ,பூஜை அமர்க்களம்.


குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் மலரும் நினைவுகள் கொலுவும்
சூப்பர்.

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம், எஸ்.கே, முத்துலட்சுமி, அண்ணாமலையான்

Chitra said...

குழந்தைகள் வைத்து இருக்கும் கொலு, கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்!

அமுதா said...

நன்றி சித்ரா
நன்றி கோமதி

ஹுஸைனம்மா said...

குழந்தைகளின் ஆர்வத்துக்கு பாராட்டுகள்!! அழகாருக்கு.

Deepa said...

குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான்!
:)

மாதேவி said...

சிறுகைகளினால் தயாரான கொலு சூப்பர்.